ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

இணையத்தில் உலாவுதல்.

இணையம் (internet) என்பது உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கணிப்பொறிகளை இணைக்கும் பிணையம் (network). சில காலத்துக்கு முன், மிகக் குறைந்த சிலரே இணையத்தைப் பற்றி அறிந்திருந்தனர். இன்று, மக்கள் கணினியைப் பயன்படுத்தும் முறையை அடியோடு மாற்றிவிட்டது. பிறருடன் தொடர்புகொள்ளவும் (communicate with others), தேவையான தகவல்களைப் பெறவும் (get the information), ஏராளமானோர் இணையத்தை அன்றாடம் பயன்படுத்துகின்றனர். இணையத்துடன் நீங்கள் இணைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு முறை இணைந்துவிட்டால், இணையம் (internet)  இல்லாமல் எப்படி வாழ்ந்தோம் என்று ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த கட்டுரையில்:
  • வலை என்றால் என்ன?
  • இணையத்தில் என்னென்ன செய்யலாம்?
  • இணையத்துடன் இணைத்தல்.
 போண்ற இணையம் சம்மந்தப்பட்ட கருத்துக்களை கிழே விளக்கமாகப் பார்ப்போம்.

வலை என்றால் என்ன? - what is the web?

இணையத்தில் பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமான (familiar- நன்கு அறிந்த)  ஒரு பகுதி வைய விரி வலைworld wide web (வழக்கமாக வலை-web என்று அழைக்கப்படுகிறது). வலை என்பது எந்த அளவிற்குப் பிரபலம் என்றால், மக்கள் பெரும்பாலும் இணையம் (INTERNET) என்பதையும் வலை (WEB) என்பதையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இணையத்தில் (internet) மின்னஞ்சல், செய்திக்குழுக்கள், கோப்பு பகிர்தல் போன்ற பிற சேவைகளும் உள்ளன. வலையைப் பயன்படுத்தாமலே (without using the web) நீங்கள் மின்னஞ்சல் செய்தி அனுப்பவும் செய்திக்குழுக்களில் பங்கேற்கவும் முடியும்.
வலையில் தகவல் கண்ணைக் கவரும் வடிவத்தில் காண்பிக்கப்படுகிறது (displays information in a colorful). தலைப்புச் செய்திகள், உரை, படங்கள் ஆகியவை ஒரே வலைப்பக்கத்தில் (அல்லது பக்கத்தில்) — ஒரு பத்திரிகையில் உள்ள பக்கத்தைப் போலவே ஒலிகளோடும் அசைவூட்டத்தோடும் இடம்பெறுகின்றன. வலைத்தளம் (அல்லது தளம்) என்பது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வலைப்பக்கங்களின் தொகுப்பு. வலையில் லட்சக்கணக்கான வலைத்தளங்களும் கோடிக்கணக்கான வலைப்பக்கங்களும் உள்ளன!
வலைப்பக்கங்கள் மிகைஇணைப்புகளால்-hyperlinks  (பொதுவாக இணைப்புகள் -links என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன) ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை உரையாகவோ படிமங்களாகவோ இருக்கலாம். நீங்கள் ஒரு பக்கத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்ததும் வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இவ்வாறு இணைப்புகள் மூலம் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்வது வலையில் உலாவுதல் (web surfing) என்றழைக்கப்படுகிறது.

இணையத்தில் என்னென்ன செய்யலாம்? - what can do on the internet?

  • தகவல்களைக் கண்டறியலாம் - Find information. வலையில் மிகப் பெரிய அளவில் தகவல்கள் உள்ளன உலகின் மாபெரும் நூலகங்களை விட அதிக தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன. உதாரணமாக, இணையத்தில் நீங்கள் செய்திக் கட்டுரைகளையும் திரைப்பட விமர்சனங்களையும் படிக்கலாம், விமானப் பயண நேரங்களை அறிந்துகொள்ளலாம், தெரு வரைபடங்களைக் காணலாம், உங்கள் நகரத்திற்கான வானிலை முன்னறிவிப்பைப் பார்க்கலாம், அல்லது குறிப்பிட்ட ஒரு உடல் நிலை பற்றி ஆராய்ச்சி செய்யலாம். அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் போன்ற தகவல் ஆதாரங்கள் இணையத்தில் பரவலாகக் கிடைக்கின்றன; வரலாற்று ஆவணங்களும் காலத்தால் அழியாத இலக்கியங்களும்தான்.
பெரும்பாலான நிறுவனங்கள், அரசு அமைப்புகள், லாப நோக்கற்ற நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் ஆகியவற்றின் வலைத்தளங்களில் அவற்றின் தயாரிப்புகள், சேவைகள், தொகுப்புகள் போன்றவை பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். தனிநபர்கள் பலரும் தமது பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் போன்றவற்றை வலைப்பதிவுகள் எனப்படும் சொந்தக் குறிப்பேடுகளை வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள்.
குறிப்பு
  •  ஆராய்ச்சி போன்றவற்றுக்கு இணையம் மிகவும் ஏற்றதாக இருந்தாலும், இணையத்திலுள்ள எல்லா தகவல்களும் நம்பகமானவை அல்ல(not all information on the web is reliable). சில வலைத்தளங்களில் உள்ள தகவல்கள்தவறாகவோ(inaccurate), பழையதாகவோ, முழுமையற்றதாகவோ(incomplete) இருக்கலாம். ஒரு தகவலை நம்புவதற்கு முன் அதுநம்பத்தகுந்த மூலத்திலிருந்து(authoritative source) வருகிறதா என்று உறுதி செய்துகொள்ளவும்; அந்தத் தகவலைமற்ற ஆதாரங்களிலும் பார்த்துச் சரிபார்த்துக்கொள்ளவும்.
  • தொடர்பு கொள்ளலாம் - Communicate. இணையத்தின் மிகப் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சல் முகவரி கொண்ட யாருக்கும் மின்னஞ்சல் செய்திகளை அனுப்ப முடியும்; அந்தச் செய்திகள் உடனடியாக அவர்களது மின்னஞ்சல் இன்பாக்ஸைச் சென்றடையும் (recipient's e‑mail inbox) அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி மின்னஞ்சல் சரியாக சென்றடையும்.  மின்னஞ்சலுக்கு அறிமுகம் என்பதைப் பார்க்கவும்.
  • உடனடி செய்திகள் (IM - Instant messaging): மூலம் இன்னொரு நபருடன் அல்லது பலர் அடங்கிய ஒரு குழுவுடன் நிகழ்நேர (real-time conversation) உரையாடல்களை நிகழ்த்தலாம். ஒரு உடனடிச் செய்தியைத் தட்டச்சு செய்து அனுப்பிய உடனே அந்த செய்தி எல்லா பங்கேற்பாளர்களுக்கும்(participants) காட்டப்படுகிறது. மின்னஞ்சல் போலன்றி, இதில் எல்லா பங்கேற்பாளர்களும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் (இணையத்துடன் இணைக்கப்பட்டு) தமது கணினிகளுக்கு முன்பாக இருக்க வேண்டும்.
  • செய்திக்குழுக்கள் (Newsgroups), வலை மன்றங்கள்(web-based forums) போன்றவற்றில், ஒரு விஷயத்தில் ஆர்வம் கொண்ட பல சமுதாய மக்களுடன் நீங்கள் உரை சார்ந்த விவாதங்களில் பங்கேற்கலாம். உதாரணமாக, ஒரு நிரலைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏதோ பிரச்சினை என்றால், அந்த நிரலின் பயனர்களுக்கான(users) விவாதக் குழு(discussion group) ஒன்றில் நீங்கள் ஒரு கேள்வியை அஞ்சல் செய்யலாம்.
  • பகிர்ந்துகொள்ளலாம் (Share). உங்கள் டிஜிட்டல் கேமராவில் இருக்கும் படங்களை ஒரு புகைப்படப் பகிர்வு வலைத்தளத்திற்கு(photo-sharing website) பதிவேற்றம் செய்யலாம்(upload). உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் அந்த வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் நிழற்பட ஆல்பங்களைப் பார்க்கலாம்(to view your photo albums).
  • ஷாப்பிங் செய்யலாம் (Shop).  வலை, உலகின் மிகப் பெரிய வணிக வளாகம்(biggest shopping mall). இங்கு நீங்கள் பெரிய சில்லறை வணிக நிறுவனங்களின்(major retailers) வலைத்தளங்களில்(websites) உலாவி(browse), புத்தகங்கள், இசை, விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், இன்னும் பலவற்றை வாங்கலாம் (பொதுவாக இதற்கு ஒரு கடன் அட்டை-credit card தேவைப்படும்). பயன்படுத்தப்பட்ட பொருட்களைக்(used items) கூட ஏல முறையில் வர்த்தகம்(auction-style bidding) செய்யும் வலைத்தளங்களில் வாங்கவும் விற்கவும்(buy and sell) முடியும்.

  • விளையாடலாம் (Play).  வலையில் நீங்கள்எல்லா வகையான விளையாட்டுகளையும் விளையாடலாம்; பல சமயங்களில் மற்றவர்களுடன்விளையாடலாம் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும். பல விளையாட்டுகள்இலவசமாகக் கிடைக்கின்றன; மற்ற விளையாட்டுகளுக்குப் பணம் செலுத்திவிட்டுப்பதிவிறக்கிக்கொள்ளலாம்(download others for a fee). அதே போல இணைய வானொலி நிகழ்ச்சிகளைக்( internet radio stations) கேட்கலாம்; திரைப்படக்காட்சித் துண்டுகளைப் பார்க்கலாம்; பாடல்கள், வீடியோக்கள் மட்டுமின்றி சிலதொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூடப் பதிவிறக்கலாம் அல்லது வாங்கலாம்.

இணையத்துடன் இணைத்தல் - connecting to the internet

உங்கள் கணினியை இணையத்துடன் இணைக்க(to connect to the internet), நீங்கள் முதலில் ஒரு இணையச் சேவை வழங்குநரிடம் (ISP internet service provider) இணைப்பு பெற வேண்டும். ISP, இணையத்திற்கு அணுகல்(access) வழங்குகிறது. பொதுவாக இதற்கு நீங்கள் மாதக் கட்டணம் ஒன்று செலுத்த வேண்டியிருக்கும். தொலைபேசி முதலான சேவைகளுக்கு செய்வதைப் போல ஒரு ISPயிடம் பதிந்துகொண்டு(sign up) ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ள(create an account) வேண்டும். உங்கள் பகுதியில் இருக்கும் ஒரு ISP -ஐக் கண்டறிய உங்கள் தொலைபேசி டைரக்டரியில் "Internet Service Providers" என்ற பகுதியின் கீழ் பார்க்கவும்.
ஒவ்வொரு ISP -யும் ஒவ்வொரு வகையான இணைப்பையும் இணைப்பு வேகத்தையும் வழங்குகிறது (different connection types and speeds). இணைப்புகளில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன:
  • அகலக்கற்றை (Broadband). அகலக்கற்றை இணைப்பு என்பது ஒரு அதிவேக இணைய இணைப்பு(high-speed Internet connection). அகலக்கற்றை இணைப்பு இருந்தால் நீங்கள் எப்போதும் இணையத்துடன் இணைந்திருப்பீர்கள்; இந்த வகை இணைப்பில் மிக வேகமாக வலைப்பக்கங்களைப் பார்க்கலாம், கோப்புகளைப் பதிவிறக்கலாம்(download files very rapidly). டிஜிட்டல் சந்தாதாரர் இணைப்பு (DSL-Digital Subscriber Line), கேபிள் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அகலக்கற்றை தொழில்நுட்பங்கள்(broadband technologies). இம்முறைகளுக்கு ஒரு DSL அல்லது கம்பி இழை மோடம்(DSL or cable modem) தேவைப்படும். இது பெரும்பாலும் உங்கள் ISP -யால் வழங்கப்படும்.
  • டயல்-அப் - Dial-up. டயல்-அப் இணைப்பு(Dial-Up Connection), ஒரு டயல்-அப் மோடமின்(Dial-Up Modem) மூலம் சாதாரணத் தொலைபேசி இணைப்பின்(Standard Telephone Line) வழியாக இணைய இணைப்பை(internet connection) ஏற்படுத்துகிறது. பெரும்பாலான கணினிகளில் டயல்-அப் மோடம்கள் முன்பே நிறுவப்பட்டிருக்கும். அகலக்கற்றையுடன் ஒப்பிடும்போது டயல்-அப் இணைப்பு மிகவும் மெதுவானது(dial-up is slower), மேலும் இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இணைப்பை உருவாக்க வேண்டும். இருந்தாலும் டயல்-அப் இணைப்பு அகலக்கற்றையைவிட மலிவு (dial-up is less expensive than broadband; சில இடங்களில் டயல்-அப் முறை பயன்படுத்தி மட்டும்தான் இணையத்துடன் இணைப்பு பெற முடிகிறது.
ஒரு ISP -யும் மோடமும் கிடைத்துவிட்டால், நீங்கள் இணையத்துடன் இணைக்கத் தயார். இணையத்துடன் இணைக்கும் வழிகாட்டி இதற்கான வழிமுறையை விளக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக