வியாழன், 30 மே, 2013

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் - மேலோட்டப் பார்வை

கணினி முதலில் ஒரு பெரிய அரையில் வைக்கும் அலவுக்கு உருவாக்கப்பட்டு பிறகு காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நமது கைக்குள் அடங்கும் அலவுக்கு தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. பழைய காலத்து கணினிகள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும் அதன் செயல் திறன் மற்றும் நினைவாற்றலில் மிக மோசமாகவே இருந்தது. எனவே சாதறன மனிதனால் அதனை இயக்கமுடியாது. அதற்கு வள்ளுனர்கள் தேவைப்பட்டார்கள் ஏன்என்றால் அந்த பழைய கணினிகளிள் மென்பொருளின் ஆதிக்கம் பிரித்தியோகமாக இல்லை. மென்பொருள் வசதி குறைவாகவும் மென்பொருளை ஏற்றுக்கொள்ளாத எந்த கணினியும் சிறந்த கணினியாக இருக்கமுடியாது.

தற்காலத்து கணினிகள் சிரியதாகவும், அதிக நினைவாற்றல் கொண்டதாகவும் உள்ளதால், ஏறாளமான மென்பொருள்களை கையாலும் தன்மையுடைதாக உள்ளன. எனவே பயனர்களுக்காக உருவாகப்பட்ட மென்பொருள் கட்டமைப்புகளை கணினியில் நிருவி,  பலத்துறைகளிள் அதன் பயன்களை அனுபவித்து வருகின்றனர். கணினி மென்பொருள்கள் சிரிய தானியங்கி கார்களில் இருந்து, வாகனங்களை கட்டுபடுத்தும் Traffic light controller, மின்சாரத்தை சேமிக்கும் inverters units, தொலைக்காட்சியின் setup box, மற்றும் தகவல் பறிமாற்றத்தை எளிது படுத்தும் கைபேசி என... எல்லா வற்றிலும் மென்பொருளின் ஆதிக்கம்  உள்ளதால் மனிதனின் செயலிலும் மாற்றங்கள் பல கண்டுவிட்டான். மென்பொருளின் உதவியால் வங்கிகணக்குகளையும் மற்றும் பண பறிவர்தனைகளையும் ஒரே ஒரு கணினியின் உதவியால் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஒரே ஒரு மனிதரால் கையாலும் நிலைக்கு கணினி மற்றும் அது சார்ந்த தகவல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது. 

தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்ப்பட்ட அபரிவிதமான அறிவியல் வளர்ச்சி... பல பிரிவுகலாக உள்ள இந்த உலகத்தை மற்றும் அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் எல்லோரும் அறிந்துக்கொள்ளும் வகையிலும், எல்லோரும் அதனை மாற்றி அமைக்கும் வகையிலும் இணையத்தின் வாயிலாக எளிதாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஒரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறியமுடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறையகளிலும் பயன்படுகிறது.


கணினி என்பதன் பொருள்

கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன; அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.

பொதுவாக கணினி  இயந்திரம் - வன்பொருள்  (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). இதுதான் உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான். மேலும் விவரங்களுக்கு கணினி செயல்படும் தத்துவம், கணினி இயக்கமுறைமை என்ற பக்கங்களை பார்க்கவும்.

கணினியின் வரலாறு

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின்  மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார்.



மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இணையம்:  இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.

கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்திப பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் ஆழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.


தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக்  காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.



திங்கள், 6 மே, 2013

மின்னஞ்சல் மற்றும் வலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில உதவிக்குறிப்புகள்.

•    மின்னஞ்சல் இணைப்புகளைத் திறக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மின்னஞ்சல் இணைப்புகள் (மின்னஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்படும் கோப்புகள்) வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம். உங்களுக்குத் தெரியாத ஒரு நபரிடமிருந்து வந்த இணைப்பை ஒருபோதும் திறக்க வேண்டாம். அனுப்புநரை உங்களுக்குத் தெரியும், ஆனால் அவரிடமிருந்து இணைப்பை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், அதைத் திறப்பதற்கு முன் அதை அவர்தான் அனுப்பினாரா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஒரு மின்னஞ்சல் செய்தியை எப்போது நம்பலாம்?, மின்னஞ்சல் வைரஸ்களைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.
•    உங்கள் தனிநபர் தகவலை கவனமாகப் பாதுகாக்கவும். ஒரு வலைத்தளம் உங்கள் கடன் அட்டை எண், வங்கி விவரங்கள், அல்லது பிற தனிநபர் தகவல்களைக் கேட்டால், உங்களுக்கு அந்த வலைத்தளத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதன் பரிமாற்ற அமைப்பு பாதுகாப்பானதுதானா என்று சரிபார்க்கவும். ஒரு வலைத்தளத்தை எப்போது நம்பலாம்? என்பதைப் பார்க்கவும்.
•    Internet Explorer -இல் உள்ள ஃபிஷிங் வடிகட்டியைப் பயன்படுத்தவும். ஃபிஷிங் என்பது மோசடி மின்னஞ்சல் செய்திகளை அல்லது வலைத்தளங்களை உருவாக்கி கணினிப் பயனர்களிடமிருந்து தனிநபர் தகவலை அல்லது நிதித் தகவலை தந்திரமாகப் பெறுதல். மோசடி மின்னஞ்சல் செய்தி அல்லது வலைத்தளம் ஒரு வங்கி, கடன் அட்டை நிறுவனம், அல்லது ஒரு பிரபல இணைய விற்பனையகம் என்பது போல நம்பகமான ஒரு மூலத்திலிருந்து வருவது போல் தெரியும். ஃபிஷிங் வடிகட்டி, ஃபிஷிங் வலைத்தளங்களைக் கண்டுபிடித்து உங்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கிறது. ஃபிஷிங் வடிகட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.
•    மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் மிகைஇணைப்புகளை கிளிக்செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மிகைஇணைப்புகள் (நீங்கள் கிளிக் செய்யும்போது வலைத்தளங்களைத் திறக்கும் இணைப்புகள்) பெருமளவில் ஃபிஷிங் மற்றும் வேவுபொருள் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை வைரஸ்களையும் பரப்பக்கூடும். நீங்கள் நம்பும் மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் இணைப்புகளை மட்டுமே கிளிக் செய்யவும்.
•    நீங்கள் நம்பும் வலைத்தளங்களிலிருந்து மட்டுமே துணைநிரல்களைநிறுவவும். ActiveX கட்டுப்பாடுகள் உள்பட வலை உலாவித் துணைநிரல்கள் கருவிப் பட்டிகள், பங்கு நிலவரம் காட்டும் நிரல்கள், வீடியோ, அசைவூட்டம் போன்றவற்றை வலைப்பக்கங்கள் காண்பிக்க வழிசெய்கின்றன. இருந்தாலும், துணைநிரல்கள் வேவுபொருட்களையும் பிற தீங்குதரும் மென்பொருட்களையும் கூட நிறுவக்கூடும். ஒரு வலைத்தளம் ஒரு துணைநிரலை நிறுவும்படி கேட்டால், நீங்கள் அதை நிறுவுவதற்கு முன் அதன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். நீங்கள் ActiveX கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டுமா?, Internet Explorer துணைநிரல்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்

Windows -க்கு Microsoft தவறாமல் அவ்வப்போது முக்கியமான புதுப்பித்தல்களை(windows updats) வழங்குகிறது. இவை உங்கள் கணினியைப் புதிய வைரஸ்கள் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். இந்தப் புதுப்பித்தல்கள் உங்களுக்கு மிக விரைவாகக் கிடைக்க, தானியங்கு புதுப்பித்தலை இயக்கவும். பிறகு நீங்கள் உங்கள் கணினியில் முக்கியமான Windows பிழைநீக்கு நிரல்கள் இல்லையோ என்று கவலைப்படத் தேவையில்லை.
புதுப்பித்தல்கள் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்போது பின்னணியில் பதிவிறக்கப்படும். புதுப்பித்தல்கள் காலை 3.00 மணிக்கு நிறுவப்படுகின்றன. நீங்கள் விரும்பினால் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு முன் உங்கள் கணினியை அணைப்பதாக இருந்தால் நீங்கள் அணைப்பதற்கு முன் புதுப்பித்தல்களை நிறுவலாம். இல்லையெனில், Windows நீங்கள் அடுத்த முறை உங்கள் கணினியைத் தொடங்கும்போது அவற்றை நிறுவும்.

தானியங்கு புதுப்பித்தலை இயக்க:
1.     Windows புதுப்பித்தலை கிளிக் செய்து திறக்கவும்.
2.    அமைப்புகளை மாற்று என்பதை கிளிக் செய்யவும்.
3.    புதுப்பித்தல்களைத் தானாக நிறுவு (பரிந்துரைக்கப்பட்டது) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
4.    பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்கள்(recamendad updates) என்பதற்குக் கீழ், புதுப்பித்தல்களைப் பதிவிறக்கும்போது, நிறுவும்போது, அல்லது அவை பற்றி எனக்குத் தெரிவிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்களையும் சேர் என்ற தேர்வுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், பிறகு சரி(ok) என்பதை கிளிக் செய்யவும்.   If you are prompted for an administrator password or confirmation, type the password or provide confirmation.
Windows தானியங்கு புதுப்பித்தலைப் புரிந்துகொள்ள என்பதையும் பார்க்கவும்.

நிலையான பயனர் கணக்கு ஒன்றைப் பயன்படுத்தவும்.
நீங்கள் உங்கள் கணினியில் உள்நுழையும்போது, Windows உங்கள் பயனர் கணக்கு என்ன வகையானது என்பதைப் பொருத்து உங்களுக்குக் குறிப்பிட்ட அளவு உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழங்குகிறது. பயனர் கணக்குகள் (user account)மூன்று வகையானவை: நிலையானவை(standard), நிர்வாகிக் கணக்குகள்(administrator), விருந்தினர்(guest) கணக்குகள்.

நிர்வாகிக் கணக்கில்(administrator account) கணினி முழுவதையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், நிலையான கணக்கு ஒன்றைப் பயன்படுத்தினால் உங்கள் கணினி மேலும் பாதுகாப்பாக இருக்கும். நிலையான கணக்கைப் பயன்படுத்தினால், நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது மற்றவர்கள் (அல்லது ஹாக்கர்கள்) உங்கள் கணினியை அணுகினால் கூட அவர்களால் கணினியின் பாதுகாப்பு அமைப்புகளைக் குலைக்கவோ மற்ற பயனர் கணக்குகளை மாற்றவோ முடியாது.
உங்கள் கணக்கு எந்த வகை என்று கண்டுபிடிக்க
•     பயனர் கணக்குகள் என்பதை கிளிக் செய்து திறக்கவும்.
கணக்கு வகை உங்கள் பெயருக்குக் கீழ் தெரியும்.

படம் பயனர் கணக்கு விவரம் பற்றி கூறுகிறது.

நீங்கள் தற்போது ஒரு நிர்வாகிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நிலையான கணக்காக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஒரு பயனரின் கணக்கு வகையை மாற்ற என்பதை கிளிக் செய்யவும்.
பயனர் கணக்குகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.


கணினியை பாதுகாக்க பாதுகாப்புச் சுவரைப் பயன்படுத்தவும்.

பாதுகாப்புச் சுவர் என்பது இணையத்திலிருந்து அல்லது ஒரு பிணையத்திலிருந்து வரும் தகவலைச் சோதித்து நிராகரிக்கும் அல்லது உங்கள்  கணினிக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள். இதன் செயல்பாடு உங்கள் பாதுகாப்புச் சுவர் அமைப்புகளைப் பொருத்து அமையும். இந்த முறையில் பாதுகாப்புச் சுவர் உங்கள் கணினியை ஹாக்கர்களும் தீங்குதரும் மென்பொருட்களும் அணுகாமல் தடுக்கிறது.
Windows பாதுகாப்புச் சுவர் Windows -க்குள் அமைக்கப்பட்டிருக்கிறது; இது தானாகவே இயக்கப்படுகிறது.

படத்தில் பாதுகாப்புச் சுவர் இயங்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.

இணையத்திலிருந்து அல்லது பிணையத்திலிருந்து தகவல் பெற வேண்டிய ஒரு நிரலை - உதாரணமாக, ஒரு துரிதச் செய்தி நிரல் அல்லது பல ஆட்டக்காரர்கள் ஆடும் பிணைய விளையாட்டு - திறக்கிறீர்கள் என்றால், அந்த இணைப்பைத் தடுக்க விரும்புகிறீர்களா அனுமதிக்க விரும்புகிறீர்களா என்று பாதுகாப்புச் சுவர் கேட்கும். நீங்கள் இணைப்பை அனுமதித்தால், Windows பாதுகாப்புச் சுவர் அதற்கு ஒரு விதிவிலக்கை உருவாக்கும். இதனால் அந்த நிரல் மீண்டும் தகவல் பெற வேண்டியிருக்கும்போது பாதுகாப்புச் சுவர் உங்களைத் தொந்தரவு செய்யாது.
பாதுகாப்புச் சுவர்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வைரஸ் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வைரஸ்கள் (viruses), நச்சுப்பெருக்கிகள்(worms), டிரோஜன்(trojan) ஹார்ஸ்கள்(horses) ஆகியவை, பாதுகாப்பற்ற கணினிகளை இணையத்தைப் பயன்படுத்தித் தாக்குவதற்கு ஹாக்கர்கள் உருவாக்கும் நிரல்கள். வைரஸ்களும் நச்சுப்பெருக்கிகளும் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு கணினியிலிரு்து கணினிக்குப் பரவக்கூடியவை; டிரோஜன் ஹார்ஸ்கள், ஸ்கிரீன் சேவர் போல் ஒழுங்கானதாகத் தெரியும் ஒரு நிரலுக்குள் மறைந்துகொண்டு கணினிக்குள் நுழைகின்றன. சேதம் ஏற்படுத்தும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் ஆகியவை உங்கள் நிலை வட்டில்(hard disk) உள்ள தகவலை அழிக்கக்கூடும் அல்லது உங்கள் கணினியை முழுவதுமாகச் செயலிழக்க வைத்துவிடக்கூடும். இன்னும் சில தீம்பொருட்கள் நேரடியாகச் சேதம் விளைவிக்காது, ஆனால் உங்கள் கணினியின் செயல்திறனையும் ஸ்திரத்தன்மையையும் கணிசமாகக் குறைத்துவிடும்.
வைரஸ் தடுப்பு நிரல்கள்(antivirus programs) உங்கள் கணினியில் இருக்கும் மின்னஞ்சலிலும் பிற கோப்புகளிலும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் உள்ளனவா என்று ஸ்கேன் செய்கின்றன. வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வைரஸ் தடுப்பு நிரல் அது உங்கள் கணினியையும் கோப்புகளையும் சேதப்படுத்துவதற்கு முன் அதை விலக்கி வைக்கிறது (தனிமைப்படுத்தி வைக்கிறது) அல்லது முற்றிலுமாக நீக்குகிறது.
Windows -இல் வைரஸ் தடுப்பு நிரல் இல்லை(windows os will not come with antivirus software package), ஆனால் உங்கள் கணினி உற்பத்தியாளர் அதை நிறுவியிருக்கக்கூடும். உங்கள் கணினியில் வைரஸ் தடுப்பு நிரல் பாதுகாப்பு இருக்கிறதா என்று கண்டறிய பாதுகாப்பு மையத்தைப் பார்க்கவும். அது இல்லை என்றால், Microsoft வைரஸ் தடுப்புக் கூட்டாளர்கள் (www.microsoft.com)  என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று ஒரு வைரஸ் தடுப்பு நிரலைக் கண்டுபிடிக்கவும்.
ஒவ்வொரு நாளும் புதிய வைரஸ்கள் அடையாளம் காணப்படுவதால், தானாகப் புதுப்பித்துக்கொள்ளும் திறனுள்ள வைரஸ் தடுப்பு நிரல்(antivirus software) ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வைரஸ் தடுப்பு மென்பொருள் புதுப்பிக்கப்படும்போது அது தான் சோதிக்க வேண்டிய வைரஸ்களின் பட்டியலில் புதிய வைரஸ்களைச் சேர்க்கிறது. இது உங்கள் கணினி மீது புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படாமல் தடுக்கிறது. வைரஸ் பட்டியல் பழையதாகிவிட்டால் உங்கள் கணினி புதிய அபாயங்களுக்கு இலக்காகக்கூடும். வழக்கமாகப் புதுப்பித்தல்களுக்கு வருடாந்தர சந்தா கட்டணம் ஒன்று செலுத்த வேண்டியிருக்கும். தவறாமல் புதுப்பித்தல்களைப் பெற சந்தாவைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

எச்சரிக்கை:   நீங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் கணினியைத் தீங்குதரும் மென்பொருட்கள் சேதப்படுத்தலாம். உங்கள் கணினி மூலம் மற்ற கணினிகளுக்கு வைரஸ்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது.
வைரஸ்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வேவுபொருள் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வேவுபொருள்(spyware) என்பது ஒரு வகைத் தீம்பொருள். இது பொதுவாக உங்களிடம் முறையாக அனுமதி பெறாமலே விளம்பரங்களைக் காண்பிக்கக்கூடும், உங்களைப் பற்றித் தகவல் சேகரிக்கக்கூடும், அல்லது உங்கள் கணினியில் அமைப்புகளை மாற்றக்கூடும். உதாரணமாக, வேவுபொருட்கள்(spyware) உங்கள் வலை உலாவியில் தேவையற்ற கருவிப்பட்டிகள், இணைப்புகள், அல்லது பிடித்தவையை நிறுவலாம், உங்கள் இயல்புநிலை முகப்புப் பக்கத்தை மாற்றலாம், அல்லது அடிக்கடி விழிதிரை விளம்பரங்களைக் காண்பிக்கலாம். சில வேவுபொருட்கள் நீங்கள் கண்டுபிடிக்கும் வகையில் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது; ஆனால் நீங்கள் பார்க்கும் வலைத்தளங்கள் அல்லது நீங்கள் தட்டச்சு செய்யும் உரை போன்ற முக்கியமான தகவல்களை அவை ரகசியமாகச் சேகரிக்கும். பெரும்பாலான வேவுபொருட்கள் நீங்கள் பதிவிறக்கும் இலவச (free downladed software) மூலம் நிறுவப்படுகின்றன, ஆனால் சில சமயங்களில் ஒரு வலைத்தளத்திற்குச் சென்றாலே வேவுபொருட்கள் நிறுவப்பட்டுவிடுகின்றன.

உங்கள் கணினியை வேவுபொருட்கள் தாக்காமல் இருக்க, வேவுபொருள் தடுப்பு நிரல் (anti spyware) ஒன்றைப் பயன்படுத்தவும். Windows -இன் vista பதிப்பில்  Windows Defender என்ற வேவுபொருள் தடுப்பு நிரல் ஒன்று உள்ளது. இது இயல்புநிலையாக  இயக்கப்படுகிறது. உங்கள் கணினியில் வேவுபொருட்கள் நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்போது Windows Defender உங்களை எச்சரிக்கிறது. அது உங்கள் கணினியில் வேவுபொருட்கள் உள்ளனவா என்று பார்த்து அகற்றவும் செய்யும்.
ஒவ்வொரு நாளும் புதிய வேவுபொருட்கள் தோன்றுவதால், மிகச் சமீபத்திய வேவுபொருள் அபாயங்களைக் கண்டுபிடிக்கவும் பாதுகாத்துக்கொள்ளவும் Windows Defender தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் Windows -ஐப் புதுப்பிக்கும்போதெல்லாம் தேவையெனில் Windows Defender -உம் புதுப்பிக்கப்படும். மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைப் பெற, Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்களை நிறுவும்படி அமைக்கவும் (கீழே பார்க்கவும்).
வேவுபொருள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், Windows Defender -ஐப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் பார்க்கவும்.


கணினியில் உள்ள நிழற்படங்களை கையாலுதல்


கணினியில் நிழற்படங்களை கையாளுதல் மிகஎளிது. நாம் நம் கணினியில் உள்ள நிழற்பட தொகுப்புகளை கண்கானிக்கும் நிரலை தெளிவாக சிக்கள்கல் இல்லாமல் பயன்படுத்தும்போது நமது தரவுகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நாம் நினைக்கும் வண்னம் கணினியில் செயல்படும்.
  • ஒரு படத்தைச் சுழற்ற -  rotate a picture

நிழற்படத் தொகுப்பில் செங்குத்தான படங்கள் பக்கவாட்டாகத் திரும்பியது போல் தெரியலாம். இந்தப் படங்களை சரியான திசையில் வைக்க இடஞ்சுழியாகச் சுற்று (rotate left) என்ற பொத்தானை  அல்லது வலஞ்சுழியாகச் சுற்று (rotate right) பொத்தானை  கிளிக் செய்யவும்.
மேல் உள்ள படத்தில் நிழற்படம் சுழற்றப்பட்டுள்ளது,சிறுஉருவம் சுழற்றுவதற்கு முன்பும் (இடது) சுழற்றியதற்குப் பின்பும் (வலது)

  • ஒரு படத்தை முழு அளவில் பார்க்க - view a picture at a full size

நிழற்படத் தொகுப்பு சாளரத்தைப் (picture gallery window) நிரப்பும் அளவிற்கு (full size) ஒரு படத்தைப் பார்க்க, படத்தை இரு-கிளிக் செய்யவும். சாளரத்தின் வலப்பக்கத்தில் உள்ள தகவல் பலகம், படத்தைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும். இது படத்திற்குக் குறிக்குழுக்களைச் சேர்க்கவும் உதவும் (கீழே "படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்க" என்பதைப் பார்க்கவும்).

படத்தை முடிந்த அளவு பெரிதாகப் பார்க்க, நிழற்படத் தொகுப்பின் சாளரத்தைப் பெரிதாக்கவும். தகவல் பலகத்தை மூடுவதற்கு அதன் மேற்பக்க மூலையில் உள்ள மூடு பொத்தானை கிளிக் செய்யவும்.

படத்தில் ஒரு பகுதியை மட்டும் பெரிதாக்கிப் பார்க்க, பெரிதாக்கு பொத்தானை கிளிக் செய்து நகர்வுகோலை மேலே நகர்த்தவும். பெரிதாக்கியதும், கைவடிவக் குறிப்பானை  படத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இழுத்து படத்தை நகர்த்திப் பார்க்கலாம். சாதாரணக் காட்சிக்குத் திரும்ப, சாளரத்திற்குப் பொருத்து (fit to window) என்ற பொத்தானை  கிளிக் செய்யவும்.
முழு அளவுப் படம் (இடது); பெரிதாக்கப்பட்ட படம் (வலது)

சிறுஉருவங்கள் காட்சிக்குத் திரும்ப, படத்தொகுப்புக்குத் திரும்பு (back to gallery) என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்கள் படங்களின் ஸ்லைடு காட்சியைப் பார்க்க -  see a slide show of your picture

உங்கள் டிஜிட்டல் படங்களை, தானாக இயங்கும் ஒரு முழுத் திரை ஸ்லைடு காட்சியாகப் பார்க்கலாம். அசைவூட்டமும் பிற காட்சி விளைவுகளும் (animation and other visual effects) அடங்கிய பல விதமான ஸ்லைடு காட்சி கருப்பொருள்களிலிருந்தும் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் சில கருப்பொருள்கள் (themes) ஒரே சமயத்தில் பல படங்களைத் திரையில் காண்பிக்கும்; உதாரணம் கீழே.
ஒரு ஸ்லைடு காட்சியைத் தொடங்க, நீங்கள் விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு நிழற்படத் தொகுப்பின் அடிப்பக்கம் உள்ள ஸ்லைடு காட்சி பொத்தானை (slide show button) கிளிக் செய்யவும். நீங்கள் எந்தப் படத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், தற்போது தெரியும் எல்லாக் காட்சிகளையும் ஸ்லைடு காட்சி எடுத்துக்கொள்ளும்.
ஒரு ஸ்லைடு காட்சி நடந்துகொண்டிருக்கும்போது நீங்கள் அதை இடைநிறுத்தலாம், அதன் வேகத்தை மாற்றலாம், முன்னே அல்லது பின்னே செல்லலாம், படங்கள் தற்போக்கில் (random rang) காண்பிக்கப்பட வேண்டுமா தொடர்வரிசையில் (sequence range) காண்பிக்கப்பட வேண்டுமா என்றும் தேர்வு செய்யலாம். ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளைப் பார்க்க, சுட்டியைத் திரையின் அடிப்பகுதிக்குக் கொண்டுசெல்லவும். கட்டுப்பாடுகள் தெரியவில்லை என்றால், ஸ்லைடு காட்சி மீது வலது கிளிக் செய்யவும். இது ஒரு மெனுவைக் காட்டும்

ஒரு ஸ்லைடு காட்சியை முடிக்க, ESC விசையை அழுத்தவும் அல்லது ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளில் வெளியேறு என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்புகள்
•    ஸ்லைடு காட்சிக்கான கருப்பொருள்களைப் (themes) பார்க்க, Windows அனுபவ அடைவின் (windows experience index) வரைவியல் வகையில் (graphics category) குறைந்தது 3.0 வகை (version) ஆவது உங்கள் கணினியில் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, Windows அனுபவ அடைவு என்பது என்ன? என்பதைப் பார்க்கவும்
•    குறிப்பிட்ட சில கருப்பொருள்கள் Windows Vista Home Premium, Windows Vista Ultimate ஆகிய பதிப்புகளில் மட்டுமே உள்ளன.

படங்களை அச்சிடுதல் - Printing picture.

இந்தப் பகுதி, முக்கியமான மூன்று அச்சிடும் முறைகளை விளக்குகிறது. அச்சிடுதல் குறித்துப் பொதுவான தகவல்களை அறிய, அச்சிடுதலுக்கு அறிமுகம் என்பதைப் பார்க்கவும்.

  • வீட்டிலுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்துதல் - using a home printer

உங்கள் வீட்டில் அச்சுப்பொறி இருந்தால், உங்கள் புகைப்படங்களை நீங்களே அச்சிடலாம். இங்க்ஜெட் அச்சுப்பொறிகள், மை வெப்பமாற்ற அச்சுப்பொறிகள் ஆகிய இரண்டுமே உயர்தர வண்ணப் புகைப்படங்களை அச்சிடக்கூடியவை. இதற்குச் சிறப்புத் தாள் வகை ஒன்று தேவை. பல அச்சுப்பொறிகளில் நினைவக அட்டை படிப்பிகளும் சிறிய LCD திரைகளும் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தாமலே படங்களை அச்சிடலாம்.

உங்கள் கணினியிலிருந்து படங்களைப் பல விதங்களில் அச்சிடலாம். நீங்கள் ஒரு படத்தை அச்சிடலாம், ஒரே பக்கத்தில் பல படங்களை அச்சிடலாம், அல்லது தொடர்புத் தாள் (எளிதாகப் பார்த்து அறிய உதவும் சிறுஉருவப் பட அடுக்கு) ஒன்றை அச்சிடலாம்.
Windows நிழற்படத் தொகுப்பைப் பயன்படுத்திப் படங்களை அச்சிட, நீங்கள் அச்சிட விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும். கருவிப்பட்டியில் அச்சிடு என்பதை கிளிக் செய்யவும், பிறகு அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியில், அச்சிடும் விருப்பங்களைத் தேர்வு செய்து, அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் தகவலுக்கு, படங்களை அச்சிடுதல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.

படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியின் சாளரம்

  • அச்சுகளை ஆன்லைனில் வாங்குதல் - ordering print online

வீட்டிலுள்ள அச்சுப்பொறிகள் பயன்படுத்த வசதியானவை, துரிதமாக அச்சிட உதவுபவை. ஆனால் மையும் தாளும் வாங்குவதற்குச் செலவாகும் பணத்தையும் வேலையையும் மிச்சப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், ஒரு ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவையைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்கவும். இந்தச் சேவைகள் நீங்கள் உங்கள் படங்களை ஒரு வலைத்தளத்திற்குப் பதிவேற்றும் (நகலெடுக்கும்) சேவையை வழங்குகின்றன. அங்கிருந்து நீங்கள் பல்வேறு அளவுகளில் அச்சுகளுக்கு ஆர்டர் செய்து அவற்றுக்குக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தலாம். பிறகு அச்சுகள் உங்கள் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ அஞ்சல் செய்யப்படும்.

ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரு நன்மை என்னவென்றால், அவை பல வகையான தயாரிப்புகளை வழங்குகின்றன. வழக்கமான அச்சுகள் தவிர, உங்கள் விருப்பப்படி வடிவமைக்கப்பட்ட டி-ஷர்ட்கள், வாழ்த்து அட்டைகள், நாள்காட்டிகள், கோப்பைகள், சுவரொட்டிகள், சுட்டி அட்டைகள், மற்றும் பல தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம். இவை எல்லாவற்றிலும் நீங்கள் தேர்வு செய்த படங்கள் இருக்கும். அதோடு, வழக்கமாக இந்தத் தளங்கள் படப் பகிர்வுச் சேவைகளையும் வழங்குகின்றன (மேலே "படங்களைப் பகிர்தல்" என்பதைப் பார்க்கவும்).
Windows நிழற்படத் தொகுப்பு அல்லது படங்கள் கோப்புறையிலிருந்தும் நேரடியாக அச்சுகளை ஆர்டர் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, உங்கள் படங்களின் அச்சுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய என்பதைப் பார்க்கவும்.

  • ஒரு சிறு விற்பனையாளரிடமிருந்து அச்சுகளை வாங்குதல்-getting prints form a retailer

உங்களுக்கு விரைவாக அச்சுகள் வேண்டும், ஆனால் உங்களிடம் அச்சுப்பொறி இல்லை என்றால் டிஜிட்டல் புகைப்பட அச்சிடல் சேவைகளை வழங்கும் ஒரு கடைக்கு உங்கள் கேமராவின் நினைவக அட்டையை எடுத்துச் செல்லவும். கேமரா கடைகள், பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மட்டுமின்றி சில மளிகைக் கடைகளும் மருந்தகங்களும் கூட இந்தச் சேவைகளை அளிக்கின்றன. சில கடைகளில் உள்ள சுயசேவை புகைப்பட நிலையங்கள், நீங்கள் உங்கள் படங்களைச் சில நிமிடங்களில் திருத்தவும், நுனிவெட்டவும், அச்சிடவும் உதவுகின்றன.

உங்கள் படங்களை மறுபிரதி எடுத்தல் - backing up your pictures.

நீங்கள் டிஜிட்டல் கேமரா பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் மிகச் சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் படங்கள் சேர்ந்துவிடலாம். இந்தப் படங்களில் விலைமதிப்பற்ற நினைவுகள் இருக்கின்றன; உங்கள் கணினியின் நிலை வட்டு செயலிழந்துபோனால் அவை திரும்பக் கீடைக்காது. ஆகவே, உங்கள் படங்களின் நகல்களை வேறு எங்காவது சேமித்துவைப்பது முக்கியம். நீங்கள் அவற்றைப் பதிவுசெய்யத்தக்க DVDகளில் அல்லது CDகளில், அல்லது ஒரு வெளிப்புற நிலை வட்டில் நகலெடுத்து வைக்கலாம், அல்லது இணையத்தில் உள்ள கோப்பு சேமிப்பக சேவை ஒன்றைப் பயன்படுத்தலாம்.

மூன்று மர்ம விசைகள்

பொதுவாக கணினியில் பயன்படுத்தப்படும் எல்லா விசைகளையும் பற்றி அறிந்திருப்பீற்கள். ஆனால் எதையும் மிச்சம் வைக்காமல் தெரிந்துகொள்ள விரும்பினால், விசைப்பலகையில் உள்ள மூன்று அதிமர்மமான விசைகளைப் பற்றி பார்ப்போம்: PRINT SCREEN, SCROLL LOCK, PAUSE/BREAK.

PRINT SCREEN (அல்லது PRT SCN):
ஆரம்ப காலத்தில் இந்த விசை நிஜமாகவே தன் பெயரில் உள்ளதைச் செய்தது — அதாவது நடப்புத் திரையில் இருக்கும் உரையை அச்சுப்பொறிக்கு அனுப்பியது. இப்போதெல்லாம் PRINT SCREEN விசை, உங்கள் திரை முழுவதையும் படம் பிடித்து ("திரைக் காட்சி") உங்கள் கணினியின் நினைவகத்தில் இருக்கும் நகலகத்திற்கு நகலெடுக்கிறது. அதிலிருந்து நீங்கள் அதை Microsoft Paint அல்லது வேறொரு நிரலில் ஒட்டலாம் (CTRL+V); விரும்பினால் அந்த நிரலிலிருந்து அந்தப் படத்தை அச்சிடவும் செய்யலாம்.

SYS RQ:
சில விசைப்பலகைகளில் அது PRINT SCREEN விசையில் இருக்கும். ஆதிகாலத்தில் SYS RQ ஒரு "system request"-ஆக (முறைமை வேண்டுகோளாக) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கட்டளை Windows -இல் செயல்படுத்தப்படவில்லை.
உதவிக்குறிப்பு•    முழுத் திரையையும் படம் பிடிப்பதற்கு பதிலாக நடப்புச் சாளரத்தை மட்டும் படம் பிடிக்க ALT+PRINT SCREEN அழுத்தவும்.

SCROLL LOCK (அல்லது SCR LK):
பெரும்பாலான நிரல்களில் SCROLL LOCK அழுத்தினால் எந்த விளைவும் இருக்காது. சில நிரல்களில் SCROLL LOCK அழுத்தினால் அம்பு விசைகளும் PAGE UP, PAGE DOWN ஆகிய விசைகளும் இயங்கும் விதம் மாறும்; இந்த விசைகளை அழுத்தினால் இடஞ்சுட்டியின் அல்லது தேர்வின் இடத்தை மாற்றாமலே ஆவணம் உருட்டப்படும். SCROLL LOCK இயக்கத்தில் இருக்கிறதா என்று காட்ட உங்கள் விசைப்பலகையில் ஒரு சிறிய விளக்கு இருக்கலாம்.

PAUSE/BREAK:  இந்த விசை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. சில பழைய நிரல்களில், இந்த விசையை அழுத்தினால் நிரல் இடைநிறுத்தப்படும், அல்லது CTRL விசையுடன் பயன்படுத்தினால் நிரலின் இயக்கம் நின்றுவிடும்.

பிற விசைகள்:
சில நவீன விசைப்பலகைகளில் குறுக்குவிசைகள் இருக்கின்றன; இவை நிரல்கள், கோப்புகள், அல்லது கட்டளைகளை ஒரு முறை அழுத்திப் பயன்படுத்த உதவும் பொத்தான்கள். வேறு சில விசைப்பலகை மாதிரிகளில் ஒலியளவு கட்டுப்பாடுகள், உருள் சக்கரம், பெரிதாக்கும் சக்கரம் போன்ற கருவிகளி இருக்கின்றன. இந்த அம்சங்களைப் பற்றிய விவரங்களை அறிய, உங்கள் விசைப்பலகையுடன் அல்லது கணினியுடன் வந்த தகவலைப் பார்க்கவும், அல்லது உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.

விசைப்பலகையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில உதவிக்குறிப்புகள்.

விசைப்பலகையை சரியாகப் பயன்படுத்தினால் உங்கள் மணிக்கட்டுகளிலும் கைகளிலும் வலியோ காயமோ ஏற்படுவதைத் தவிர்க்கலாம்; குறிப்பாக உங்கள் கணினியை நீண்ட நேரங்களுக்குப் பயன்படுத்தும்போது விசைப்பலகையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். சிக்கல்களைத் தவிர்க்க சில உதவிக்குறிப்புகள்:

•    உங்கள் விசைப்பலகையை முழங்கைக்கு நேரான உயரத்தில் வைத்திருக்கவும். உங்கள் கைகளின் மேற்பகுதி தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
•    விசைப்பலகையை உங்களுக்கு முன் மையமாக வைத்திருக்கவும். உங்கள் விசைப்பலகையில் ஒரு எண் விசைத்தளம் இருந்தால், spacebar -ஐ விசைப்பலகையின் நடுப்பகுதியாகப் பயன்படுத்தலாம்.
•    உங்கள் கைகளும் மணிக்கட்டும் விசைப்பலகைக்கு மேல் இருக்கும்படி தட்டச்சு செய்யவும்; இது தொலைவில் உள்ள விசைகளைப் பயன்படுத்த விரல்களை நீட்டுவதற்கு பதில் கைகளையே நீட்டுவதற்கு உதவும்.
•    உங்கள் உள்ளங்கையை அல்லது மணிக்கட்டை எதன் மீதும் வைக்காமல் தட்டச்சு செய்யவும். உங்கள் விசைப்பலகையில் உள்ளங்கையை வைப்பதற்குத் தனி இடம் ஒன்று இருந்தால், தட்டச்சு செய்யும்போது கிடைக்கும் இடைவேளைகளின்போது மட்டும் அதைப் பயன்படுத்தவும்.
•    தட்டச்சு செய்யும்போது விசைகளை லேசாகத் தட்டவும்; மணிக்கட்டை நேராக வைத்திருக்கவும்.
•    தட்டச்சு செய்யாதபோது உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்கவும்.
•    கணினியைப் பயன்படுத்தும்போது 15இலிருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் இடைவெளி விடவும்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

Windows -ஐ பிணையத்துடன் இணைத்தல்.

windows -ஐ பிணையத்துடன் இணைதத்து விட்டால் ஒரு கணினியில்  உள்ள எல்லா பயன்பாடுகளையும் ( application programming) பிணையத்தில் உள்ள வேறொரு கணினியின் மூலம், அந்தப்பயன்களை காணலாம் மற்றும் அதனை மாற்றி அமைக்களாம். பிணையத்தில் மூன்று வகைகள் உண்டு 1. உள்ளுா் வரம்பு பிணையம் (local area network), 2. பிராந்திய வரம்பு பிணையம் (metropolitan are network), 3. வைய வரம்பு பிணையம் (wide area network).
இந்த மூன்று வகை பிணையத்திளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வைய வரம்பு பிணைத்தினுள்ள கணினிகளின் பலனை அனுபவிக்க ஒரு கணினியை இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்புகளை கம்பி மூலம் ஏற்படுத்தலம் சில நவீன கணினிகள் கம்பியில்லா இணைப்புகளையே கொண்டுள்ளன.

•    கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.
•    இல்ல பிணையத்தில்(home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.
•    பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல். ஆகிய வற்றை பற்றி இந்த வலைதளத்தில் விரிவாகப் பார்போம்.

பிணையமாக்கள்  

    1. கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

உங்கள் கணினியில் ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் (wireless network adapter) இருந்தால், விண்டோஸ் தானாகவே உங்கள் கணினியின் வரம்பில் உள்ள எல்லா வயர்லெஸ் நெட்வொர்க்குகளையும்  கண்டறியும். நீங்கள் அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்குகள் பட்டியலையும் பார்க வேண்டும்மெனில் பிணையம் இணைத்தல் (connect to network) என்னும் மெனுவை கிலிக்செய்து பார்து கொள்ளலாம். 



விண்டோஸ் உங்கள் கணினியில் வரம்பில் உள்ள  கம்பியில்லா பிணைய இனைப்பை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அது ஒரு பின்வரும் காரணங்கள் இருக்க கூடும்:
  •   உங்கள் கணினியில் வயர்லெஸ் சுவிட்ச் நிறுத்தப்பட்டுள்ளது (turn off).
பல மொபைல் பிசிக்கள் (mobile PC)  கணினி முன் அல்லது பின் பக்கத்தில் ஒரு வயர்லெஸ் சுவிட்சை கொண்டுள்ளன. உங்கள் கணினியில்  வயர்லெஸ்  சுவிட்ச் உள்ளனவ எனப் பார்க்கவும். நீங்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்றால், wireless switch turn on ல் உள்ளன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில கணினிகள் function key யை பயன்படுத்தி கம்பியில்லா பினையத்தை switch on or off செய்ய கூடியதாக இருக்கும்.எனவே வயர்லெஸ் சுவிட்ச் இடங்களை பற்றிய விவரங்களுக்கு உங்கள் கணினியின் manual book யை பார்கவும்.

  •    உங்கள் கணினி கம்பியில்லா திசைவி (wireless router) அல்லது அணுகல் புள்ளி (wireless access point) இருந்து வெகு தொலைவில் உள்ளது.
802.11b அல்லது 802.11 திசைவிகள் (wireless routers)  மற்றும் அணுகல் புள்ளிகள் (access points), அதிகபட்ச வரம்பை வரை 150 அடி (46 மீட்டர்) உள்புறம் மற்றும் வெளிப்புறம் 300 அடி (92 மீட்டர்) வரை  தொடர்பு ஏர்படுத்தும். 802.11 திசைவிகள் மற்றும் அணுகல் புள்ளிகள், அதிகபட்ச வரம்பை 50 அடி (15 மீட்டர்) உள்புறம் மற்றும் 100 அடி (30 மீட்டர்) வெளியில் தொடர்பு ஏர்படுத்தும் . இந்த எல்லைகள் குறுக்கீ'டு இல்லாத அனுகூலமான நிலையில் பிணைய இனைப்பை செயல்பட உதவுகின்றன. உங்கள் கணினியை இந்த வரம்புக்குள் இருக்குமாறு நிறுவவேண்டும் மற்றும் திசைவி (wireless router) அல்லது அணுகல் புள்ளி (access point) முடிந்தவரை நெருக்கமாக உள்ளனவ என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் நெருக்கமாக திசைவி அல்லது அணுகல் புள்ளி பெற முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர்க்கு வெளிப்புறத்தில் ஆன்டென்னா வாங்கி நிறுவ வேண்டும். அதாவது external antenna வை உங்கள் wireless adapter ல் பெருத்தவேண்டும் அவ்வாறு செய்தால் வெளிப்புற ஆன்டென்னாவில் இருந்து அதிக தூரத்தில் இருந்து கம்பியில்லா இணைப்பு ஏற்படும் . நீங்கள் ஒரு கூடுதல் ஆண்டெனா நிறுவ முடியும் என்பதை உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் தயாரிப்பாலா் கொடுத்துள்ளார என பார்கவும்


      2. இல்ல பிணையத்தில்  (home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

  •   நான் பிணைய கோப்புறையில் (network folder) எந்த கணினிகள் (computers) அல்லது சாதனங்களை (devices) பார்க்கவில்லை.என்ற பிறட்சனை இரண்டு காரணங்களால் ஏற்படலாம்:


உங்கள் கணினி பிணைய இணைப்பில் இல்லை யெனில். நெட்வொர்க் கோப்புறை (network folder)
காலியாக தோன்றும், இந்த சிக்கலை தீர்க்க, அந்த நெட்வொர்க்கில் புதிய பிணைய இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.


பிணைய கண்டுபிடிப்பு (network discovery) உங்களை மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் இருப்பதை பார்க்க தடுக்கின்றது எனில் உங்கள் கணினியில் பிணைய கண்டுபிடிப்பு
(network discovery)  அமைப்பை turn off செய்யப்பட்டுள்ளது எனப்பொருள் ,எனவே நீங்கள் பிணைய மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் பார்க்க முடியாது. உங்கள் பிணைய கண்டுபிடிப்பு அமைப்பை (network discovery settings) மாற்ற, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் திறக்கவும் (open network and sharing center)

பிணைய கண்டுபிடிப்பு
(network discovery) ஆஃப் செய்திருந்தால், பகுதி விரிவாக்க அம்புக்குறி பொத்தானை கிளிக் செய்யவும், பிணைய கண்டுபிடிப்பு இயக்கு (Turn on network discovery) என்பதை கிளிக் செய்து, பின்னர் பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடவுச்சொல்லை தட்டச்சு  செய்து உறுதி படுத்த வேண்டும்.நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் (network and sharing center)  ஒரு மையப்படுத்தப்பட்ட இடம் வழங்குகிறது (provides a centralized location )  அதன் மூலம் நீங்கள் உள்ளூர் பகுதி நெட்வொர்க் (LAN - local area network), கம்பியில்லா அக பரப்பு நெட்வொர்க் (WLAN - wireless local area network), மெய்நிகர் தனியார் பிணையம் (VPN - virtual private network), கணினியுடன் இணைக்கப்பட்ட டயல் அப்  மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் (dial-up, and Broadband connections on your computer) போன்றவற்றை பார்க்க (to view), உருவாக்க (to create), மாற்ற( to change) முடியும். கூடுதலாக, நீங்கள் நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் முலம் (network and sharing center)  உள்ளூர் கணினி (local computers- பிணையம்யற்ற கணினி) மற்றும் பகிர்வு விருப்பங்கள்ளின் (sharing option) அமைக்கபுகளை மாற்ற (configuration change) முடியும். அதன் காரணமாக நீங்கள் பிணைய இணைப்பில் உள்ள மற்ற கணினிகளுக்கு (computers) மற்றும் சாதனங்களுக்கு (devices) கோப்புகள் (file sharing or content sharing) கிடைக்கும் அல்லது கிடைக்காது என்ற உள்ளடக்கத்தை குறிப்பிடலாம்.


  3. பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

அனைத்து கம்பிகள்  இணைக்கப்பட்டுள்ளது  என உறுதிபடுத்தவும் (எடுத்துக்காட்டாக, நேரடியாகவோ அல்லது ஒரு திசைவி மூலம் (router), உங்கள் மோடம் நல்ல நிலையில் உள்ள தொலைபேசி மூலம் இணைக்கப்படவும்)

நீங்கள் மற்றொரு கணினியில் உங்கள் கணினியை இணைக்க முயற்சிக்கும் போது, அந்த கணினி செயல்படும் நிலையில் (make sure that computer is turn on) உள்ளதா என உறுதி படுத்தவும்.

நீங்கள் புதிய மென்பொருள் நிறுவப்பட்ட பிறகு பிரச்சனை தொடங்கியது என்றால், அவைகள் மாற்றப்பட்டுள்ளனவா என்பதை உங்கள் இணைப்பு அமைப்புகளை (connection settings)  சரிபார்க்கவும்.



பிணைய இணைப்புகளை திறக்க start menu வை click செய்து control panel ஐ கிலிக் செய்யவும் பிறகு network connection ஐ கிலிக் செய்யவும் . இணைப்பில் வலது கிளிக் செய்து, பின்னர் பண்புகள் கிளிக். நீங்கள் ஒரு கணினி உரிமையாலர் என்பதை உறுதி படுத்த கடவுச்சொல்லை (username and password) கேட்கும் என்றால், கடவுச்சொல்லை தட்டச்சு செய்து உறுதி படுத்தவும்.

Windows ஓரப்பட்டியும் பெட்டகங்களும்.

        Windows ஓரப்பட்டி(Windows Sidebar) என்பது உங்கள் திரைப்பலகத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் நீண்ட, செங்குத்துப் பட்டி (long, vertical bar ). அதில் பெட்டகங்கள் (gadgets) என்ற சிறு நிரல்கள் (programs) இருக்கும்; இவை அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றன, அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகளை எளிதாக அணுக உதவுகின்றன. உதாரணமாக, நீங்கள் பெட்டகங்களைப் (gadgets) பயன்படுத்தி ஒரு பட ஸ்லைடு காட்சியைப் (picture slide show) பார்க்கலாம், தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவரும் தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம் (view continuously updated headlines), அல்லது தொடர்புகளைத் தேடலாம்.


ஓரப்பட்டியை ஏன் பயன்படுத்த வேண்டும்?  (Why use Sidebar?)

ஓரப்பட்டி(Sidebar), தகவல்களையும் கருவிகளையும்( information and tools ) நீங்கள் பயன்படுத்தத் தயாராக வைத்திருக்கும். உதாரணமாக, திறந்திருக்கும் நிரல்களுக்கு அருகிலேயே தலைப்புச் செய்திகளும் தெரியச் செய்யலாம் (you can display news headlines right next to your open programs). இந்த வசதி இருப்பதால், நீங்கள் பணிபுரியும்போது செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினால், அதற்காகப் பணியை நிறுத்திவிட்டு ஒரு செய்தி வலைத்தளத்திற்குச் செல்லத் தேவையில்லை.
ஓரப்பட்டியின் உதவியுடன், நீங்கள் தேர்வு செய்யும் மூலங்களிலிருந்து ( from sources ) மிகச் சமீபத்திய தலைப்புச் செய்திகளைப் (latest news headlines) பார்க்க ஊட்டத் தலைப்புச் செய்திகள் என்ற பெட்டகத்தைப் (Feed Headlines gadget) பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்தில் பணிபுரிவதை(you don't have to stop working on your document) நிறுத்தத் தேவையில்லை, ஏனென்றால் தலைப்புச் செய்திகள் எப்போதும் தெரிந்துகொண்டிருக்கும். உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புச் செய்தி ஒன்றைப் பார்த்தால் (if you see a headline that interests you), அந்தத் தலைப்புச் செய்தியை கிளிக் செய்யலாம்; உங்கள் வலை உலாவி (web browser) நேரடியாக அந்தக் கட்டுரையைத் திறக்கும்.
ஓரப்பட்டியைத் திறக்க
•     Windows ஓரப்பட்டியை (windows sidebar) கிளிக் செய்து திறக்கவும்.
ஓரப்பட்டியை (sidebar)  எல்லா நேரமும் தெரியவைக்க, நீங்கள் அதை மற்ற சாளரங்கள்(windows program screens) மறைக்காத வகையில் அமைக்க வேண்டும்.
  •    சாளரங்கள் ஓரப்பட்டியை மறைக்காமல் தடுக்க (To keep windows from covering Sidebar)
ஓரப்பட்டிக்கு நிறைய இடம் தேவை என்பதால், நீங்கள் ஒரு பெரிய அல்லது அகன்ற திரையுள்ள திரையகத்தை (wide-screen monitor ) அல்லது பல திரையகங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த விருப்பம் சிறந்த பலனைத் தரும்.
1.     control panel (கட்டுப்பாட்டு பலகம்) சென்று Windows ஓரப்பட்டி குணங்களை (windows sidebar properties) கிளிக் செய்து திறக்கவும்.
2.    ஓரப்பட்டி(sidebar) எப்போதும் மற்ற சாளரங்களுக்கு மேல் இருக்க வேண்டும் (always on top of other windows)என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
3.    சரி என்பதை கிளிக் செய்யவும்.

 
பெட்டகங்களுக்கு அறிமுகம் (Getting started with gadgets)

Windows -இல் சில பெட்டகங்கள் இருக்கின்றன (small collection of gadgets); ஆனால் அவற்றில் மிகச் சில மட்டுமே இயல்புநிலையாக ஓரப்பட்டியில் தோன்றும் (appear on Sidebar by default). பெட்டகங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று புரிந்துகொள்ள (how to use gadgets), நீங்கள் Windows -ஐ முதலில் தொடங்கும்போது பார்க்கும் மூன்று பெட்டகங்களை அலசிப் பார்ப்போம்: கடிகாரம், ஸ்லைடு காட்சி, ஊட்டத் தலைப்புச் செய்திகள் (the Clock, Slide Show, and Feed Headlines).
  • கடிகாரம் எப்படி இயங்குகிறது? (How does the Clock work?
நீங்கள் கடிகாரப் பெட்டகத்தைச் சுட்டும்போது (point to the Clock gadget), அதன் மேல் வலது மூலையில் (upper-right corner) இரண்டு பொத்தான்கள் (two buttons) தோன்றும்: மூடு என்ற பொத்தான் (Close button) — இதுதான் மேலுள்ள பொத்தான் — பிறகு விருப்பங்கள் பொத்தான் (Options button).
   
மூடு என்ற பொத்தானை (Clicking the Close button) கிளிக் செய்தால் கடிகாரம் ஓரப்பட்டியிலிருந்து அகற்றப்படும் (removes the Clock from Sidebar). மூடு பொத்தானுக்குக் கீழுள்ள பொத்தான் (button below the close button), கடிகாரத்திற்குப் பெயரிடுதல் (naming the clock), அதன் நேர மண்டலத்தை மாற்றுதல் (changing its time zone), நொடி முள்ளைக் காண்பித்தல் (showing its second hand) ஆகியவற்றுக்கான விருப்பங்களைக் காண்பிக்கும் (shows displays option).
  •  ஸ்லைடு காட்சி எப்படி இயங்குகிறது? (How does Slide Show work?) 
அடுத்து, குறிப்பானை (mouse pointer ஐ) ஸ்லைடு காட்சி பெட்டகத்தின் (Slide Show gadget) மேல் கொண்டுசெல்லவும்; இது உங்கள் கணினியில் உள்ள படங்களைத் தொடர்ச்சியான ஸ்லைடு காட்சியாகக் காட்டும்.
   
நீங்கள் ஸ்லைடு காட்சியைச் சுட்டும்போது (When your mouse point to Slide Show), மூடு (close), விருப்பங்கள் (option) ஆகிய பொத்தான்கள் (buttons ) அந்தப் பெட்டகத்தின் மேல் வலது மூலையில் தோன்றும் (upper-right corner of the gadget).
விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்தால் (clicking the Options button ) உங்கள் ஸ்லைடு காட்சியில் தெரிவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கலாம் (allows to choose which pictures appear in your slide show), ஸ்லைடு காட்சி இயங்கும் வேகத்தை (control the speed) அமைக்கலாம், படங்கள் மாறும்போது தோன்றும் விளைவை மாற்றலாம் (change the transition effect between pictures).
  •    ஊட்டத் தலைப்புச் செய்திகள் எப்படி இயங்குகிறது?  (how does feed headlines works?
RSS ஊட்டங்கள் (RSS feeds), XML ஊட்டங்கள் (XML feeds), ஒருங்கிணைந்த உள்ளடக்கம் (syndicated content), அல்லது வலை ஊட்டங்கள் (web feeds) என்று அழைக்கப்படும் ஊட்டங்களை(feed data) வழங்கும் ஒரு வலைத்தளத்திலிருந்து (website that supplies feeds) அடிக்கடி புதுப்பிக்கப்படும் தலைப்புச் செய்திகளை ஊட்டத் தலைப்புச் செய்திகள் எனும் (gadgets)பெட்டகங்கள் (Feed Headlines gadgets can display frequently updated headlines) தொடர்ந்து காண்பிக்கும். வலைத்தளங்கள் (websites) செய்திகளையும் (news) வலைப்பதிவுகளையும் (blogs) பகிர்ந்தளிக்கப் (to distribute ) பெரும்பாலும் ஊட்டங்களைப் (feeds) பயன்படுத்துகின்றன. இயல்புநிலையாக (in by default), ஊட்டத் தலைப்புச் செய்திகள் எனும் பெட்டகங்கள் (gadgets) எந்தத் தலைப்புச் செய்திகளையும் காண்பிக்காது. முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய தலைப்புச் செய்தித் தொகுதி ஒன்றைக் காண்பிக்க (To start displaying a small set of preselected headlines), தலைப்புச் செய்திகளைக் காண் என்பதை கிளிக் செய்யவேண்டும் ( click View headlines).
  
நீங்கள் ஊட்டத் தலைப்புச் செய்திகளைச் சுட்டும்போத (When you point to Feed Headlines), மூடு, விருப்பங்கள் ஆகிய பொத்தான்கள் அந்தப் பெட்டகத்தின் மேல் வலது மூலையில் தோன்றும் (the Close and Options buttons will appear near the upper-right corner of the gadget). விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்தால் (Clicking the Options button ), இருக்கும் ஊட்டங்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம் (allows you to choose from a list of available feeds). வலையிலிருந்து நீங்களே சில ஊட்டங்களைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலில் சேர்க்கலாம் (You can add to the list by choosing your own feeds from the web).
  •    Internet Explorer -ஐப் பயன்படுத்தி வலையிலிருந்து ஒரு ஊட்டத்தைத் தேர்வு செய்ய (To choose a feed from the web with Internet Explorer)
  
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (internet explorer), விண்டோஸ் operating system ல் சேர்ந்து வரும் ஒரு இணைய உலாவி (web browser), நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு வலைப்பக்கத்திலும் internet explorer ஆனது ஊட்டங்களை (webpage feeds) தெரிவிக்கின்றது.


ஒரு வலைப்பக்கத்தில்(one webpage) உள்ள ஊட்டங்களை எடுக்க உலாவுதல்(to browse) அவசியம்.


(Internet Explorer ஒவ்வொருமுறையும் பயன்படுத்தும்போது வலைப்பக்கத்தில்  ஊட்டங்கள் உள்ளனவா என அலசும். அப்படி செய்யும் போது ஊட்டங்கள் இருந்தால் internet explorer ல் உள்ள feed button சாம்பல் (gray) நிரத்தில்இருந்து orange நிரத்திர்க்கு மாறுபடும் )
 
feed button க்கு பக்கத்தில் உள்ள அம்பு குறியை களிக் செய்வும் பிறகு தோன்றும் பட்டியலில் நீங்கள் விரும்பிய ஊட்டங்களை தேர்வுசெய்து கொள்ளவும்.


பிறகு தோன்றும் உரையாடல் பெட்டியில், இந்த ஊட்டங்களுக்காக குழுசேர் (
Subscribe to this feed) என்பதை கிளிக் செய்யவும்.  
   

Windows விளையாட்டுகளை கணினியில் விளையாடுவது பற்றி விளக்கம்.

Windows -இல் சில விளையாட்டுகள் (games) இருக்கின்றனஇவற்றை ஆடி உற்சாகமூட்டிக்கொள்ளலாம். இந்தக் கட்டுரை ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது. மேலும் விரிவான உதவி பெறவிளையாட்டின் உதவி மெனுவில் உதவியைக் காண் (view help) என்பதை கிளிக் செய்யவும்.
Windows -உடன் வரும் விளையாட்டுகள்உங்கள் கணினியில் உள்ள விளையாட்டுகளுக்கான மைய இருப்பிடமான விளையாட்டுகள் கோப்புறையில் இருக்கும்.
விளையாட்டுகள் கோப்புறையைத்(Games folder) திறக்கதொடக்கம் பொத்தானை (Start button)  கிளிக் செய்துநிரல்கள்(programs) என்பதை கிளிக் செய்யவும்பிறகு விளையாட்டுகள் (games) என்பதை கிளிக் செய்யவும்பிறகு விளையாட்டுகள். கோப்புறையில் உள்ள விளையாட்டுகளில் ஒன்றைத் திறக்கஅதன் படவுருவை இரு-கிளிக் செய்யவும் (To open the Games folder, click the Start button -> click Programs ->click Games, ->and then click Games. To open one of the games in the folder, double-click its icon).

குறிப்பு
•    Windows விளையாட்டுகள் ஒரு சில Windows பதிப்புகளில் இயல்புநிலையாக நிறுவப்பட்டிருக்காது. அவற்றை நிறுவதொடக்கம் பொத்தானை (Start button ) கிளிக் செய்துஅமைப்புகள் (Settings) என்பதை கிளிக் செய்து,கட்டுப்பாட்டுப் பலகம் ( Control Panel) என்பதை கிளிக் செய்துபிறகு நிரல்கள் மற்றும் அம்சங்கள் (Programs and Features) என்பதை கிளிக் செய்யவும்பிறகு Windows அம்சங்களை இயக்கவும் அல்லது அணைக்கவும் என்பதை கிளிக் செய்யவும் (Turn Windows features on or off). Windows அம்சங்கள் உரையாடல் பெட்டியில் (Windows Features dialog box), விளையாட்டுகள் தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும் (Games check box), பிறகு சரி (OK) என்பதை கிளிக் செய்யவும். கடவுசொல்லை கேட்டால் கணினி நிர்வகிப்பாளரின் அனுமதி கோறவும்.


செஸ் டைட்டன்ஸ் (Chess Titans)

செஸ் டைட்டன்ஸ் முப்பரிமாண வரைவியலையும் அசைவூட்டத்தையும் (three-dimensional graphics and animation) சேர்த்து நாமறிந்த செஸ் விளையாட்டிற்கு உயிரூட்டுகிறது. தனிப்படுத்திக் காட்டப்படும் சதுரங்கள் நீங்கள் உங்கள் காய்களை எங்கே நகர்த்தலாம் என்று காண்பிக்கின்றன. செராமிக்பளிங்குஅல்லது மரத்தாலான போர்டைத் தேர்வு செய்யவும்போர்டை நீங்கள் விரும்பும் காட்சிக்கு சுழற்றவும்.
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: அல்லது 2
•    கடின நிலைகள்: 1 (தொடக்க நிலை) முதல் 10 (நிபுணர்) வரை
•    ஆட்ட நேரம்: 10 முதல் 60 நிமிடங்கள்


மாஜோங் டைட்டன்ஸ் (Mahjong Titans)

மாஜோங் டைட்டன்ஸ் என்பது டைல்களை வைத்து ஆடப்படும் (played with tiles) ஒரு சாலிட்டேர் விளையாட்டு (solitaire game). போர்டில் ஜோடியாக இருக்கும் டைல்களை அகற்றவும் (Remove matching pairs of tiles from the board); உங்களால் எல்லா டைல்களையும் அகற்ற முடிந்தால் நீங்கள் ஜெயித்தீர்கள்! (you win!)  எனப்பொருள். நான்கு விதமான டைல் வடிவமைப்புகள் (four different tile designs), ஆறு விதமான டைல் தளவமைப்புகள் (six different tile layouts), பல விதமாந பின்புலங்கள் (variety of backgrounds) ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இது பழங்கால மாஜோங் விளையாட்டிலிருந்து (ancient game of mahjong) மாறுபட்டதுஆனால் இதுவும் அதே போன்ற டைல்களைத்தான் பயன்படுத்துகிறது.
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: டைல் தளவமைப்புக்கேற்ப மாறும்
•    ஆட்ட நேரம்: 10 முதல் 30 நிமிடங்கள்


மைன்ஸ்வீப்பர் (Minesweeper)

மைன்ஸ்வீப்பரில்சதுரங்கள் நிரம்பிய மைதானத்தின் அடியில் மறைந்திருக்கும் எல்லா கண்ணி வெடிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சதுரத்தை கிளிக் செய்தால் அதில் என்ன இருக்கும் என்று தெரியும். சில சதுரங்களில் எண்கள் இருக்கும். அருகில் எங்கே கண்ணி வெடிகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க இவை உதவும். ஆனால் ஜாக்கிரதை — கண்ணி வெடி உள்ள ஒரு சதுரத்தை கிளிக் செய்தீர்கள் என்றால் போர்டில் இருக்கும் எல்லா கண்ணி வெடிகளும் வெடித்து ஆட்டம் முடிந்துவிடும்!
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்.



பர்பிள் ப்ளேஸ் (Purble Place)

பர்பிள் ப்ளேஸ் என்பது மூன்று விளையாட்டுகள் அடங்கிய ஒரு விளையாட்டு: காம்ஃபி கேக்ஸ் (Comfy Cakes)பர்பிள் ஷாப் (Purble Shop)பர்பிள் இணைகள் (Purble Pairs)தொடக்க நிலையில்இந்த அதிர்ஷ்ட அடிப்படையிலான ஆட்டங்கள் (whimsical games) குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்றவைஇவை நினைவுத் திறன் (in memory), ஒழுங்குவரிசையை அடையாளம் காணுதல் (pattern recognition), பகுத்தறிதல் (reasoning) ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உதவுகின்றஉயர்ந்த கடின நிலைகள்எல்லா வயது ஆட்டக்காரர்களுக்கும் சவாலாக இருக்கும்.

 i) காம்ஃபி கேக்ஸ். (Comfy Cakes)
இந்த விளையாட்டில் நீங்கள் தலைமைச் சமையல்காரர்பர்பிளின் பேக்கரியில் இருப்பீர்கள்இங்கு ஆர்டர் செய்யப்பட்ட கேக்குகளை நீங்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பேக்கரியின் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவேநீங்கள் கேக்குகளை ஆர்டர் செய்யப்பட்டபடிசரியான வடிவங்கள் (right combination of shapes), பேட்டர்கள் (batters), ஃபில்லிங் (fillings), ஐசிங் (icings), அலங்காரங்களை (decorations) ஆகியவற்றைப் பயன்படுத்தி கேக்குகளைத் தயாரிக்க வேண்டியிருக்கும். வேகமாகத் தயாரியுங்கள்ஏனென்றால் கேக்குகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்!
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்.


ii)பர்பிள் ஷாப். (Purble Shop)
இந்த விளையாட்டு உங்கள் பகுத்தறியும் திறனைச் சோதிக்கிறது (tests your powers of deduction). உங்கள் பர்பிளின் முகம் திரைக்குப் பின்னாலுள்ள மர்மமான பர்பிளுடன் பொருந்தும்படி செய்வதுதான் உங்கள் இலக்கு. அலமாரிகளிலிருந்து தலைமுடிகண்கள்மூக்குஉதடுகள் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்பிறகு உங்களிடம் எத்தனை அம்சங்கள் சரியாக இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவும்!
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்



iii) பர்பிள் இணைகள். (Purble Pairs)



இந்த விளையாட்டில்போர்டில் உள்ள படங்களில்பொருத்தமான இணைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு டைலைப் புரட்டினால் ஒரு படம் தெரியும். பிறகு அதற்கு ஜோடியான படத்தைக் கண்டுபிடிக்கவும். போர்டில் உள்ள எல்லா டைல்களையும் ஒரு பார்வை பார்க்க ஒரு "sneak peek" டோக்கனைப் பயன்படுத்தவும்.
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்

ஆவணத்தை வடிவமைத்தல் .

வடிவமைத்தல் என்பது உங்கள் ஆவணத்தில் உள்ள உரையின் தோற்றத்தையும் அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கிறது. WordPad உங்கள் ஆவணத்தில் உள்ள வடிவமைப்பை நீங்கள் எளிதாக மாற்ற உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் வெவ்வேறு எழுத்துருக்களையும் (different fonts) எழுத்துரு அளவுகளையும் (different font sizes) தேர்ந்தெடுக்கலாம், உரையை நீங்கள் விரும்பும் எந்த வண்ணத்திற்கு (color you want) வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் ஆவணத்தின் சீரமைப்பையும் (align) எளிதாக மாற்ற முடியும்.

எழுத்துரு, எழுத்துரு நடை, எழுத்துரு அளவு ஆகியவற்றை மாற்ற -To change the font, font style, or font size


1.    நீங்கள் வடிவமைப்பை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3.    எழுத்துரு பெட்டியில் (Font box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துருவைத் (font variety) தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font you want to use).
4.    எழுத்துரு நடை பெட்டியில் (Font Style box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துரு நடையைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font style you want to use).
5.    அளவு பெட்டியில் (Size box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் அளவைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு -Tip
  •    எழுத்துரு, எழுத்துரு அளவு, எழுத்துரு நடை ஆகியவற்றை மாற்ற நீங்கள் வடிவமைப்புப் பட்டியில் (format bar) உள்ள கட்டளைகளையும் (command keys) பயன்படுத்தலாம்.
வண்ணத்தை மாற்ற - To change the color
1.    நீங்கள் வண்ணத்தை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (Select the text).
2.    வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3.    வண்ணம் என்பதற்குக் கீழ் (Under Color,), நீங்கள் விரும்பும் வண்ணத்தை கிளிக் செய்யவும் (click the color that you want).
வெவ்வேறு எழுத்துருக்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆவணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்:
 

சீரமைப்பை மாற்ற - To change the alignment

உங்கள் ஆவணத்தில் உள்ள உரையை (text) (அல்லது ஆவணத்தில் உள்ள ஒரு பத்தியை (paragraph) ) இடது ஓரத்திற்கு (left margin), மையத்திற்கு (center), அல்லது வலது ஓரத்திற்குச் (right margin) சீரமைக்கலாம்.
1.    நீங்கள் சீரமைப்பை மாற்ற விரும்பும் பத்தியைத் தேர்ந்தெடுக்கவும் (select paragraph).
2.    வடிவமை மெனுவில் (format menu), பத்தி (Paragraph) என்பதை கிளிக் செய்யவும்.
3.    சீரமைப்பு பெட்டியில் (Alignment box), நீங்கள் விரும்பும் சீரமைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (click the alignment you want).
பத்திகள் வெவ்வேறு சீரமைப்புகளில் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தில் பார்க்கலாம்:
 

ஆவணத்தைச் சேமித்தல் - Saving your document

நீங்கள் உங்கள் ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது (when editing the documents) அவ்வப்போது (periodically) அதைச் சேமிப்பது (to save) நல்லது. அப்போதுதான் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் கணினி இயங்குவது நின்றுவிட்டால் கூட நீங்கள் செய்த பணி எதுவும் தொலைந்துபோகாது. ஆவணத்தைச் சேமித்தால்தான் நீங்கள் விரும்பும்போது அதில் மீண்டும் பணிபுரியவும் முடியும்.

ஆவணத்தைச் சேமிக்க - To save the document

•    கோப்பு மெனுவில் (file menu), சேமி (save) என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஆவணத்தை இதற்கு முன் சேமிக்கவில்லை எனில், ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (document name or file name, eg: schoolwork.doc ) தந்து சேமிக்க உங்கள் கணினியில் உள்ள ஓர் இருப்பிடத்தைக் (file or folder directory location) குறிப்பிடும்படி உங்களிடம் கேட்கப்படும்:
1.    இதில் சேமி பெட்டியில் (Save in box), நீங்கள் ஆவணத்தைச் சேமிக்க விரும்பும் இருப்பிடத்தை கிளிக் செய்யவும் (click the location where you want to save the document).
2.    கோப்பின் பெயர் பெட்டியில் (File name box), உங்கள் ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (type a name ) தட்டச்சு செய்யவும்.
3.    சேமி (Save) என்பதை கிளிக் செய்யவும்.

ஆவணத்தை அச்சிடுதல் Printing your document

கோப்பு மெனுவில் (File menu), அச்சிடு (Print) என்பதை கிளிக் செய்யவும். அச்சிடு உரையாடல் பெட்டியில் (Print dialog box), நீங்கள் எந்தப் பக்கங்களை அச்சிட விரும்புகிறீர்கள் (Page Range ) என்பதையும் எத்தனை நகல்கள் (Number of copies ) என்பதையும் பக்க வரம்பு பெட்டியிலும்(Page Range box) நகல்களின் எண்ணிக்கை பெட்டியிலும் (Number of copies box) குறிப்பிடவும். முடிந்ததும், அச்சிடு (Print ) என்பதை கிளிக் செய்யவும்.

WordPad -ஐப் பயன்படுத்துதல்.

Windows -இல் உள்ள ஓர் அடிப்படையான சொற்செயலி WordPad ஆகும். சொற்செயலி என்பது உரை ஆவணங்களை உருவாக்கவும் திருத்தவும் அச்சிடவும் பயன்படும் ஒரு கணினி நிரல் (word processing program). WordPad -ஐக் கொண்டு கடிதங்கள் (letters), அறிக்கைகள் (book reports), மற்றும் பல எளிய ஆவணங்களை (simple documents) நீங்கள் தட்டச்சு செய்யலாம். உரையின் தோற்றத்தை மாற்றுதல் (the text looks), வாக்கியங்களையும் பத்திகளையும் (sentences and paragraphs) துரிதமாக நகர்த்துதல், ஆவணங்களுக்குள்ளும் ஒரு ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திலும் உரையை நகலெடுத்து ஒட்டுவது (copy and paste text within and between documents) போன்ற பணிகளையும் நீங்கள் செய்யலாம்.

WordPad சாளரம் -The WordPad window

WordPad -ஐத் திறக்க, தொடக்கம் பொத்தானை (windows start menu button)  கிளிக் செய்து,  நிரல்கள் என்பதைச் சுட்டியால் குறிப்பிட்டு அதன்வழியாக  துணைக்கருவிகள் என்பவைக்கு சென்று, பிறகு WordPad -ஐ கிளிக் செய்யவும்.
 

WordPad சாளரத்தில் நான்கு முக்கியப் பகுதிகள் இருக்கின்றன:

கருவிப்பட்டி(toolbar): கருவிப்பட்டியில் சேமித்தல் (saving), அச்சிடுதல் (printing) ஆகியவை உள்பட அடிப்படையான கட்டளைகளுக்குப் (basic commands) பொத்தான்கள் இருக்கின்றன. ஒரு பொத்தான் (command button) என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள, உங்கள் சுட்டியின் குறிப்பானை (mouse pointer) அந்த பொத்தான் மேல் வைக்கவும். ஒரு பெட்டி தோன்றி அந்தப் கட்டளைப் பொத்தானின் செயல்பாட்டைக் சுருக்கமாக விளக்கும்.

வடிவமைப்புப் பட்டி (format bar): வடிவமைப்புப் பட்டியில்(format bar) உங்கள் ஆவணத்தில் இருக்கும் உரையை ( text in your document) வடிவமைக்கப்( to decorate in different format) பயன்படுத்துவதற்கான பொத்தான்கள் இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் உங்கள் உரையின்(text data) எழுத்துரு (font), வண்ணம் (color), சீரமைப்பு (alignment) ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.

அளவுகோல் (ruler): உங்கள் ஆவணத்தில் (document) உள்ள உரையின் தளவமைப்பையும் (layout) உரை வைக்கப்பட்டுள்ள ( placement of the text) இடத்தையும் அளவுகோலைப் (ruler) பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.

ஆவணப் பகுதி (document area): இங்குதான் நீங்கள் உங்கள் ஆவணத்தைத் தட்டச்சு செய்வீர்கள் (you type your document), உரையில் மாற்றங்கள் செய்வீர்கள் (make changes to the text), வடிவமைப்பைச் செயல்படுத்துவீர்கள் (apply your formatting on the document).

உரையைத் தட்டச்சு செய்தல் - typing text

நீங்கள் பணிபுரியத் தயாரானதும், WordPad -இன் ஆவணப் பகுதியில் தட்டச்சு செய்யவும். இடஞ்சுட்டி (cursor ( | ) ) என்ற மின்னும் செங்குத்துக் கோடு ஒன்று, நீங்கள் அடுத்துத் தட்டச்சு செய்யும் உரை எங்கு வரும்  (where the next text that you type will appear) என்று காண்பிக்கும். இடஞ்சுட்டியை உரைக்குள் நகர்த்த (To move the cursor within text), இடஞ்சுட்டி எங்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கு கிளிக் செய்யவும் (click where you want the cursor to appear).

தட்டச்சுப் பொறியைப் (typewriter) பயன்படுத்தும்போது அடுத்த வரியைத் தொடங்க ENTER விசையை அழுத்த வேண்டியிருக்கும்; WordPad -இல் அது தேவையில்லை. நீங்கள் ஒரு வரியைத் தட்டச்சு செய்து முடித்ததும் WordPad தானாகவே அடுத்த வரியைத் தொடங்கிவிடும். புதிய பத்தி (new paragraph) ஒன்றைத் தொடங்க விரும்பினால் ENTER விசையை (key) அழுத்தவும்.

உரையைத் தேர்ந்தெடுத்தல் - selecting the text

உங்கள் ஆவணத்தில் உள்ள உரையில் நகலெடுத்தல் (to copy), வடிவமைத்தல் (to format) போல ஏதேனும் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் உரையைத் தேர்ந்தெடுக்க (select) வேண்டும். உரையைத் தேர்ந்தெடுக்க, சுட்டியின் குறிப்பானை (mouse pointer) நீங்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்க விரும்பும் இடத்தின் இடப்பக்கத்தில் (left side of the text) வைத்துக்கொள்ளவும். குறிப்பானைச் சரியான இடத்தில் வைத்ததும், இடப்பக்கச் சுட்டிப் பொத்தானை கிளிக் செய்து அழுத்தி வைத்துக்கொண்டு, நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் உரையின் மேல் குறிப்பானை இழுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட உரை தனிப்படுத்திக் காட்டப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்து முடித்த பின், சுட்டிப் பொத்தானை விடுவிக்கவும்.


உரையை நகலெடுத்தலும் நகர்த்துதலும் - Copying and moving text

உங்கள் ஆவணத்தின் (digital document) ஒரு பகுதியில் உள்ள உரை (text) இன்னொரு பகுதியில் வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அந்த உரையை மீண்டும் தட்டச்சு செய்யாமலே அதை நகர்த்த இரண்டு வழிகள் இருக்கின்றன: நீங்கள் அதை நகலெடுத்து (to copy) வேறொரு இடத்தில் ஒட்டலாம் (past), அல்லது அதை வேறொரு இடத்திற்கு நகர்த்தலாம் (move it to another location).

 i) நீங்கள் உரையை நகலெடுக்கும்போது அது நகலகத்தில் (clipboard) வைக்கப்படும். பிறகு அதை நீங்கள் வேறு இடத்தில் ஒட்டலாம். மூல உரை (original text ) அப்படியே இருக்கும்.
 ii) நீங்கள் உரையை வேறொரு இடத்திற்கு நகர்த்தும்போது, மூல உரையானது (original text) அது முதலில் இருந்த இடத்தில் இருக்காது. உங்கள் ஆவணத்தில் இருக்கும் வாக்கியங்களையும் (sentences) பத்திகளையும் (paragraphs) மாற்றியமைக்க விரும்பினால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

உரையை நகலெடுத்து வேறொரு இடத்தில் ஒட்டுதல் - To copy text and paste it in another location

1.    நீங்கள் நகலெடுக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    திருத்து மெனுவில் (Edit menu), நகலெடு (copy) என்பதை கிளிக் செய்யவும்.
3.    நகலெடுத்த உரையை எங்கு செருக விரும்புகிறீர்களோ (want to insert the copied text) அந்த இடத்திற்குக் குறிப்பானை நகர்த்திச் செல்லவும்.
4.    திருத்து மெனுவில் (Edit menu), ஒட்டு (paste) என்பதை கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு - Tip
  •    நீங்கள் தேர்ந்தெடுத்த உரையைத் துரிதமாக நகலெடுக்க (To quickly copy ), CTRL+C அழுத்தவும். உரையைத் துரிதமாக ஒட்டுவதற்கு CTRL+V அழுத்தவும்.
உரையை வேறு இடத்திற்கு நகர்த்த - To move text to a different location

1.    நீங்கள் நகர்த்த விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    நீங்கள் தேர்ந்தெடுத்த உரையைச் சுட்டவும் (point the text), பிறகு இடது சுட்டிப் பொத்தானை கிளிக் செய்து அழுத்தி வைத்துக்கொள்ளவும் (press and hold left button of the mouse).
3.    உரை உங்கள் ஆவணத்தில் எங்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு உரையை இழுத்துச் (to drag) செல்லவும்.

உரையைச் செருவதும் நீக்குவதும் - Inserting and deleting text


உரையை எங்கு வேண்டுமானாலும் செருகுவதையும்(inserting text) நீக்குவதையும் (deleting text),  WordPad எளிதாக்குகிறது. உரையைச் செருக, அதை நீங்கள் செருக விரும்பும் இடத்தில் கிளிக் செய்து தட்டச்சு செய்யத் தொடங்கவும். உரையை நீக்க, நீங்கள் நீக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, DELETE விசையை அழுத்தவும் (press delete key).

உதவிக்குறிப்பு - Tip
•    உங்கள் ஆவணத்தில் உள்ள உரையைத் திருத்தும்போது நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால் அதன் தாக்கத்தை செயல்-தவிர்க்கலாம் (undo). நீங்கள் கடைசியாகச் செய்த செயலைச் செயல்-தவிர்க்க(undo) CTRL+Z அழுத்தவும்.