உங்கள் கணினியில் நீங்கள் செய்யும் கிட்டத்தட்ட எல்லாப் பணிகளுக்குமே
ஒரு நிரல்(program) தேவைப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு படம் வரைய (if you
draw a picture) வேண்டும் என்றால், அதற்கு வரையும் அல்லது ஓவியம்
தீட்டும்(painting program) நிரல் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். கடிதம் எழுத
வேண்டும் (to write letter) என்றால் ஒரு சொற்செயலி நிரலைப் (word processing
program) பயன்படுத்த வேண்டும். இணையத்தில் உலாவ (to browse internet), வலை உலாவி
என்ற நிரலைப் (web browser program) பயன்படுத்த வேண்டும். Windows -க்கு
ஆயிரக்கணக்கான நிரல்கள் இருக்கின்றன.
ஒரு நிரலைத் தொடங்குதல். உங்கள் கணினியில் இருக்கும் எல்லா நிரல்களுக்கும் தொடக்கம் என்ற பொத்தான்தான் வாசல்(gateway) இருக்கும். தொடக்க மெனுவைத் திறக்க, தொடக்கம் என்ற பொத்தானை கிளிக் செய்யவும். தொடக்க மெனுவின் இடது பலகத்தில் சிறு நிரல் பட்டியல் ஒன்று இருக்கும். உங்கள் வலை உலாவி, மின்னஞ்சல் நிரல், சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட நிரல்கள் ஆகியவை இதில் அடக்கம். ஒரு நிரலைத் தொடங்க, அதை கிளிக் செய்யவும். படத்தில் உள்ளவாறு இடது பலகத்தில் உள்ள ஒரு நிரலைத் தொடங்க அந்த நிரலை கிளிக் செய்யவும் நீங்கள் திறக்க விரும்பும் நிரல் அதில் தெரியவில்லை, ஆனால் உங்களுக்கு அதன் பெயர் தெரியும் என்றால், இடது பலகத்தின் அடியில் உள்ள தேடு பெட்டியில் அந்த நிரலின் பெயரின் சில எழுத்துகளை அல்லது முழுப் பெயரையும் தட்டச்சு செய்யவும். உதாரணமாக, Windows நிழற்படத் தொகுப்பைக் கண்டுபிடிக்க, தேடு பெட்டியில் நிழற்பட(photo) அல்லது தொகுப்பு(gallery) என்று தட்டச்சு செய்யவும். தேடலின் முடிவுகளை இடது பலகம் உடனே காண்பிக்கும். நிரல்கள் என்பதற்குக் கீழ், ஒரு நிரலை கிளிக் செய்து திறக்கவும். படத்தில் தொடக்க மெனுவின் இடது பலகம் உங்கள் தேடல் தொடரைக் கொண்ட நிரல்களைக் காண்பிக்கும். உங்கள் நிரல்களின் முழுப் பட்டியலையும் பார்க்க, தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து, அனைத்து நிரல்களும் என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் தகவலுக்கு, தொடக்க மெனு (மேலோட்டப் பார்வை) என்பதைப் பார்க்கவும். உதவிக்குறிப்பு • ஒரு கோப்பைத் திறந்தும் ஒரு நிரலைத் தொடங்கலாம். கோப்பைத் திறந்தால் அதனுடன் தொடர்புள்ள நிரல் தானாகத் திறக்கும். ஒரு கோப்பை அல்லது கோப்புறையைத் திறக்க என்பதைப் பார்க்கவும். நிரல்களில் கட்டளைகளைப் பயன்படுத்துதல். பெரும்பாலான நிரல்களில், அந்த நிரல்களில் பணிபுரிவதற்குப் பயன்படும் கட்டளைகள் (செயல்கள்) ஏராளமாக, சிலவற்றில் நூற்றுக்கணக்கில் கூட இருக்கும். இவற்றில் பல கட்டளைகள் மெனுக்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். ஓட்டல் மெனு போல, நிரல் மெனுக்கள் தேர்வுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. திரை ஒரு மெனுக் குவியலாகத் தெரியாமல் இருக்க, மெனுக்கள் அவற்றின் தலைப்புகளை(titles) தலைப்புப் பட்டிக்குக்( menu-bar) கீழுள்ள மெனுப் பட்டியில் கிளிக் செய்யும் வரை மறைந்திருக்கும். உதாரணமாக, Paint நிரலில் உள்ள மெனுப் பட்டியில் "படிமம்"(image) என்பதை கிளிக் செய்தால் படிம மெனு(image menu) தோன்றும். மேல் உள்ள படம் Paint நிரலில் உள்ள படிம மெனு செயல்பாட்டை காட்டுகிறது. ஒரு மெனுவில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டளைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய, அதை கிளிக் செய்யவும். சில சமயங்களில் ஓர் உரையாடல் பெட்டி தோன்றும்; அதில் நீங்கள் மேற்கொண்டு சில விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். ஒரு கட்டளை இல்லை என்றால், அதை கிளிக் செய்ய முடியாது என்றால், அது படத்தில் உள்ள நுனிவெட்டு கட்டளை (crop command) போல் சாம்பல் நிறத்தில் காட்டப்படும். கருவிப்பட்டிகள் (toolbars) அடிக்கடி பயன்படுத்தப்படும் கட்டளைகளைப் பொத்தான்களாக(command button) அல்லது படவுருக்களாக காட்சி அளிக்கின்றன. இந்தக் கட்டளைகள் வழக்கமாக நிரலின் மெனுக்களிலும் இருக்கும், ஆனால் கருவிப்பட்டிகளைப் பயன்படுத்தினால் ஒரு கட்டளையை ஒரே கிளிக்கில் தேர்வு செய்யலாம். கருவிப்பட்டிகள் பொதுவாக மெனுப் பட்டிக்குக் கீழ் இருக்கும். படத்தில் WordPad -இல் உள்ள கருவிப்பட்டிகள் காட்டப்பட்டுள்ளன. ஒரு கருவிப்பட்டியில் உள்ள பொத்தானை கிளிக் செய்தால் அதன் கட்டளை செயல்படுத்தப்படும். உதாரணமாக, WordPad -இல் சேமி பொத்தானை கிளிக் செய்தால் ஆவணம் சேமிக்கப்படும். குறிப்பிட்ட ஒரு கருவிப்பட்டி பொத்தான் என்ன செய்யும் என்று அறிய, அதைச் சுட்டவும். அந்தப் பொத்தானின் பெயர் அல்லது செயல்பாடு தெரியும்: படத்தில் உள்ளவாறு ஒரு கருவிப்பட்டி பொத்தானின் செயல்பாட்டைப் பார்க்க அதைச் சுட்டவும். கூடுதல் தகவலுக்கு, மெனுக்கள், பட்டிகள், பெட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும். |
கணினி என்பது என்ன, கணினியின் வகைகள், கணினியின் பயன்பாடுகள், மற்றும் கணினி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை பற்றி இந்த வலைத்தளம் விளக்கமாக கூறுகின்றது. அது மட்டும்யின்றி கணினியில் இயக்கமுறைமை எவ்வாறு தரவுகளை மேலான்மை செய்கின்றது என்பதை பற்றியும், பாதுகாப்பான முறையில் கணினியை எவ்வாறு இயக்குவது என்பதனை பற்றியும் இந்த வலைத்தளத்தில் தெளிவாக எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.
சனி, 6 ஏப்ரல், 2013
நிரல்களைப் பயன்படுத்துதல்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக