சனி, 6 ஏப்ரல், 2013

படங்களைப் பகிர்தல் - sharing pictures

உங்கள் டிஜிட்டல் தரவுகளைப் பகிர்ந்துகொண்டால் மற்றவர்கள் அவற்றைத் தங்கள் கணினிகளில் பார்க்க முடியும். படங்களை ஒரு வலைத்தளத்தில் அஞ்சல்செய்வது, மின்னஞ்சலில் அனுப்புவது ஆகியவை மிகப் பரவலான பகிர்வு முறைகள்.

  • படப் பகிர்வு வலைத்தளங்கள் - photo sharing websites

உங்கள் டிஜிட்டல் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவற்றை ஒரு படப் பகிர்வு வலைத்தளத்தில் பதிவேற்றுவது (upload)  ஒரு வழி. நீங்கள் அழைக்கும் நண்பர்களும் உறவினர்களும் அந்த வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் நிழற்பட ஆல்பங்களைப் பார்க்க முடியும். பெரும்பாலான படப் பகிர்வுத் தளங்கள் நீங்கள் படங்களைப் பகிர்ந்துகொள்ளும், சேமித்துவைக்கும் சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. இருந்தாலும், சில தளங்கள் அவற்றில் குறிப்பிட்ட காலத்திற்குள் படங்களின் அச்சுகளை அல்லது அன்பளிப்புகளை வாங்கவில்லை என்றால் உங்கள் படங்களை நீக்கிவிடும் என்பதை மனதில் கொள்ளவும். அந்தத் தளத்தின் கொள்கைகளைப் படித்துப் பார்க்கவும்.

  • படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்தல் - sharing pictures by e-mail

உங்கள் படங்களை மின்னஞ்சல் மூலமும் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் Windows நிழற்படத் தொகுப்பைப் பயன்படுத்திப் படங்களை ஒரு மின்னஞ்சல் செய்தியில் இணைக்கலாம். நிழற்படத் தொகுப்பு அந்தப் படங்களைத் தானாகக் குறுக்கும் (அவற்றின் கோப்பு அளவைக் குறைக்கும்). இதனால் மின்னஞ்சல், பெறுநரை மேலும் விரைவாகச் சென்றைடயும்; படங்களும் அவரது கணினியில் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்ளும். மூலப் படங்கள் பாதிக்கப்படாது.

மின்னஞ்சல் மூலம் படங்களை அனுப்ப, Windows நிழற்படத் தொகுப்பில் படங்களைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு கருவிப்பட்டியில் உள்ள மின்னஞ்சல் பொத்தானை கிளிக் செய்யவும். கோப்புகளை இணை உரையாடல் பெட்டியில் படத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும் (பொதுவாக இயல்புநிலை அளவான நடு அளவே சரியாக இருக்கும்) , பிறகு இணை என்பதை கிளிக் செய்யவும்.
Windows உங்கள் மின்னஞ்சல் நிரலில் புதிய மின்னஞ்சல் செய்தி ஒன்றைத் திறக்கும். இந்த நிரல் இயல்புநிலையாக Windows Mail -ஆக இருக்கும். (இதை மாற்ற, இயல்புநிலை மின்னஞ்சல் நிரலை மாற்ற என்பதைப் பார்க்கவும்.) நீங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் அந்தச் செய்தியில் இணைக்கப்படும்.
ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் இணைக்கப்பட்ட படம்.

படத்தை அனுப்ப, பெறுநர்களின் மின்னஞ்சல் முகவரிகள், பொருள் வரி, சுருக்கமாக ஒரு செய்தி ஆகியவற்றைத் தட்டச்சு செய்யவும். பிறகு அனுப்பு என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் தகவலுக்கு, மின்னஞ்சலுக்கு அறிமுகம், மின்னஞ்சலில் படங்களை அல்லது வீடியோக்களை அனுப்ப ஆகியவற்றைப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு
•    படங்கள் கோப்புறையிலிருந்தும் படங்களை மின்னஞ்சலில் அனுப்பலாம். நீங்கள் அனுப்ப விரும்பும் படங்களை கிளிக் செய்து, கருவிப்பட்டியில் மின்னஞ்சல் என்பதை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக