நீங்கள் கடிதம் எழுதுவதாக இருந்தாலும் சரி, எண்
தரவை(number data) உள்ளிடுவதாக இருந்தாலும் சரி, உங்கள் கணினியில் தகவலை
உள்ளிடுவதற்கான பிரதான வழி விசைப்பலகைதான் (keyboard). ஆனால் உங்கள் விசைப்பலகையால்
உங்கள் கணினியை இயக்கவும் பயன்படுத்தவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சில எளிமையான விசைப்பலகைக் கட்டளைகளை (உங்கள் கணினிக்கு நீங்கள் தரும் ஆணைகள்)
தெரிந்துகொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாகப் பணிபுரியலாம்.. இந்தக் கட்டுரை,
விசைப்பலகையை இயக்குவதை பற்றி அடிப்படைகளை விளக்கி விசைப்பலகைக் கட்டளைகளுக்கு
அறிமுகம் தருகிறது.
விசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்
விதம்.
உங்கள் விசைப்பலகையில் உள்ள விசைகளை அவற்றின் செயல்பாட்டின்
அடிப்படையில் பல குழுக்களாகப் பிரிக்கலாம்:
• தட்டச்சு (அகரஎண்) விசைகள் Typing (alphanumeric) keys: பழைய
தட்டுச்சுப் பொறியில் காணப்படும் அதே எழுத்து, எண், நிறுத்தக்குறி, சின்ன விசைகளே
இவற்றில் அடங்கும்.
• கட்டுப்பாட்டு விசைகள் control keys: இந்த விசைகள் குறிப்பிட்ட
செயல்களைச் செய்வதற்காகத் தனியாகவோ மற்ற விசைகளுடன் இணைத்தோ பயன்படுத்தப்படுகின்றன.
மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு விசைகள், CTRL, ALT, Windows
சின்ன விசை , ESC ஆகியவை.
• செயல்பாட்டு விசைகள் - Function keys: செயல்பாட்டு விசைகள்
குறிப்பிட்ட பணிகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அவை F1, F2, F3 என்று தொடங்கி
F12 வரை இருக்கின்றன. இந்த விசைகளின் செயல்பாடு, நிரலுக்கு நிரல் மாறும்.
• வழிசெலுத்து விசைகள் - Navigation keys: ஆவணங்களுக்குள் அல்லது
வலைப்பக்கங்களுக்குள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவும் உரையைத் திருத்தவும் இந்த
விசைகள் பயன்படுகின்றன. இவற்றில் அம்பு விசைகள், HOME, END, PAGE UP, PAGE DOWN,
DELETE, INSERT ஆகியவை அடங்கும்.
• எண் விசைத்தளம் - Numeric keypad: எண்களைத் துரிதமாக உள்ளிட எண்
விசைத்தளம் உதவுகிறது. இந்த விசைகள் ஒரு சாதாரண கால்குலேட்டர் போல் ஒரு தொகுதியாகக்
குழுவாக்கப்பட்டுள்ளன.
இந்த விசைகள் வழக்கமான ஒரு விசைப்பலகையில் எப்படி
அமைக்கப்பட்டுள்ளன என்று பின்வரும் படத்தில் பார்க்கலாம். உங்கள் விசைப்பலகையின்
தளவமைப்பு வேறு விதமாக இருக்கலாம்.
ஒரு விசைப்பலகையில் விசைகள் ஒழுங்கமைக்கப்படும்
விதம் படத்தில் காட்டப்பட்டுள்ளது
உரையைத் தட்டச்சு செய்தல்.
ஒரு மின்னஞ்சல் செய்தி
அல்லது உரைப் பெட்டியில் (text box) உரை என்று நீங்கள் ஒரு நிரலில் ஏதேனும்
தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும்போது ஒரு சிமிட்டும் செங்குத்துக் கோட்டை ( | )
(blinking vertical line) பார்ப்பீர்கள். இதுதான் இடஞ்சுட்டி(cursor); இது செருகு
இடம்(insertion point) என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் தட்டச்சு செய்யவிருக்கும்
உரை எங்கு தொடங்கும் என்று இது காட்டும். இடஞ்சுட்டியை நகர்த்த, நீங்கள் விரும்பும்
இடத்தில் கிளிக் செய்யலாம், அல்லது வழிசெலுத்து விசைகளைப் (navigation keys
) பயன்படுத்தி நகர்த்தலாம் (இந்தக் கட்டுரையில் "வழிசெலுத்து விசைகளைப்
பயன்படுத்துதல்" என்ற பகுதியைப் பார்க்கவும்).
தட்டச்சு விசைகளில் எழுத்துகள்
(letters), எண்கள் (numerls), நிறுத்தக் குறிகள் (punctuation marks), சின்னங்கள்
(symbols) ஆகியவை மட்டுமின்றி, SHIFT, CAPS LOCK, TAB விசை, ENTER, SPACEBAR,
BACKSPACE ஆகியவையும் உள்ளன.
- விசையின் பெயர் மற்றும் பயன்படுத்தும் முறை.
SHIFT : ஒரு பேரெழுத்தைத்(uppercase letter) தட்டச்சு
செய்ய SHIFT விசையை அழுத்திக்கொண்டு ஒரு எழுத்தை அழுத்தவும். ஒரு விசையின்
மேற்பகுதியில் உள்ள சின்னத்தைத்(symbol) தட்டச்சு செய்ய, SHIFT விசையை
அழுத்திக்கொண்டு அந்த விசையை அழுத்தவும்.
CAPS LOCK : எல்லா எழுத்துகளையும் பேரெழுத்துகளாகத்
தட்டச்சு செய்ய CAPS LOCK விசையை ஒரு முறை அழுத்தவும். இந்தச் செயல்பாட்டை அணைக்க
CAPS LOCK விசையை மீண்டும் அழுத்தவும். CAPS LOCK இயக்கத்தில் இருக்கிறதா என்று
காட்ட உங்கள் விசைப்பலகையில் ஒரு சிறிய விளக்கு இருக்கலாம்.
TAB : இடஞ்சுட்டியை(cursor) பல இடைவெளிகள் தள்ளி
நகர்த்த TAB விசையை அழுத்தவும். ஒரு படிவத்தில் அடுத்த உரைப் பெட்டிக்கு நகரவும்
TAB விசையை அழுத்தலாம்.
ENTER : இடஞ்சுட்டியை அடுத்த வரியின் தொடக்கத்திற்கு
நகர்த்த, ENTER விசையை அழுத்தவும். ஒரு உரையாடல் பெட்டியில், தனிப்படுத்திக்
காட்டப்பட்ட பொத்தானைத் தேர்ந்தெடுக்க ENTER விசையை அழுத்தவும்.
SPACEBAR : இடஞ்சுட்டியை(cursor) ஒரு இடைவெளி நகர்த்த
SPACEBAR விசையை அழுத்தவும்.
BACKSPACE : இடஞ்சுட்டிக்கு முன்பு உள்ள எழுத்துக்குறியை
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை நீக்க BACKSPACE விசையை அழுத்தவும்.
எண் விசைத்தளத்தைப் பயன்படுத்துதல்.
எண்
விசைத்தளத்தில் 0 முதல் 9 வரையிலான எண்கள், கணித இயக்கிகளான + (கூட்டல்), -
(கழித்தல்), * (பெருக்கல்), / (வகுத்தல்), தசமப் புள்ளி ஆகியவை ஒரு கால்குலேட்டரில்
அல்லது கூட்டல் பொறியில் இருப்பது போல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இந்த
எழுத்துக்குறிகள் விசைப்பலகையில் வேறு இடங்களிலும் இருக்கின்றன; ஆனால் இந்த
விசைத்தள ஒழுங்கமைப்பு நீங்கள் எண் தரவை அல்லது எண் இயக்கங்களை ஒரு கையால் துரிதமாக
உள்ளிட உதவுகிறது.
படம் எண் விசைத்தளம் பற்றி விளக்குகிறது
எண்களை உள்ளிட(to enter numbers) எண் விசைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு
NUM LOCK விசையை அழுத்தவும். பெரும்பாலான விசைப்பலகைகளில் NUM LOCK இயக்கத்தில்
இருக்கிறதா அணைந்திருக்கிறதா என்று காட்டும் சிறிய விளக்கு ஒன்று இருக்கும். NUM
LOCK அணைந்திருக்கும்போது எண் விசைத்தளம் கூடுதலான ஒரு வழிசெலுத்து விசைத்
தொகுதியாக இயங்கும் (இந்தச் செயல்பாடுகள் அந்த விசைகளிலேயே எண்கள் அல்லது
சின்னங்களுக்கு அருகில் தரப்பட்டிருக்கும்).
எண் விசைத்தளத்தை கால்குலேட்டரில்
எளிய கணக்குகள் போடுவதற்குப் பயன்படுத்தலாம்.
எண் விசைத்தளத்தைப் பயன்படுத்தி
கால்குலேட்டரை இயக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக