•
உரைச் செய்திகளை அனுப்ப, பெற. மின்னஞ்சல் முகவரி கொண்ட
யாருக்கும் நீங்கள் மின்னஞ்சல் செய்தி அனுப்பலாம். இந்தச் செய்தி, சில நொடிகளில்
அல்லது நிமிடங்களில் பெறுநரின் மின்னஞ்சல் இன்பாக்ஸைச் சென்றடைகிறது — அவர் உங்கள்
பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி, உலகின் இன்னொரு பகுதியில் இருந்தாலும்
சரி.
மின்னஞ்சல் ஓர் இருவழித் தொடர்புக் கருவி. உங்கள் மின்னஞ்சல் முகவரி
தெரிந்த யாரிடமிருந்தும் உங்களுக்குச் செய்திகள் வரலாம், பிறகு நீங்கள் அவற்றைப்
படித்துவிட்டு பதிலளிக்கலாம்.
•
கோப்புகளை அனுப்ப, பெற. ஒரு
மின்னஞ்சல் செய்தியில் உரை மட்டுமல்ல, ஆவணங்கள், படங்கள், இசை என்று எந்த வகைக்
கோப்பு வேண்டுமானாலும் அனுப்பலாம். மின்னஞ்சலில் அனுப்பப்படும் கோப்பிற்கு இணைப்பு
என்று பெயர்.
•
குழுக்களுக்குச் செய்திகள் அனுப்ப. ஒரே சமயத்தில்
பலருக்கு மின்னஞ்சல் செய்தி அனுப்ப முடியும். பெறுநர்கள் மொத்தக் குழுவிற்கும்
பதிலளித்துக் கலந்துரையாடல் நடத்தலாம்.
• செய்திகளைப்
பகிர்ந்துகொள்ள.
உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்தி வந்தால், நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு
செய்யாமலே மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
தொலைபேசியிலோ சாதாரண அஞ்சலிலோ இல்லாத ஒரு
வசதி, மின்னஞ்சலில் இருக்கிறது - சௌகரியம்: இரவோ பகலோ, எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் செய்தி அனுப்பலாம். நீங்கள் செய்தியை அனுப்பும்போது பெறுநர்கள்
தங்கள் கணினியின் முன் அமர்ந்திருக்கவில்லை அல்லது ஆன்லைனில் (இணையத்துடன்
இணைந்திருப்பது) இல்லை என்றால், அவர்கள் அடுத்த முறை மின்னஞ்சல் பார்க்கும்போது
உங்கள் செய்தி அவர்களுக்காகக் காத்திருக்கும். அவர்கள் ஆன்லைனில் இருந்தால்
உங்களுக்குச் சில நிமிடங்களில் பதில் வந்துவிடலாம்.
மின்னஞ்சல் இலவசமும் கூட.
வழக்கமான கடிதம் போல நீங்கள் அஞ்சல் தலை ஒட்டவோ கட்டணம் செலுத்தவோ தேவையில்லை -
பெறுநர் எங்கிருந்தாலும் சரி. நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கட்டணம், உங்கள் இணைய
இணைப்புக்கான கட்டணம்தான்.
மின்னஞ்சலைப் பயன்படுத்துவதற்கு
முன் நான் என்ன செய்ய வேண்டும்?
மின்னஞ்சலைப் பயன்படுத்த உங்களுக்கு
மூன்று விஷயங்கள் தேவை:
•
ஒரு இணைய இணைப்பு: உங்கள் கணினியை
இணையத்துடன் இணைக்க, நீங்கள் முதலில் ஒரு இணையச் சேவை வழங்குநரிடம் (ISP) இணைப்பு
பெற வேண்டும். ஒரு ISP உங்களுக்கு இணையத்திற்கு அணுகலை வழங்கும். பொதுவாக இதற்கு
நீங்கள் மாதக் கட்டணம் ஒன்று செலுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கு ஒரு மோடமும்
தேவை. இணையத்துடன் இணைக்க எனக்கு என்ன தேவை? என்பதைப் பார்க்கவும்
•
ஒரு
மின்னஞ்சல் நிரல் அல்லது வலைச் சேவை. Windows -இல் இருக்கும் Windows Mail என்ற
மின்னஞ்சல் நிரலைப் பயன்படுத்தலாம். உங்கள் கணினியில் வேறு எந்த மின்னஞ்சல்
நிரலையும் நிறுவிப் பயன்படுத்தலாம்.
அல்லது நீங்கள் விரும்பினால் Gmail, MSN
Hotmail, Yahoo! போன்ற இலவச வலை மின்னஞ்சல் சேவைகளில் பதிவு செய்துகொள்ளலாம்.
அஞ்சல். இந்தச் சேவைகள் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை, இணையத்துடன் இணைக்கப்பட்ட
எந்தக் கணினியிலும் ஒரு வலை உலாவியில் பார்க்க உதவுகின்றன.
•
ஒரு
மின்னஞ்சல் முகவரி. உங்கள் ISP -யிடம் அல்லது வலை மின்னஞ்சல் சேவையில் பதிவு
செய்துகொள்ளும்போது உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். ஒரு மின்னஞ்சல்
முகவரியில் பயனர் பெயர் (நீங்கள் தேர்ந்தெடுக்கும் புனைபெயர்; நிஜப் பெயராக இருக்க
அவசியமில்லை), @ சின்னம், பிறகு உங்கள் ISP அல்லது வலை மின்னஞ்சல் வழங்குநரின்
பெயர் — உதாரணமாக, someone@example.com.
Windows Mail -ஐ
அமைத்தல்.
உங்களுக்கு மின்னஞ்சல் முகவரியும் இணைய இணைப்பும்
கிடைத்ததும், நீங்கள் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் தயார். Windows Mail -ஐப்
பயன்படுத்த, நீங்கள் முதலில் மின்னஞ்சல் கணக்கு ஒன்றை அமைக்க வேண்டும். ஒரு
கணக்கைச் சேர்ப்பதற்கு முன், உங்கள் ISP -யிடமிருந்து நீங்கள் சில தகவல்களைப் பெற
வேண்டியிருக்கும்: உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், உங்கள் உள்வரும் மற்றும்
வெளிச்செல்லும் மின்னஞ்சல் சேவையகங்களின் பெயர்கள், மற்றும் வேறு சில தகவல்கள்.
உங்கள் மின்னஞ்சல் கணக்குத் தகவல் எங்கு இருக்கும்?.
Windows Mail -இல்
மின்னஞ்சல் கணக்கைச் சேர்க்க
1. Windows Mail -ஐ கிளிக் செய்து
திறக்கவும்.
2. கருவிகள் மெனுவில், கணக்குகள் என்பதை கிளிக்
செய்யவும்.
3. சேரி கிளிக் செய்து, மின்னஞ்சல் கணக்கு என்பதை கிளிக் செய்து,
அடுத்து என்பதை கிளிக் செய்யவும், பிறகு அடுத்து வரும் வழிமுறைகளைப்
பின்பற்றவும்.
அமைக்கும்போது, ஒரு தோற்றப் பெயரை தேர்ந்தெடுக்கும்படி
கேட்கப்படும். உங்கள் மின்னஞ்சலைப் பெறுபவர்களுக்கு உங்களுடைய இந்தப் பெயர்தான்
தெரியும்.
மின்னஞ்சல் செய்திகளைப் படித்தல்.
Windows
Mail -ஐ நீங்கள் தொடங்கும்போதும் அதற்குப் பின் 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும்
உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்க்கிறது. (இந்த இடைவேளையை மாற்ற,
புதிய மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்க்க என்பதைப் பார்க்கவும்.) உங்களுக்கு
வரும் மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில் தோன்றும். மின்னஞ்சல்களைக் கொண்ட பல்வேறு
கோப்புறைகளில் ஒன்று இன்பாக்ஸ்.
உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களின் பட்டியலைப்
பார்க்க, கோப்புறைகள் பட்டியலில் உள்ள இன்பாக்ஸ் -ஐ கிளிக் செய்யவும். உங்கள்
மின்னஞ்சல் செய்திகள், செய்திப் பட்டியலில் தோன்றும். மின்னஞ்சலை அனுப்பியது யார்,
பொருள், அது பெறப்பட்ட நேரம் ஆகியவற்றை இந்தப் பட்டியல் காண்பிக்கும்.
ஒரு
செய்தியைப் படிக்க, செய்திப் பட்டியலில் அதை கிளிக் செய்யவும். செய்தியின்
உள்ளடக்கம், செய்திப் பட்டியலுக்குக் கீழ் முன்னோட்டப் பலகத்தில் தோன்றும். அந்தச்
செய்தியைத் தனி சாளரம் ஒன்றில் படிக்க, செய்திப் பட்டியலில் அதை இரு-கிளிக்
செய்யவும்.
படத்தி்ல் உங்கள் மின்னஞ்சல் செய்திகளைப் பார்க்க இன்பாக்ஸை
கிளிக் செய்யவும் என குறிப்பிட்டுள்ளது.
ஒரு செய்திக்கு பதிலளிக்க, பதிலளி
(reply)பொத்தானை கிளிக் செய்யவும். பதிலை எப்படித் தட்டச்சு செய்து அனுப்பது என்று
தெரிந்துகொள்ள, இந்தக் கட்டுரையில் உள்ள "மின்னஞ்சல் செய்தியை உருவாக்குவதும்
அனுப்புவதும்" என்ற பகுதியைப் பார்க்கவும்.
Windows Mail -இல் மின்னஞ்சல்
செய்திகளைப் பார்க்க என்பதையும் பார்க்கவும்.
மின்னஞ்சல் செய்திகளை
உருவாக்குவதும் அனுப்புவதும்.
Windows Mail -இல் புதிய மின்னஞ்சல்
செய்தி ஒன்றை உருவாக்க, அஞ்சல் உருவாக்கு பொத்தானை கிளிக் செய்யவும். புதிய
செய்திச் சாளரம் ஒன்று திறக்கும்.
படத்தில் உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்தி மாதிரி படம்
காட்டப்பட்டுள்ளது.
Windows Mail -இலும் பெரும்பாலான மற்ற மின்னஞ்சல்
நிரல்களிலும் செய்திச் சாளரத்தை நிரப்பும் வழி இதுதான்:
1.
பெறுநர்
பெட்டியில் (to box)குறைந்தது ஒரு பெறுநரின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு
செய்யவும். அந்தச் செய்தியைப் பல பெறுநர்களுக்கு அனுப்புகிறீர்கள் என்றால்
மின்னஞ்சல் முகவரிகளுக்கு இடையில் ஒரு அரைப்புள்ளியை (;) தட்டச்சு
செய்யவும்.
நகல் பெட்டியில்(cc box) இரண்டாம் நிலை பெறுநர்களின்
மின்னஞ்சல் முகவரிகளைத் தட்டச்சு செய்யலாம். இவர்களுக்கு இந்தச் செய்தியைப் பற்றித்
தெரிய வேண்டும், ஆனால் அது தொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள
வேண்டியதில்லை. பெறுநர் பெட்டியில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் அதே செய்திதான்
இவர்களுக்கும் கிடைக்கும். இரண்டாம் நிலை பெறுநர்கள் யாரும் இல்லை என்றால் இந்தப்
பெட்டியைக் காலியாக விடுங்கள்.
2.
பொருள் பெட்டியில்(subject box),
உங்கள் செய்திக்கு ஒரு தலைப்பைத் தட்டச்சு செய்யவும்.
3. கீழுள்ள பெரிய
காலி இடத்தில் உங்கள் செய்தியைத் தட்டச்சு செய்யவும்.
செய்தியில் ஒரு கோப்பை
இணைக்க, கருவிப்பட்டியில் (மெனுப் பட்டிக்குக் கீழே இருக்கிறது) உள்ள செய்தியுடன்
கோப்பை இணை(attach file to message) என்ற பொத்தானை கிளிக் செய்யவும். கோப்பைத்
தேடி எடுத்து, அதைத் தேர்ந்தெடுத்து, திற(open) என்பதை கிளிக் செய்யவும். இணைத்த
கோப்பு(attached file) இப்போது செய்தித் தலைப்பில் உள்ள இணை பெட்டியில்
தெரியும்.
படத்தில் ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் இணைக்கப்பட்ட கோப்பு
காட்டப்பட்டுள்ளது.
வேலை முடிந்தது! செய்தியை அனுப்ப அனுப்பு பொத்தானை
கிளிக் செய்யவும். இப்போது அது இணையத்தினோடே பறந்து சென்று உங்கள் பெறுநர்களைச்
சென்றடையும்.
குறிப்பு
• உரையின் நடை, எழுத்துரு, அளவு, வண்ணம்
போன்றவற்றை மாற்ற, உரையைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு வடிவமைப்புப் பட்டியில்
(செய்திப் பகுதிக்கு மேல் இருக்கிறது) உள்ள பொத்தான்களில் தேவையானதை கிளிக்
செய்யவும்.
மின்னஞ்சல் செய்தி எழுத என்பதையும்
பார்க்கவும்.
மின்னஞ்சல் இங்கிதங்கள்.
தொலைபேசி
உரையாடலுக்கும் நேரடிப் பேச்சுக்கும் இருப்பது போல, மின்னஞ்சலுக்கும் சில
எழுதப்படாத நடத்தை விதிகள் இருக்கின்றன. இந்த விதிகள் மின்னஞ்சல் இங்கிதங்கள்
அல்லது netiquette ("Internet", "etiquette" ஆகிய சொற்களின் கலவை) என்று
அழைக்கப்படுகின்றன. உங்கள் மின்னஞ்சல்வழித் தொடர்பு சிறப்பாக அமைய, பின்வரும்
நெறிமுறைகளைப் பின்பற்றவும்:
•
நகைச்சுவை உணர்வையும் உணர்ச்சிகளையும்
கவனமாக வெளிப்படுத்தவும். மின்னஞ்சல், உணர்ச்சிகளைச் சரியாகப்
புரியவைப்பதில்லை. எனவே, நீங்கள் எழுதும் தொனியைப் பெறுநர் புரிந்துகொள்ளாமல் போக
வாய்ப்புள்ளது. குறிப்பாக, நக்கலான நகைச்சுவை ஆபத்தானது. ஏனென்றால் பெறுநர் அதில்
உள்ள நகைச்சுவையைப் புரிந்துகொள்ளாமல் எரிச்சலடையலாம். உணர்ச்சியை எடுத்துச் சொல்ல,
உணர்ச்சிக் குறிகளைப் பயன்படுத்தலாம் (இந்தக் கட்டுரையில் உள்ள "உணர்ச்சிக்
குறிகளைப் பயன்படுத்துதல்" என்ற கட்டுரையைப் பார்க்கவும்).
•
யோசிக்காமல்
அனுப்ப வேண்டாம். ஒரு மின்னஞ்சல் செய்தியை மிக வேகமாக, சுலபமாக எழுதி
அனுப்பிவிடலாம் — சமயத்தில் பிரச்சினையே அதுதான். நீங்கள் அனுப்ப விரும்பும்
செய்தியை முன்பே நன்றாக யோசித்துவைத்துக்கொள்வது நல்லது; கோபமாக இருக்கும்போது
மின்னஞ்சல் எழுதுவதையும் தவிர்க்கவும். செய்தியை அனுப்பிவிட்டால் அதற்குப் பின்
அதைத் திரும்பப் பெற முடியாது.
•
பொருள் வரியைத் தெளிவாக, சுருக்கமாக
வைத்திருக்கவும். செய்தியில் இருப்பதைச் சில வார்த்தைகளில் சுருக்கி எழுதவும்.
ஏராளமான மின்னஞ்சல் செய்திகளைப் பெறுபவர்கள் பொருள் வரியை வைத்து செய்திக்கு
முன்னுரிமை தரக்கூடும்.
•
செய்திகளைச் சுருக்கமாக வைத்திருக்கவும்.
ஒரு மின்னஞ்சல் செய்தி எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்க முடியும் என்றாலும்,
மின்னஞ்சல் துரிதமான தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
பலருக்குச் சில பத்திகளுக்கு மேல் படிக்க நேரமோ பொறுமையோ இருப்பதில்லை.
•
முழுவதுமாக CAPITAL எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டாம். முழுவதுமாகப்
பேரெழுத்தில் எழுதப்படும் வாக்கியங்களைப் பலர் "கூச்சல்" என்று கருதுகிறார்கள்; அவை
அவர்களுக்கு எரிச்சலை வரவழைக்கின்றன.
•
அதிமுக்கியமான அல்லது ரகசியமான
தகவலை கவனமாகக் கையாளவும். உங்கள் செய்தியை எந்தப் பெறுநர் வேண்டுமானாலும்
மற்றவர்களுக்கு அனுப்பலாம் — வேண்டுமென்றோ தவறுதலாகவோ இதைச் செய்யலாம்.
அது
மட்டுமின்றி, அலுவல் சார்ந்த அல்லது வர்த்தகத் தொடர்பில் எழுத்து மற்றும் இலக்கணப்
பிழைகளைத் தவிர்க்கவும். சொதப்பலாக எழுதப்பட்ட மின்னஞ்சல், அதை எழுதியவரின்
தொழில்முறை மதிப்பைக் கெடுக்கிறது. உங்கள் செய்திகளை அனுப்புவதற்கு முன் அவற்றில்
பிழைகளைத் தேடித் திருத்தவும். உங்கள் மின்னஞ்சல் நிரலில் பிழைதிருத்தி இருந்தால்
அதைப் பயன்படுத்தவும். Windows Mail செய்தியில் பிழைதிருத்த என்பதைப்
பார்க்கவும்.
உணர்ச்சிக் குறிகளைப்
பயன்படுத்துதல்.
உணர்ச்சி, நோக்கம், தொனி போன்றவற்றை வெறும் உரையை
மட்டும் பயன்படுத்தி வெளிப்படுத்துவது கடினம் என்பதால், தொடக்க கால இணையப் பயனர்கள்
உணர்ச்சிக் குறிகளை கண்டுபிடித்தார்கள். இவை முகபாவங்களைக் குறிக்கும் விசைப்பலகை
எழுத்துக்குறிச் சேர்க்கைகள். உதாரணமாக, :) என்ற உணர்ச்சிக் குறி, தலையை
இடப்பக்கமாகச் சாய்த்துப் பார்த்தால் புன்னகைக்கும் முகம் போல் தெரியும்.
உணர்ச்சிக் குறிகளுக்குச் சில உதாரணங்கள்:
உணர்ச்சிக் குறி பொருள்
:)
அல்லது :-) புன்னகைத்தல், மகிழ்ச்சி, அல்லது நகைச்சுவையாகப் பேசுகிறார்
:(
அல்லது :-( கடுப்பு அல்லது அதிருப்தி
;-) கண்ணடித்தல்
:-|
ஆர்வமின்மை அல்லது நிச்சயமின்மை
:-o ஆச்சரியம் அல்லது கவலை
:-x எதுவும்
சொல்லவில்லை
:-p நாக்கை நீட்டுதல் (பொதுவாக விளையாட்டாகத்தான்)
:-D
சிரித்தல்
தேவையற்ற மின்னஞ்சலைக் கையாளுதல்.
உங்கள்
வழக்கமான அஞ்சலில் தேவையற்ற விளம்பரங்கள், துண்டறிக்கைகள், அட்டவணைகள் ஆகியவை
வருவது போல, தேவையற்ற மின்னஞ்சல்களும் (வேண்டாத மின்னஞ்சல் என்று பரவலாக
அழைக்கப்படுகிறது) உங்கள் இன்பாக்ஸில் அடிக்கடி வரும். தேவையற்ற மின்னஞ்சலில்
விளம்பரங்கள், மோசடித் திட்டங்கள், ஆபாசம், அல்லது நிஜமான வர்த்தகச் சலுகைகள்
ஆகியவை அடங்கும். விளம்பரம் செய்பவர்களுக்குத் தேவையற்ற மின்னஞ்சலை அனுப்ப மிகக்
குறைவாகவே செலவாகும் என்பதால், தேவையற்ற மின்னஞ்சல் பெருமளவில் அனுப்பப்படுவதில்
ஆச்சரியம் இல்லை.
Windows Mail பற்றி மேலும் அறியவும்.
Windows Mail -இல், தேவையற்ற மின்னஞ்சலுக்கான வடிகட்டி ஒன்று
உள்ளது. இந்த வடிகட்டி, உங்களுக்கு அனுப்பப்படும் செய்திகளை ஆராய்ந்து,
சந்தேகத்திற்குரிய செய்திகளைத் தேவையற்ற மின்னஞ்சலுக்காவே இருக்கும் கோப்புறை
ஒன்றிற்கு நகர்த்துகிறது. இந்தக் கோப்புறையில் நீங்கள் அவற்றை எப்போது
வேண்டுமானாலும் பார்க்கலாம் அல்லது நீக்கலாம். ஒரு தேவையற்ற மின்னஞ்சல், வடிகட்டியை
மீறி உங்கள் இன்பாக்ஸுக்கு வந்துவிட்டால், இனி அந்த அனுப்புநரிடமிருந்து வரும்
செய்திகளை தானாகத் தேவையற்ற மின்னஞ்சல் கோப்புறைக்கு நகர்த்தும்படி செய்துவிடலாம்.
வேண்டாத மின்னஞ்சலையும் தேவையற்ற பிற மின்னஞ்சலையும் தடுக்க என்பதைப்
பார்க்கவும்.
தேவையற்ற மின்னஞ்சலைத் தடுக்க:
•
உங்கள்
மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் நிஜ
மின்னஞ்சல் முகவரியை செய்திக்குழுக்கள், வலைத்தளங்கள், அல்லது இணையத்தின் பிற பொது
இடங்களில் வெளியிடுவதைத் தவிர்க்கவும்.
•
உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஒரு
வலைத்தளத்திற்குக் கொடுப்பதற்கு முன், அந்தத் தளத்தின் தனியுரிமைக் கூற்றைப்
படித்து, அது உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேறு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்த
அனுமதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
•
தேவையற்ற
மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதிலளிக்காதீர்கள். அனுப்புநர் உங்கள் மின்னஞ்சல்
முகவரி செல்லுபடியாகிறது என்று தெரிந்துகொள்வார்; அதை அவர் மற்ற நிறுவனங்களுக்கும்
விற்கலாம். அதற்குப் பின் உங்களுக்குத் தேவையற்ற மின்னஞ்சல் மேலும் அதிகமாக வர
வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக