ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஆவணத்தை வடிவமைத்தல் .

வடிவமைத்தல் என்பது உங்கள் ஆவணத்தில் உள்ள உரையின் தோற்றத்தையும் அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கிறது. WordPad உங்கள் ஆவணத்தில் உள்ள வடிவமைப்பை நீங்கள் எளிதாக மாற்ற உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் வெவ்வேறு எழுத்துருக்களையும் (different fonts) எழுத்துரு அளவுகளையும் (different font sizes) தேர்ந்தெடுக்கலாம், உரையை நீங்கள் விரும்பும் எந்த வண்ணத்திற்கு (color you want) வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் ஆவணத்தின் சீரமைப்பையும் (align) எளிதாக மாற்ற முடியும்.

எழுத்துரு, எழுத்துரு நடை, எழுத்துரு அளவு ஆகியவற்றை மாற்ற -To change the font, font style, or font size


1.    நீங்கள் வடிவமைப்பை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3.    எழுத்துரு பெட்டியில் (Font box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துருவைத் (font variety) தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font you want to use).
4.    எழுத்துரு நடை பெட்டியில் (Font Style box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துரு நடையைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font style you want to use).
5.    அளவு பெட்டியில் (Size box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் அளவைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு -Tip
  •    எழுத்துரு, எழுத்துரு அளவு, எழுத்துரு நடை ஆகியவற்றை மாற்ற நீங்கள் வடிவமைப்புப் பட்டியில் (format bar) உள்ள கட்டளைகளையும் (command keys) பயன்படுத்தலாம்.
வண்ணத்தை மாற்ற - To change the color
1.    நீங்கள் வண்ணத்தை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (Select the text).
2.    வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3.    வண்ணம் என்பதற்குக் கீழ் (Under Color,), நீங்கள் விரும்பும் வண்ணத்தை கிளிக் செய்யவும் (click the color that you want).
வெவ்வேறு எழுத்துருக்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆவணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்:
 

சீரமைப்பை மாற்ற - To change the alignment

உங்கள் ஆவணத்தில் உள்ள உரையை (text) (அல்லது ஆவணத்தில் உள்ள ஒரு பத்தியை (paragraph) ) இடது ஓரத்திற்கு (left margin), மையத்திற்கு (center), அல்லது வலது ஓரத்திற்குச் (right margin) சீரமைக்கலாம்.
1.    நீங்கள் சீரமைப்பை மாற்ற விரும்பும் பத்தியைத் தேர்ந்தெடுக்கவும் (select paragraph).
2.    வடிவமை மெனுவில் (format menu), பத்தி (Paragraph) என்பதை கிளிக் செய்யவும்.
3.    சீரமைப்பு பெட்டியில் (Alignment box), நீங்கள் விரும்பும் சீரமைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (click the alignment you want).
பத்திகள் வெவ்வேறு சீரமைப்புகளில் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தில் பார்க்கலாம்:
 

ஆவணத்தைச் சேமித்தல் - Saving your document

நீங்கள் உங்கள் ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது (when editing the documents) அவ்வப்போது (periodically) அதைச் சேமிப்பது (to save) நல்லது. அப்போதுதான் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் கணினி இயங்குவது நின்றுவிட்டால் கூட நீங்கள் செய்த பணி எதுவும் தொலைந்துபோகாது. ஆவணத்தைச் சேமித்தால்தான் நீங்கள் விரும்பும்போது அதில் மீண்டும் பணிபுரியவும் முடியும்.

ஆவணத்தைச் சேமிக்க - To save the document

•    கோப்பு மெனுவில் (file menu), சேமி (save) என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஆவணத்தை இதற்கு முன் சேமிக்கவில்லை எனில், ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (document name or file name, eg: schoolwork.doc ) தந்து சேமிக்க உங்கள் கணினியில் உள்ள ஓர் இருப்பிடத்தைக் (file or folder directory location) குறிப்பிடும்படி உங்களிடம் கேட்கப்படும்:
1.    இதில் சேமி பெட்டியில் (Save in box), நீங்கள் ஆவணத்தைச் சேமிக்க விரும்பும் இருப்பிடத்தை கிளிக் செய்யவும் (click the location where you want to save the document).
2.    கோப்பின் பெயர் பெட்டியில் (File name box), உங்கள் ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (type a name ) தட்டச்சு செய்யவும்.
3.    சேமி (Save) என்பதை கிளிக் செய்யவும்.

ஆவணத்தை அச்சிடுதல் Printing your document

கோப்பு மெனுவில் (File menu), அச்சிடு (Print) என்பதை கிளிக் செய்யவும். அச்சிடு உரையாடல் பெட்டியில் (Print dialog box), நீங்கள் எந்தப் பக்கங்களை அச்சிட விரும்புகிறீர்கள் (Page Range ) என்பதையும் எத்தனை நகல்கள் (Number of copies ) என்பதையும் பக்க வரம்பு பெட்டியிலும்(Page Range box) நகல்களின் எண்ணிக்கை பெட்டியிலும் (Number of copies box) குறிப்பிடவும். முடிந்ததும், அச்சிடு (Print ) என்பதை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக