Windows -இல் சில விளையாட்டுகள் (games) இருக்கின்றன; இவற்றை ஆடி உற்சாகமூட்டிக்கொள்ளலாம். இந்தக் கட்டுரை ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது. மேலும் விரிவான உதவி பெற, விளையாட்டின் உதவி மெனுவில் உதவியைக் காண் (view help) என்பதை கிளிக் செய்யவும்.
Windows -உடன் வரும் விளையாட்டுகள், உங்கள் கணினியில் உள்ள விளையாட்டுகளுக்கான மைய இருப்பிடமான விளையாட்டுகள் கோப்புறையில் இருக்கும்.
விளையாட்டுகள் கோப்புறையைத்(Games folder) திறக்க, தொடக்கம் பொத்தானை (Start button) கிளிக் செய்து, நிரல்கள்(programs) என்பதை கிளிக் செய்யவும், பிறகு விளையாட்டுகள் (games) என்பதை கிளிக் செய்யவும், பிறகு விளையாட்டுகள். கோப்புறையில் உள்ள விளையாட்டுகளில் ஒன்றைத் திறக்க, அதன் படவுருவை இரு-கிளிக் செய்யவும் (To open the Games folder, click the Start button -> click Programs ->click Games, ->and then click Games. To open one of the games in the folder, double-click its icon).
குறிப்பு
• Windows விளையாட்டுகள் ஒரு சில Windows பதிப்புகளில் இயல்புநிலையாக நிறுவப்பட்டிருக்காது. அவற்றை நிறுவ, தொடக்கம் பொத்தானை (Start button ) கிளிக் செய்து, அமைப்புகள் (Settings) என்பதை கிளிக் செய்து,கட்டுப்பாட்டுப் பலகம் ( Control Panel) என்பதை கிளிக் செய்து, பிறகு நிரல்கள் மற்றும் அம்சங்கள் (Programs and Features) என்பதை கிளிக் செய்யவும், பிறகு Windows அம்சங்களை இயக்கவும் அல்லது அணைக்கவும் என்பதை கிளிக் செய்யவும் (Turn Windows features on or off). Windows அம்சங்கள் உரையாடல் பெட்டியில் (Windows Features dialog box), விளையாட்டுகள் தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும் (Games check box), பிறகு சரி (OK) என்பதை கிளிக் செய்யவும். கடவுசொல்லை கேட்டால் கணினி நிர்வகிப்பாளரின் அனுமதி கோறவும்.
செஸ் டைட்டன்ஸ் (Chess Titans)
செஸ் டைட்டன்ஸ் முப்பரிமாண வரைவியலையும் அசைவூட்டத்தையும் (three-dimensional graphics and animation) சேர்த்து நாமறிந்த செஸ் விளையாட்டிற்கு உயிரூட்டுகிறது. தனிப்படுத்திக் காட்டப்படும் சதுரங்கள் நீங்கள் உங்கள் காய்களை எங்கே நகர்த்தலாம் என்று காண்பிக்கின்றன. செராமிக், பளிங்கு, அல்லது மரத்தாலான போர்டைத் தேர்வு செய்யவும், போர்டை நீங்கள் விரும்பும் காட்சிக்கு சுழற்றவும்.
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1 அல்லது 2
• கடின நிலைகள்: 1 (தொடக்க நிலை) முதல் 10 (நிபுணர்) வரை
• ஆட்ட நேரம்: 10 முதல் 60 நிமிடங்கள்
மாஜோங் டைட்டன்ஸ் (Mahjong Titans)
மாஜோங் டைட்டன்ஸ் என்பது டைல்களை வைத்து ஆடப்படும் (played with tiles) ஒரு சாலிட்டேர் விளையாட்டு (solitaire game). போர்டில் ஜோடியாக இருக்கும் டைல்களை அகற்றவும் (Remove matching pairs of tiles from the board); உங்களால் எல்லா டைல்களையும் அகற்ற முடிந்தால் நீங்கள் ஜெயித்தீர்கள்! (you win!) எனப்பொருள். நான்கு விதமான டைல் வடிவமைப்புகள் (four different tile designs), ஆறு விதமான டைல் தளவமைப்புகள் (six different tile layouts), பல விதமாந பின்புலங்கள் (variety of backgrounds) ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இது பழங்கால மாஜோங் விளையாட்டிலிருந்து (ancient game of mahjong) மாறுபட்டது, ஆனால் இதுவும் அதே போன்ற டைல்களைத்தான் பயன்படுத்துகிறது.
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: டைல் தளவமைப்புக்கேற்ப மாறும்
• ஆட்ட நேரம்: 10 முதல் 30 நிமிடங்கள்
மைன்ஸ்வீப்பர் (Minesweeper)
மைன்ஸ்வீப்பரில், சதுரங்கள் நிரம்பிய மைதானத்தின் அடியில் மறைந்திருக்கும் எல்லா கண்ணி வெடிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சதுரத்தை கிளிக் செய்தால் அதில் என்ன இருக்கும் என்று தெரியும். சில சதுரங்களில் எண்கள் இருக்கும். அருகில் எங்கே கண்ணி வெடிகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க இவை உதவும். ஆனால் ஜாக்கிரதை — கண்ணி வெடி உள்ள ஒரு சதுரத்தை கிளிக் செய்தீர்கள் என்றால் போர்டில் இருக்கும் எல்லா கண்ணி வெடிகளும் வெடித்து ஆட்டம் முடிந்துவிடும்!
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்.
பர்பிள் ப்ளேஸ் (Purble Place)
பர்பிள் ப்ளேஸ் என்பது மூன்று விளையாட்டுகள் அடங்கிய ஒரு விளையாட்டு: காம்ஃபி கேக்ஸ் (Comfy Cakes), பர்பிள் ஷாப் (Purble Shop), பர்பிள் இணைகள் (Purble Pairs). தொடக்க நிலையில், இந்த அதிர்ஷ்ட அடிப்படையிலான ஆட்டங்கள் (whimsical games) குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்றவை. இவை நினைவுத் திறன் (in memory), ஒழுங்குவரிசையை அடையாளம் காணுதல் (pattern recognition), பகுத்தறிதல் (reasoning) ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உதவுகின்றன, உயர்ந்த கடின நிலைகள், எல்லா வயது ஆட்டக்காரர்களுக்கும் சவாலாக இருக்கும்.
i) காம்ஃபி கேக்ஸ். (Comfy Cakes)
இந்த விளையாட்டில் நீங்கள் தலைமைச் சமையல்காரர், பர்பிளின் பேக்கரியில் இருப்பீர்கள். இங்கு ஆர்டர் செய்யப்பட்ட கேக்குகளை நீங்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பேக்கரியின் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, நீங்கள் கேக்குகளை ஆர்டர் செய்யப்பட்டபடி, சரியான வடிவங்கள் (right combination of shapes), பேட்டர்கள் (batters), ஃபில்லிங் (fillings), ஐசிங் (icings), அலங்காரங்களை (decorations) ஆகியவற்றைப் பயன்படுத்தி கேக்குகளைத் தயாரிக்க வேண்டியிருக்கும். வேகமாகத் தயாரியுங்கள், ஏனென்றால் கேக்குகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்!
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்.
ii)பர்பிள் ஷாப். (Purble Shop)
இந்த விளையாட்டு உங்கள் பகுத்தறியும் திறனைச் சோதிக்கிறது (tests your powers of deduction). உங்கள் பர்பிளின் முகம் திரைக்குப் பின்னாலுள்ள மர்மமான பர்பிளுடன் பொருந்தும்படி செய்வதுதான் உங்கள் இலக்கு. அலமாரிகளிலிருந்து தலைமுடி, கண்கள், மூக்கு, உதடுகள் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும், பிறகு உங்களிடம் எத்தனை அம்சங்கள் சரியாக இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவும்!
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்
iii) பர்பிள் இணைகள். (Purble Pairs)
இந்த விளையாட்டில், போர்டில் உள்ள படங்களில், பொருத்தமான இணைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு டைலைப் புரட்டினால் ஒரு படம் தெரியும். பிறகு அதற்கு ஜோடியான படத்தைக் கண்டுபிடிக்கவும். போர்டில் உள்ள எல்லா டைல்களையும் ஒரு பார்வை பார்க்க ஒரு "sneak peek" டோக்கனைப் பயன்படுத்தவும்.
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக