ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

Windows ஓரப்பட்டியும் பெட்டகங்களும்.

        Windows ஓரப்பட்டி(Windows Sidebar) என்பது உங்கள் திரைப்பலகத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் நீண்ட, செங்குத்துப் பட்டி (long, vertical bar ). அதில் பெட்டகங்கள் (gadgets) என்ற சிறு நிரல்கள் (programs) இருக்கும்; இவை அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றன, அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகளை எளிதாக அணுக உதவுகின்றன. உதாரணமாக, நீங்கள் பெட்டகங்களைப் (gadgets) பயன்படுத்தி ஒரு பட ஸ்லைடு காட்சியைப் (picture slide show) பார்க்கலாம், தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவரும் தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம் (view continuously updated headlines), அல்லது தொடர்புகளைத் தேடலாம்.


ஓரப்பட்டியை ஏன் பயன்படுத்த வேண்டும்?  (Why use Sidebar?)

ஓரப்பட்டி(Sidebar), தகவல்களையும் கருவிகளையும்( information and tools ) நீங்கள் பயன்படுத்தத் தயாராக வைத்திருக்கும். உதாரணமாக, திறந்திருக்கும் நிரல்களுக்கு அருகிலேயே தலைப்புச் செய்திகளும் தெரியச் செய்யலாம் (you can display news headlines right next to your open programs). இந்த வசதி இருப்பதால், நீங்கள் பணிபுரியும்போது செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினால், அதற்காகப் பணியை நிறுத்திவிட்டு ஒரு செய்தி வலைத்தளத்திற்குச் செல்லத் தேவையில்லை.
ஓரப்பட்டியின் உதவியுடன், நீங்கள் தேர்வு செய்யும் மூலங்களிலிருந்து ( from sources ) மிகச் சமீபத்திய தலைப்புச் செய்திகளைப் (latest news headlines) பார்க்க ஊட்டத் தலைப்புச் செய்திகள் என்ற பெட்டகத்தைப் (Feed Headlines gadget) பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்தில் பணிபுரிவதை(you don't have to stop working on your document) நிறுத்தத் தேவையில்லை, ஏனென்றால் தலைப்புச் செய்திகள் எப்போதும் தெரிந்துகொண்டிருக்கும். உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புச் செய்தி ஒன்றைப் பார்த்தால் (if you see a headline that interests you), அந்தத் தலைப்புச் செய்தியை கிளிக் செய்யலாம்; உங்கள் வலை உலாவி (web browser) நேரடியாக அந்தக் கட்டுரையைத் திறக்கும்.
ஓரப்பட்டியைத் திறக்க
•     Windows ஓரப்பட்டியை (windows sidebar) கிளிக் செய்து திறக்கவும்.
ஓரப்பட்டியை (sidebar)  எல்லா நேரமும் தெரியவைக்க, நீங்கள் அதை மற்ற சாளரங்கள்(windows program screens) மறைக்காத வகையில் அமைக்க வேண்டும்.
  •    சாளரங்கள் ஓரப்பட்டியை மறைக்காமல் தடுக்க (To keep windows from covering Sidebar)
ஓரப்பட்டிக்கு நிறைய இடம் தேவை என்பதால், நீங்கள் ஒரு பெரிய அல்லது அகன்ற திரையுள்ள திரையகத்தை (wide-screen monitor ) அல்லது பல திரையகங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த விருப்பம் சிறந்த பலனைத் தரும்.
1.     control panel (கட்டுப்பாட்டு பலகம்) சென்று Windows ஓரப்பட்டி குணங்களை (windows sidebar properties) கிளிக் செய்து திறக்கவும்.
2.    ஓரப்பட்டி(sidebar) எப்போதும் மற்ற சாளரங்களுக்கு மேல் இருக்க வேண்டும் (always on top of other windows)என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
3.    சரி என்பதை கிளிக் செய்யவும்.

 
பெட்டகங்களுக்கு அறிமுகம் (Getting started with gadgets)

Windows -இல் சில பெட்டகங்கள் இருக்கின்றன (small collection of gadgets); ஆனால் அவற்றில் மிகச் சில மட்டுமே இயல்புநிலையாக ஓரப்பட்டியில் தோன்றும் (appear on Sidebar by default). பெட்டகங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று புரிந்துகொள்ள (how to use gadgets), நீங்கள் Windows -ஐ முதலில் தொடங்கும்போது பார்க்கும் மூன்று பெட்டகங்களை அலசிப் பார்ப்போம்: கடிகாரம், ஸ்லைடு காட்சி, ஊட்டத் தலைப்புச் செய்திகள் (the Clock, Slide Show, and Feed Headlines).
  • கடிகாரம் எப்படி இயங்குகிறது? (How does the Clock work?
நீங்கள் கடிகாரப் பெட்டகத்தைச் சுட்டும்போது (point to the Clock gadget), அதன் மேல் வலது மூலையில் (upper-right corner) இரண்டு பொத்தான்கள் (two buttons) தோன்றும்: மூடு என்ற பொத்தான் (Close button) — இதுதான் மேலுள்ள பொத்தான் — பிறகு விருப்பங்கள் பொத்தான் (Options button).
   
மூடு என்ற பொத்தானை (Clicking the Close button) கிளிக் செய்தால் கடிகாரம் ஓரப்பட்டியிலிருந்து அகற்றப்படும் (removes the Clock from Sidebar). மூடு பொத்தானுக்குக் கீழுள்ள பொத்தான் (button below the close button), கடிகாரத்திற்குப் பெயரிடுதல் (naming the clock), அதன் நேர மண்டலத்தை மாற்றுதல் (changing its time zone), நொடி முள்ளைக் காண்பித்தல் (showing its second hand) ஆகியவற்றுக்கான விருப்பங்களைக் காண்பிக்கும் (shows displays option).
  •  ஸ்லைடு காட்சி எப்படி இயங்குகிறது? (How does Slide Show work?) 
அடுத்து, குறிப்பானை (mouse pointer ஐ) ஸ்லைடு காட்சி பெட்டகத்தின் (Slide Show gadget) மேல் கொண்டுசெல்லவும்; இது உங்கள் கணினியில் உள்ள படங்களைத் தொடர்ச்சியான ஸ்லைடு காட்சியாகக் காட்டும்.
   
நீங்கள் ஸ்லைடு காட்சியைச் சுட்டும்போது (When your mouse point to Slide Show), மூடு (close), விருப்பங்கள் (option) ஆகிய பொத்தான்கள் (buttons ) அந்தப் பெட்டகத்தின் மேல் வலது மூலையில் தோன்றும் (upper-right corner of the gadget).
விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்தால் (clicking the Options button ) உங்கள் ஸ்லைடு காட்சியில் தெரிவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கலாம் (allows to choose which pictures appear in your slide show), ஸ்லைடு காட்சி இயங்கும் வேகத்தை (control the speed) அமைக்கலாம், படங்கள் மாறும்போது தோன்றும் விளைவை மாற்றலாம் (change the transition effect between pictures).
  •    ஊட்டத் தலைப்புச் செய்திகள் எப்படி இயங்குகிறது?  (how does feed headlines works?
RSS ஊட்டங்கள் (RSS feeds), XML ஊட்டங்கள் (XML feeds), ஒருங்கிணைந்த உள்ளடக்கம் (syndicated content), அல்லது வலை ஊட்டங்கள் (web feeds) என்று அழைக்கப்படும் ஊட்டங்களை(feed data) வழங்கும் ஒரு வலைத்தளத்திலிருந்து (website that supplies feeds) அடிக்கடி புதுப்பிக்கப்படும் தலைப்புச் செய்திகளை ஊட்டத் தலைப்புச் செய்திகள் எனும் (gadgets)பெட்டகங்கள் (Feed Headlines gadgets can display frequently updated headlines) தொடர்ந்து காண்பிக்கும். வலைத்தளங்கள் (websites) செய்திகளையும் (news) வலைப்பதிவுகளையும் (blogs) பகிர்ந்தளிக்கப் (to distribute ) பெரும்பாலும் ஊட்டங்களைப் (feeds) பயன்படுத்துகின்றன. இயல்புநிலையாக (in by default), ஊட்டத் தலைப்புச் செய்திகள் எனும் பெட்டகங்கள் (gadgets) எந்தத் தலைப்புச் செய்திகளையும் காண்பிக்காது. முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய தலைப்புச் செய்தித் தொகுதி ஒன்றைக் காண்பிக்க (To start displaying a small set of preselected headlines), தலைப்புச் செய்திகளைக் காண் என்பதை கிளிக் செய்யவேண்டும் ( click View headlines).
  
நீங்கள் ஊட்டத் தலைப்புச் செய்திகளைச் சுட்டும்போத (When you point to Feed Headlines), மூடு, விருப்பங்கள் ஆகிய பொத்தான்கள் அந்தப் பெட்டகத்தின் மேல் வலது மூலையில் தோன்றும் (the Close and Options buttons will appear near the upper-right corner of the gadget). விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்தால் (Clicking the Options button ), இருக்கும் ஊட்டங்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம் (allows you to choose from a list of available feeds). வலையிலிருந்து நீங்களே சில ஊட்டங்களைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலில் சேர்க்கலாம் (You can add to the list by choosing your own feeds from the web).
  •    Internet Explorer -ஐப் பயன்படுத்தி வலையிலிருந்து ஒரு ஊட்டத்தைத் தேர்வு செய்ய (To choose a feed from the web with Internet Explorer)
  
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (internet explorer), விண்டோஸ் operating system ல் சேர்ந்து வரும் ஒரு இணைய உலாவி (web browser), நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு வலைப்பக்கத்திலும் internet explorer ஆனது ஊட்டங்களை (webpage feeds) தெரிவிக்கின்றது.


ஒரு வலைப்பக்கத்தில்(one webpage) உள்ள ஊட்டங்களை எடுக்க உலாவுதல்(to browse) அவசியம்.


(Internet Explorer ஒவ்வொருமுறையும் பயன்படுத்தும்போது வலைப்பக்கத்தில்  ஊட்டங்கள் உள்ளனவா என அலசும். அப்படி செய்யும் போது ஊட்டங்கள் இருந்தால் internet explorer ல் உள்ள feed button சாம்பல் (gray) நிரத்தில்இருந்து orange நிரத்திர்க்கு மாறுபடும் )
 
feed button க்கு பக்கத்தில் உள்ள அம்பு குறியை களிக் செய்வும் பிறகு தோன்றும் பட்டியலில் நீங்கள் விரும்பிய ஊட்டங்களை தேர்வுசெய்து கொள்ளவும்.


பிறகு தோன்றும் உரையாடல் பெட்டியில், இந்த ஊட்டங்களுக்காக குழுசேர் (
Subscribe to this feed) என்பதை கிளிக் செய்யவும்.  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக