சனி, 6 ஏப்ரல், 2013

உங்கள் கணினியில் உதவி பெறுதல்

ஏதேனும் ஒரு கட்டத்தில்(at some condition), உங்களுக்குக் கணினி தொடர்பான பிரச்சினைகள்(computer related problems) ஏற்படலாம், அல்லது குழப்பமான ஒரு பணியை(confusing tasks) எதிர்கொள்ள நேரிடலாம். குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள சரியான உதவியை(right help) எங்கே பெறுவது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உதவி பெறச் சிறந்த உத்திகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Windows உதவி மற்றும் ஆதரவு - Using Windows Help and Support

உதவி மற்றும் ஆதரவு (help and support) என்பது Windows -இலேயே இருக்கும் ஓர் உதவி அமைப்பு(built-in help system). பொதுவான கேள்விகளுக்குத்(common questions) துரிதமாக பதில்(common questions) பெற, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனை(suggestions for troubleshooting) பெற, எதை எப்படிச் செய்வது என்ற வழிமுறைகளை அறிய(instructions for how to do things) இது உதவும். ஆனால் Windows -இன் அங்கமாக இல்லாத ஒரு நிரலுக்கு(the program that will not come with your window OS)அது உதவி அளிக்காது என்பதை மனதில் கொள்ளவும்; அதற்கு நீங்கள் அந்த நிரலின் உதவியைப் பார்க்க வேண்டியிருக்கும் (கீழே 'ஒரு நிரலுக்கு உதவி பெறுதல்' என்பதைப் பார்க்கவும்).

Windows உதவி மற்றும் ஆதரவைத் திறக்க தொடக்கம் என்ற பொத்தானை  கிளிக் செய்யவும், பிறகு உதவி மற்றும் ஆதரவு என்பதை கிளிக் செய்யவும்.
  • உதவியில் தேட - Search Help
மிக விரைவாக உதவி பெறுவதற்கான வழி(fastest way to get help), தேடல் பெட்டியில்(search box) ஓரிரு வார்த்தைகளைத் தட்டச்சு செய்து தேடுவது. உதாரணமாக, கம்பியில்லாப் பிணையமாக்கல்(wireless network) குறித்துத் தகவல் பெற, கம்பியில்லாப் பிணையம் என்று தட்டச்சு செய்து ENTER விசையை அழுத்தவும். அடுத்து முடிவுகளின் பட்டியல்(search result list) ஒன்று தோன்றும். அதில் மிகப் பயனுள்ள முடிவுகள் முதலில் இருக்கும்(most useful results issued on top). ஒர முடிவைப் பார்க்க அதன் தலைப்பை கிளிக் செய்யவும்.
 


நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்கிறீர்கள்(connected to the Internet) என்றால், Windows ஆன்லைன் உதவி மற்றும் ஆதரவு( Windows Online Help and Support) வலைத்தளத்தில் உள்ள தகவலும் உங்கள் தேடல்களில் சேர்க்கப்படும். முன்பே உள்ள உதவி தலைப்புகளின் புதுப்பித்த வடிவங்களும் புதிய தலைப்புகளும் இந்த வலைத்தளத்தில் இருக்கும்.
  • உதவியில் உலாவு - Browse Help
உதவி் தலைப்புகளை(Help topics) அவற்றின் பொருளின் (by subject) அடிப்படையில் உலாவலாம்(browse செய்யலாம்). அவ்வாறு செய்ய முதலில், உதவியில் உலாவு(browse help) பொத்தானை  கிளிக் செய்யவும், பிறகு அடுத்து வரும் பொருள் தலைப்புப் பட்டியலில் (subjects item list) ஒரு தலைப்பை(one topic) கிளிக் செய்யவும். பொருள் தலைப்புகளில்(in the subject topics) உதவி தலைப்புகள்(help topics) அல்லது பிற பொருள் தலைப்புகள்(other subject topics) இருக்கலாம். ஒரு உதவி தலைப்பை கிளிக் செய்து திறக்கவும்(open one help topic), அல்லது பொருள் பட்டியலில் இன்னும் ஆழமாகச் சென்று பார்க்க(to dig deeper into the subject list) வேறொரு தலைப்பை கிளிக் செய்யவும்.



  • வழிகாட்டப்பட்ட உதவி பெற - Get Guided Help

ஒரு உதவி தலைப்புக்கு(Help topic ) மேல் ஒரு நீலத் திசைகாட்டி(compass) இருந்தால் (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்), அந்தத் தலைப்பிற்கு வழிகாட்டப்பட்ட உதவி(get guided help) உள்ளது என்று பொருள். ஒரு செயலைச் செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றிப் படிப்பதற்கு பதிலாக நீங்கள் அவற்றைப் பார்க்கவே செய்யலாம்(watch and learn). மெனுக்களைத் திறத்தல்(opening menus), நிரல்களைத் தொடங்குதல்(starting programs), பொத்தான்களை கிளிக் செய்தல்(clicking buttons) போன்ற வழிமுறைகளை(those basic steps) உங்களுக்கு பதிலாக வழிகாட்டப்பட்ட உதவியே(can do guided help) செய்யும். நீங்கள் பார்த்துக் கற்றுக்கொண்டாலே போதும். அல்லது, வழிகாட்டப்பட்ட உதவி(guided help) ஒவ்வொரு வழிமுறையையும் காண்பிக்கும்; திறப்பது, தொடங்குவது, கிளிக் செய்வது ஆகியவற்றை நீங்களே செய்யலாம்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக