ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

Windows -ஐ பிணையத்துடன் இணைத்தல்.

windows -ஐ பிணையத்துடன் இணைதத்து விட்டால் ஒரு கணினியில்  உள்ள எல்லா பயன்பாடுகளையும் ( application programming) பிணையத்தில் உள்ள வேறொரு கணினியின் மூலம், அந்தப்பயன்களை காணலாம் மற்றும் அதனை மாற்றி அமைக்களாம். பிணையத்தில் மூன்று வகைகள் உண்டு 1. உள்ளுா் வரம்பு பிணையம் (local area network), 2. பிராந்திய வரம்பு பிணையம் (metropolitan are network), 3. வைய வரம்பு பிணையம் (wide area network).
இந்த மூன்று வகை பிணையத்திளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வைய வரம்பு பிணைத்தினுள்ள கணினிகளின் பலனை அனுபவிக்க ஒரு கணினியை இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்புகளை கம்பி மூலம் ஏற்படுத்தலம் சில நவீன கணினிகள் கம்பியில்லா இணைப்புகளையே கொண்டுள்ளன.

•    கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.
•    இல்ல பிணையத்தில்(home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.
•    பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல். ஆகிய வற்றை பற்றி இந்த வலைதளத்தில் விரிவாகப் பார்போம்.

பிணையமாக்கள்  

    1. கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

உங்கள் கணினியில் ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் (wireless network adapter) இருந்தால், விண்டோஸ் தானாகவே உங்கள் கணினியின் வரம்பில் உள்ள எல்லா வயர்லெஸ் நெட்வொர்க்குகளையும்  கண்டறியும். நீங்கள் அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்குகள் பட்டியலையும் பார்க வேண்டும்மெனில் பிணையம் இணைத்தல் (connect to network) என்னும் மெனுவை கிலிக்செய்து பார்து கொள்ளலாம். 



விண்டோஸ் உங்கள் கணினியில் வரம்பில் உள்ள  கம்பியில்லா பிணைய இனைப்பை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அது ஒரு பின்வரும் காரணங்கள் இருக்க கூடும்:
  •   உங்கள் கணினியில் வயர்லெஸ் சுவிட்ச் நிறுத்தப்பட்டுள்ளது (turn off).
பல மொபைல் பிசிக்கள் (mobile PC)  கணினி முன் அல்லது பின் பக்கத்தில் ஒரு வயர்லெஸ் சுவிட்சை கொண்டுள்ளன. உங்கள் கணினியில்  வயர்லெஸ்  சுவிட்ச் உள்ளனவ எனப் பார்க்கவும். நீங்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்றால், wireless switch turn on ல் உள்ளன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில கணினிகள் function key யை பயன்படுத்தி கம்பியில்லா பினையத்தை switch on or off செய்ய கூடியதாக இருக்கும்.எனவே வயர்லெஸ் சுவிட்ச் இடங்களை பற்றிய விவரங்களுக்கு உங்கள் கணினியின் manual book யை பார்கவும்.

  •    உங்கள் கணினி கம்பியில்லா திசைவி (wireless router) அல்லது அணுகல் புள்ளி (wireless access point) இருந்து வெகு தொலைவில் உள்ளது.
802.11b அல்லது 802.11 திசைவிகள் (wireless routers)  மற்றும் அணுகல் புள்ளிகள் (access points), அதிகபட்ச வரம்பை வரை 150 அடி (46 மீட்டர்) உள்புறம் மற்றும் வெளிப்புறம் 300 அடி (92 மீட்டர்) வரை  தொடர்பு ஏர்படுத்தும். 802.11 திசைவிகள் மற்றும் அணுகல் புள்ளிகள், அதிகபட்ச வரம்பை 50 அடி (15 மீட்டர்) உள்புறம் மற்றும் 100 அடி (30 மீட்டர்) வெளியில் தொடர்பு ஏர்படுத்தும் . இந்த எல்லைகள் குறுக்கீ'டு இல்லாத அனுகூலமான நிலையில் பிணைய இனைப்பை செயல்பட உதவுகின்றன. உங்கள் கணினியை இந்த வரம்புக்குள் இருக்குமாறு நிறுவவேண்டும் மற்றும் திசைவி (wireless router) அல்லது அணுகல் புள்ளி (access point) முடிந்தவரை நெருக்கமாக உள்ளனவ என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் நெருக்கமாக திசைவி அல்லது அணுகல் புள்ளி பெற முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர்க்கு வெளிப்புறத்தில் ஆன்டென்னா வாங்கி நிறுவ வேண்டும். அதாவது external antenna வை உங்கள் wireless adapter ல் பெருத்தவேண்டும் அவ்வாறு செய்தால் வெளிப்புற ஆன்டென்னாவில் இருந்து அதிக தூரத்தில் இருந்து கம்பியில்லா இணைப்பு ஏற்படும் . நீங்கள் ஒரு கூடுதல் ஆண்டெனா நிறுவ முடியும் என்பதை உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் தயாரிப்பாலா் கொடுத்துள்ளார என பார்கவும்


      2. இல்ல பிணையத்தில்  (home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

  •   நான் பிணைய கோப்புறையில் (network folder) எந்த கணினிகள் (computers) அல்லது சாதனங்களை (devices) பார்க்கவில்லை.என்ற பிறட்சனை இரண்டு காரணங்களால் ஏற்படலாம்:


உங்கள் கணினி பிணைய இணைப்பில் இல்லை யெனில். நெட்வொர்க் கோப்புறை (network folder)
காலியாக தோன்றும், இந்த சிக்கலை தீர்க்க, அந்த நெட்வொர்க்கில் புதிய பிணைய இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.


பிணைய கண்டுபிடிப்பு (network discovery) உங்களை மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் இருப்பதை பார்க்க தடுக்கின்றது எனில் உங்கள் கணினியில் பிணைய கண்டுபிடிப்பு
(network discovery)  அமைப்பை turn off செய்யப்பட்டுள்ளது எனப்பொருள் ,எனவே நீங்கள் பிணைய மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் பார்க்க முடியாது. உங்கள் பிணைய கண்டுபிடிப்பு அமைப்பை (network discovery settings) மாற்ற, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் திறக்கவும் (open network and sharing center)

பிணைய கண்டுபிடிப்பு
(network discovery) ஆஃப் செய்திருந்தால், பகுதி விரிவாக்க அம்புக்குறி பொத்தானை கிளிக் செய்யவும், பிணைய கண்டுபிடிப்பு இயக்கு (Turn on network discovery) என்பதை கிளிக் செய்து, பின்னர் பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடவுச்சொல்லை தட்டச்சு  செய்து உறுதி படுத்த வேண்டும்.நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் (network and sharing center)  ஒரு மையப்படுத்தப்பட்ட இடம் வழங்குகிறது (provides a centralized location )  அதன் மூலம் நீங்கள் உள்ளூர் பகுதி நெட்வொர்க் (LAN - local area network), கம்பியில்லா அக பரப்பு நெட்வொர்க் (WLAN - wireless local area network), மெய்நிகர் தனியார் பிணையம் (VPN - virtual private network), கணினியுடன் இணைக்கப்பட்ட டயல் அப்  மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் (dial-up, and Broadband connections on your computer) போன்றவற்றை பார்க்க (to view), உருவாக்க (to create), மாற்ற( to change) முடியும். கூடுதலாக, நீங்கள் நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் முலம் (network and sharing center)  உள்ளூர் கணினி (local computers- பிணையம்யற்ற கணினி) மற்றும் பகிர்வு விருப்பங்கள்ளின் (sharing option) அமைக்கபுகளை மாற்ற (configuration change) முடியும். அதன் காரணமாக நீங்கள் பிணைய இணைப்பில் உள்ள மற்ற கணினிகளுக்கு (computers) மற்றும் சாதனங்களுக்கு (devices) கோப்புகள் (file sharing or content sharing) கிடைக்கும் அல்லது கிடைக்காது என்ற உள்ளடக்கத்தை குறிப்பிடலாம்.


  3. பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

அனைத்து கம்பிகள்  இணைக்கப்பட்டுள்ளது  என உறுதிபடுத்தவும் (எடுத்துக்காட்டாக, நேரடியாகவோ அல்லது ஒரு திசைவி மூலம் (router), உங்கள் மோடம் நல்ல நிலையில் உள்ள தொலைபேசி மூலம் இணைக்கப்படவும்)

நீங்கள் மற்றொரு கணினியில் உங்கள் கணினியை இணைக்க முயற்சிக்கும் போது, அந்த கணினி செயல்படும் நிலையில் (make sure that computer is turn on) உள்ளதா என உறுதி படுத்தவும்.

நீங்கள் புதிய மென்பொருள் நிறுவப்பட்ட பிறகு பிரச்சனை தொடங்கியது என்றால், அவைகள் மாற்றப்பட்டுள்ளனவா என்பதை உங்கள் இணைப்பு அமைப்புகளை (connection settings)  சரிபார்க்கவும்.



பிணைய இணைப்புகளை திறக்க start menu வை click செய்து control panel ஐ கிலிக் செய்யவும் பிறகு network connection ஐ கிலிக் செய்யவும் . இணைப்பில் வலது கிளிக் செய்து, பின்னர் பண்புகள் கிளிக். நீங்கள் ஒரு கணினி உரிமையாலர் என்பதை உறுதி படுத்த கடவுச்சொல்லை (username and password) கேட்கும் என்றால், கடவுச்சொல்லை தட்டச்சு செய்து உறுதி படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக