திங்கள், 6 மே, 2013

மூன்று மர்ம விசைகள்

பொதுவாக கணினியில் பயன்படுத்தப்படும் எல்லா விசைகளையும் பற்றி அறிந்திருப்பீற்கள். ஆனால் எதையும் மிச்சம் வைக்காமல் தெரிந்துகொள்ள விரும்பினால், விசைப்பலகையில் உள்ள மூன்று அதிமர்மமான விசைகளைப் பற்றி பார்ப்போம்: PRINT SCREEN, SCROLL LOCK, PAUSE/BREAK.

PRINT SCREEN (அல்லது PRT SCN):
ஆரம்ப காலத்தில் இந்த விசை நிஜமாகவே தன் பெயரில் உள்ளதைச் செய்தது — அதாவது நடப்புத் திரையில் இருக்கும் உரையை அச்சுப்பொறிக்கு அனுப்பியது. இப்போதெல்லாம் PRINT SCREEN விசை, உங்கள் திரை முழுவதையும் படம் பிடித்து ("திரைக் காட்சி") உங்கள் கணினியின் நினைவகத்தில் இருக்கும் நகலகத்திற்கு நகலெடுக்கிறது. அதிலிருந்து நீங்கள் அதை Microsoft Paint அல்லது வேறொரு நிரலில் ஒட்டலாம் (CTRL+V); விரும்பினால் அந்த நிரலிலிருந்து அந்தப் படத்தை அச்சிடவும் செய்யலாம்.

SYS RQ:
சில விசைப்பலகைகளில் அது PRINT SCREEN விசையில் இருக்கும். ஆதிகாலத்தில் SYS RQ ஒரு "system request"-ஆக (முறைமை வேண்டுகோளாக) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கட்டளை Windows -இல் செயல்படுத்தப்படவில்லை.
உதவிக்குறிப்பு•    முழுத் திரையையும் படம் பிடிப்பதற்கு பதிலாக நடப்புச் சாளரத்தை மட்டும் படம் பிடிக்க ALT+PRINT SCREEN அழுத்தவும்.

SCROLL LOCK (அல்லது SCR LK):
பெரும்பாலான நிரல்களில் SCROLL LOCK அழுத்தினால் எந்த விளைவும் இருக்காது. சில நிரல்களில் SCROLL LOCK அழுத்தினால் அம்பு விசைகளும் PAGE UP, PAGE DOWN ஆகிய விசைகளும் இயங்கும் விதம் மாறும்; இந்த விசைகளை அழுத்தினால் இடஞ்சுட்டியின் அல்லது தேர்வின் இடத்தை மாற்றாமலே ஆவணம் உருட்டப்படும். SCROLL LOCK இயக்கத்தில் இருக்கிறதா என்று காட்ட உங்கள் விசைப்பலகையில் ஒரு சிறிய விளக்கு இருக்கலாம்.

PAUSE/BREAK:  இந்த விசை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. சில பழைய நிரல்களில், இந்த விசையை அழுத்தினால் நிரல் இடைநிறுத்தப்படும், அல்லது CTRL விசையுடன் பயன்படுத்தினால் நிரலின் இயக்கம் நின்றுவிடும்.

பிற விசைகள்:
சில நவீன விசைப்பலகைகளில் குறுக்குவிசைகள் இருக்கின்றன; இவை நிரல்கள், கோப்புகள், அல்லது கட்டளைகளை ஒரு முறை அழுத்திப் பயன்படுத்த உதவும் பொத்தான்கள். வேறு சில விசைப்பலகை மாதிரிகளில் ஒலியளவு கட்டுப்பாடுகள், உருள் சக்கரம், பெரிதாக்கும் சக்கரம் போன்ற கருவிகளி இருக்கின்றன. இந்த அம்சங்களைப் பற்றிய விவரங்களை அறிய, உங்கள் விசைப்பலகையுடன் அல்லது கணினியுடன் வந்த தகவலைப் பார்க்கவும், அல்லது உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.

விசைப்பலகையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில உதவிக்குறிப்புகள்.

விசைப்பலகையை சரியாகப் பயன்படுத்தினால் உங்கள் மணிக்கட்டுகளிலும் கைகளிலும் வலியோ காயமோ ஏற்படுவதைத் தவிர்க்கலாம்; குறிப்பாக உங்கள் கணினியை நீண்ட நேரங்களுக்குப் பயன்படுத்தும்போது விசைப்பலகையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். சிக்கல்களைத் தவிர்க்க சில உதவிக்குறிப்புகள்:

•    உங்கள் விசைப்பலகையை முழங்கைக்கு நேரான உயரத்தில் வைத்திருக்கவும். உங்கள் கைகளின் மேற்பகுதி தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
•    விசைப்பலகையை உங்களுக்கு முன் மையமாக வைத்திருக்கவும். உங்கள் விசைப்பலகையில் ஒரு எண் விசைத்தளம் இருந்தால், spacebar -ஐ விசைப்பலகையின் நடுப்பகுதியாகப் பயன்படுத்தலாம்.
•    உங்கள் கைகளும் மணிக்கட்டும் விசைப்பலகைக்கு மேல் இருக்கும்படி தட்டச்சு செய்யவும்; இது தொலைவில் உள்ள விசைகளைப் பயன்படுத்த விரல்களை நீட்டுவதற்கு பதில் கைகளையே நீட்டுவதற்கு உதவும்.
•    உங்கள் உள்ளங்கையை அல்லது மணிக்கட்டை எதன் மீதும் வைக்காமல் தட்டச்சு செய்யவும். உங்கள் விசைப்பலகையில் உள்ளங்கையை வைப்பதற்குத் தனி இடம் ஒன்று இருந்தால், தட்டச்சு செய்யும்போது கிடைக்கும் இடைவேளைகளின்போது மட்டும் அதைப் பயன்படுத்தவும்.
•    தட்டச்சு செய்யும்போது விசைகளை லேசாகத் தட்டவும்; மணிக்கட்டை நேராக வைத்திருக்கவும்.
•    தட்டச்சு செய்யாதபோது உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்கவும்.
•    கணினியைப் பயன்படுத்தும்போது 15இலிருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் இடைவெளி விடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக