ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

Windows -ஐ பிணையத்துடன் இணைத்தல்.

windows -ஐ பிணையத்துடன் இணைதத்து விட்டால் ஒரு கணினியில்  உள்ள எல்லா பயன்பாடுகளையும் ( application programming) பிணையத்தில் உள்ள வேறொரு கணினியின் மூலம், அந்தப்பயன்களை காணலாம் மற்றும் அதனை மாற்றி அமைக்களாம். பிணையத்தில் மூன்று வகைகள் உண்டு 1. உள்ளுா் வரம்பு பிணையம் (local area network), 2. பிராந்திய வரம்பு பிணையம் (metropolitan are network), 3. வைய வரம்பு பிணையம் (wide area network).
இந்த மூன்று வகை பிணையத்திளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வைய வரம்பு பிணைத்தினுள்ள கணினிகளின் பலனை அனுபவிக்க ஒரு கணினியை இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்புகளை கம்பி மூலம் ஏற்படுத்தலம் சில நவீன கணினிகள் கம்பியில்லா இணைப்புகளையே கொண்டுள்ளன.

•    கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.
•    இல்ல பிணையத்தில்(home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.
•    பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல். ஆகிய வற்றை பற்றி இந்த வலைதளத்தில் விரிவாகப் பார்போம்.

பிணையமாக்கள்  

    1. கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

உங்கள் கணினியில் ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் (wireless network adapter) இருந்தால், விண்டோஸ் தானாகவே உங்கள் கணினியின் வரம்பில் உள்ள எல்லா வயர்லெஸ் நெட்வொர்க்குகளையும்  கண்டறியும். நீங்கள் அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்குகள் பட்டியலையும் பார்க வேண்டும்மெனில் பிணையம் இணைத்தல் (connect to network) என்னும் மெனுவை கிலிக்செய்து பார்து கொள்ளலாம். 



விண்டோஸ் உங்கள் கணினியில் வரம்பில் உள்ள  கம்பியில்லா பிணைய இனைப்பை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அது ஒரு பின்வரும் காரணங்கள் இருக்க கூடும்:
  •   உங்கள் கணினியில் வயர்லெஸ் சுவிட்ச் நிறுத்தப்பட்டுள்ளது (turn off).
பல மொபைல் பிசிக்கள் (mobile PC)  கணினி முன் அல்லது பின் பக்கத்தில் ஒரு வயர்லெஸ் சுவிட்சை கொண்டுள்ளன. உங்கள் கணினியில்  வயர்லெஸ்  சுவிட்ச் உள்ளனவ எனப் பார்க்கவும். நீங்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்றால், wireless switch turn on ல் உள்ளன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில கணினிகள் function key யை பயன்படுத்தி கம்பியில்லா பினையத்தை switch on or off செய்ய கூடியதாக இருக்கும்.எனவே வயர்லெஸ் சுவிட்ச் இடங்களை பற்றிய விவரங்களுக்கு உங்கள் கணினியின் manual book யை பார்கவும்.

  •    உங்கள் கணினி கம்பியில்லா திசைவி (wireless router) அல்லது அணுகல் புள்ளி (wireless access point) இருந்து வெகு தொலைவில் உள்ளது.
802.11b அல்லது 802.11 திசைவிகள் (wireless routers)  மற்றும் அணுகல் புள்ளிகள் (access points), அதிகபட்ச வரம்பை வரை 150 அடி (46 மீட்டர்) உள்புறம் மற்றும் வெளிப்புறம் 300 அடி (92 மீட்டர்) வரை  தொடர்பு ஏர்படுத்தும். 802.11 திசைவிகள் மற்றும் அணுகல் புள்ளிகள், அதிகபட்ச வரம்பை 50 அடி (15 மீட்டர்) உள்புறம் மற்றும் 100 அடி (30 மீட்டர்) வெளியில் தொடர்பு ஏர்படுத்தும் . இந்த எல்லைகள் குறுக்கீ'டு இல்லாத அனுகூலமான நிலையில் பிணைய இனைப்பை செயல்பட உதவுகின்றன. உங்கள் கணினியை இந்த வரம்புக்குள் இருக்குமாறு நிறுவவேண்டும் மற்றும் திசைவி (wireless router) அல்லது அணுகல் புள்ளி (access point) முடிந்தவரை நெருக்கமாக உள்ளனவ என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் நெருக்கமாக திசைவி அல்லது அணுகல் புள்ளி பெற முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர்க்கு வெளிப்புறத்தில் ஆன்டென்னா வாங்கி நிறுவ வேண்டும். அதாவது external antenna வை உங்கள் wireless adapter ல் பெருத்தவேண்டும் அவ்வாறு செய்தால் வெளிப்புற ஆன்டென்னாவில் இருந்து அதிக தூரத்தில் இருந்து கம்பியில்லா இணைப்பு ஏற்படும் . நீங்கள் ஒரு கூடுதல் ஆண்டெனா நிறுவ முடியும் என்பதை உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் தயாரிப்பாலா் கொடுத்துள்ளார என பார்கவும்


      2. இல்ல பிணையத்தில்  (home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

  •   நான் பிணைய கோப்புறையில் (network folder) எந்த கணினிகள் (computers) அல்லது சாதனங்களை (devices) பார்க்கவில்லை.என்ற பிறட்சனை இரண்டு காரணங்களால் ஏற்படலாம்:


உங்கள் கணினி பிணைய இணைப்பில் இல்லை யெனில். நெட்வொர்க் கோப்புறை (network folder)
காலியாக தோன்றும், இந்த சிக்கலை தீர்க்க, அந்த நெட்வொர்க்கில் புதிய பிணைய இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.


பிணைய கண்டுபிடிப்பு (network discovery) உங்களை மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் இருப்பதை பார்க்க தடுக்கின்றது எனில் உங்கள் கணினியில் பிணைய கண்டுபிடிப்பு
(network discovery)  அமைப்பை turn off செய்யப்பட்டுள்ளது எனப்பொருள் ,எனவே நீங்கள் பிணைய மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் பார்க்க முடியாது. உங்கள் பிணைய கண்டுபிடிப்பு அமைப்பை (network discovery settings) மாற்ற, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் திறக்கவும் (open network and sharing center)

பிணைய கண்டுபிடிப்பு
(network discovery) ஆஃப் செய்திருந்தால், பகுதி விரிவாக்க அம்புக்குறி பொத்தானை கிளிக் செய்யவும், பிணைய கண்டுபிடிப்பு இயக்கு (Turn on network discovery) என்பதை கிளிக் செய்து, பின்னர் பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடவுச்சொல்லை தட்டச்சு  செய்து உறுதி படுத்த வேண்டும்.நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் (network and sharing center)  ஒரு மையப்படுத்தப்பட்ட இடம் வழங்குகிறது (provides a centralized location )  அதன் மூலம் நீங்கள் உள்ளூர் பகுதி நெட்வொர்க் (LAN - local area network), கம்பியில்லா அக பரப்பு நெட்வொர்க் (WLAN - wireless local area network), மெய்நிகர் தனியார் பிணையம் (VPN - virtual private network), கணினியுடன் இணைக்கப்பட்ட டயல் அப்  மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் (dial-up, and Broadband connections on your computer) போன்றவற்றை பார்க்க (to view), உருவாக்க (to create), மாற்ற( to change) முடியும். கூடுதலாக, நீங்கள் நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் முலம் (network and sharing center)  உள்ளூர் கணினி (local computers- பிணையம்யற்ற கணினி) மற்றும் பகிர்வு விருப்பங்கள்ளின் (sharing option) அமைக்கபுகளை மாற்ற (configuration change) முடியும். அதன் காரணமாக நீங்கள் பிணைய இணைப்பில் உள்ள மற்ற கணினிகளுக்கு (computers) மற்றும் சாதனங்களுக்கு (devices) கோப்புகள் (file sharing or content sharing) கிடைக்கும் அல்லது கிடைக்காது என்ற உள்ளடக்கத்தை குறிப்பிடலாம்.


  3. பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல்.

அனைத்து கம்பிகள்  இணைக்கப்பட்டுள்ளது  என உறுதிபடுத்தவும் (எடுத்துக்காட்டாக, நேரடியாகவோ அல்லது ஒரு திசைவி மூலம் (router), உங்கள் மோடம் நல்ல நிலையில் உள்ள தொலைபேசி மூலம் இணைக்கப்படவும்)

நீங்கள் மற்றொரு கணினியில் உங்கள் கணினியை இணைக்க முயற்சிக்கும் போது, அந்த கணினி செயல்படும் நிலையில் (make sure that computer is turn on) உள்ளதா என உறுதி படுத்தவும்.

நீங்கள் புதிய மென்பொருள் நிறுவப்பட்ட பிறகு பிரச்சனை தொடங்கியது என்றால், அவைகள் மாற்றப்பட்டுள்ளனவா என்பதை உங்கள் இணைப்பு அமைப்புகளை (connection settings)  சரிபார்க்கவும்.



பிணைய இணைப்புகளை திறக்க start menu வை click செய்து control panel ஐ கிலிக் செய்யவும் பிறகு network connection ஐ கிலிக் செய்யவும் . இணைப்பில் வலது கிளிக் செய்து, பின்னர் பண்புகள் கிளிக். நீங்கள் ஒரு கணினி உரிமையாலர் என்பதை உறுதி படுத்த கடவுச்சொல்லை (username and password) கேட்கும் என்றால், கடவுச்சொல்லை தட்டச்சு செய்து உறுதி படுத்தவும்.

Windows ஓரப்பட்டியும் பெட்டகங்களும்.

        Windows ஓரப்பட்டி(Windows Sidebar) என்பது உங்கள் திரைப்பலகத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் நீண்ட, செங்குத்துப் பட்டி (long, vertical bar ). அதில் பெட்டகங்கள் (gadgets) என்ற சிறு நிரல்கள் (programs) இருக்கும்; இவை அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றன, அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகளை எளிதாக அணுக உதவுகின்றன. உதாரணமாக, நீங்கள் பெட்டகங்களைப் (gadgets) பயன்படுத்தி ஒரு பட ஸ்லைடு காட்சியைப் (picture slide show) பார்க்கலாம், தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவரும் தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம் (view continuously updated headlines), அல்லது தொடர்புகளைத் தேடலாம்.


ஓரப்பட்டியை ஏன் பயன்படுத்த வேண்டும்?  (Why use Sidebar?)

ஓரப்பட்டி(Sidebar), தகவல்களையும் கருவிகளையும்( information and tools ) நீங்கள் பயன்படுத்தத் தயாராக வைத்திருக்கும். உதாரணமாக, திறந்திருக்கும் நிரல்களுக்கு அருகிலேயே தலைப்புச் செய்திகளும் தெரியச் செய்யலாம் (you can display news headlines right next to your open programs). இந்த வசதி இருப்பதால், நீங்கள் பணிபுரியும்போது செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினால், அதற்காகப் பணியை நிறுத்திவிட்டு ஒரு செய்தி வலைத்தளத்திற்குச் செல்லத் தேவையில்லை.
ஓரப்பட்டியின் உதவியுடன், நீங்கள் தேர்வு செய்யும் மூலங்களிலிருந்து ( from sources ) மிகச் சமீபத்திய தலைப்புச் செய்திகளைப் (latest news headlines) பார்க்க ஊட்டத் தலைப்புச் செய்திகள் என்ற பெட்டகத்தைப் (Feed Headlines gadget) பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்தில் பணிபுரிவதை(you don't have to stop working on your document) நிறுத்தத் தேவையில்லை, ஏனென்றால் தலைப்புச் செய்திகள் எப்போதும் தெரிந்துகொண்டிருக்கும். உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புச் செய்தி ஒன்றைப் பார்த்தால் (if you see a headline that interests you), அந்தத் தலைப்புச் செய்தியை கிளிக் செய்யலாம்; உங்கள் வலை உலாவி (web browser) நேரடியாக அந்தக் கட்டுரையைத் திறக்கும்.
ஓரப்பட்டியைத் திறக்க
•     Windows ஓரப்பட்டியை (windows sidebar) கிளிக் செய்து திறக்கவும்.
ஓரப்பட்டியை (sidebar)  எல்லா நேரமும் தெரியவைக்க, நீங்கள் அதை மற்ற சாளரங்கள்(windows program screens) மறைக்காத வகையில் அமைக்க வேண்டும்.
  •    சாளரங்கள் ஓரப்பட்டியை மறைக்காமல் தடுக்க (To keep windows from covering Sidebar)
ஓரப்பட்டிக்கு நிறைய இடம் தேவை என்பதால், நீங்கள் ஒரு பெரிய அல்லது அகன்ற திரையுள்ள திரையகத்தை (wide-screen monitor ) அல்லது பல திரையகங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த விருப்பம் சிறந்த பலனைத் தரும்.
1.     control panel (கட்டுப்பாட்டு பலகம்) சென்று Windows ஓரப்பட்டி குணங்களை (windows sidebar properties) கிளிக் செய்து திறக்கவும்.
2.    ஓரப்பட்டி(sidebar) எப்போதும் மற்ற சாளரங்களுக்கு மேல் இருக்க வேண்டும் (always on top of other windows)என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
3.    சரி என்பதை கிளிக் செய்யவும்.

 
பெட்டகங்களுக்கு அறிமுகம் (Getting started with gadgets)

Windows -இல் சில பெட்டகங்கள் இருக்கின்றன (small collection of gadgets); ஆனால் அவற்றில் மிகச் சில மட்டுமே இயல்புநிலையாக ஓரப்பட்டியில் தோன்றும் (appear on Sidebar by default). பெட்டகங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று புரிந்துகொள்ள (how to use gadgets), நீங்கள் Windows -ஐ முதலில் தொடங்கும்போது பார்க்கும் மூன்று பெட்டகங்களை அலசிப் பார்ப்போம்: கடிகாரம், ஸ்லைடு காட்சி, ஊட்டத் தலைப்புச் செய்திகள் (the Clock, Slide Show, and Feed Headlines).
  • கடிகாரம் எப்படி இயங்குகிறது? (How does the Clock work?
நீங்கள் கடிகாரப் பெட்டகத்தைச் சுட்டும்போது (point to the Clock gadget), அதன் மேல் வலது மூலையில் (upper-right corner) இரண்டு பொத்தான்கள் (two buttons) தோன்றும்: மூடு என்ற பொத்தான் (Close button) — இதுதான் மேலுள்ள பொத்தான் — பிறகு விருப்பங்கள் பொத்தான் (Options button).
   
மூடு என்ற பொத்தானை (Clicking the Close button) கிளிக் செய்தால் கடிகாரம் ஓரப்பட்டியிலிருந்து அகற்றப்படும் (removes the Clock from Sidebar). மூடு பொத்தானுக்குக் கீழுள்ள பொத்தான் (button below the close button), கடிகாரத்திற்குப் பெயரிடுதல் (naming the clock), அதன் நேர மண்டலத்தை மாற்றுதல் (changing its time zone), நொடி முள்ளைக் காண்பித்தல் (showing its second hand) ஆகியவற்றுக்கான விருப்பங்களைக் காண்பிக்கும் (shows displays option).
  •  ஸ்லைடு காட்சி எப்படி இயங்குகிறது? (How does Slide Show work?) 
அடுத்து, குறிப்பானை (mouse pointer ஐ) ஸ்லைடு காட்சி பெட்டகத்தின் (Slide Show gadget) மேல் கொண்டுசெல்லவும்; இது உங்கள் கணினியில் உள்ள படங்களைத் தொடர்ச்சியான ஸ்லைடு காட்சியாகக் காட்டும்.
   
நீங்கள் ஸ்லைடு காட்சியைச் சுட்டும்போது (When your mouse point to Slide Show), மூடு (close), விருப்பங்கள் (option) ஆகிய பொத்தான்கள் (buttons ) அந்தப் பெட்டகத்தின் மேல் வலது மூலையில் தோன்றும் (upper-right corner of the gadget).
விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்தால் (clicking the Options button ) உங்கள் ஸ்லைடு காட்சியில் தெரிவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கலாம் (allows to choose which pictures appear in your slide show), ஸ்லைடு காட்சி இயங்கும் வேகத்தை (control the speed) அமைக்கலாம், படங்கள் மாறும்போது தோன்றும் விளைவை மாற்றலாம் (change the transition effect between pictures).
  •    ஊட்டத் தலைப்புச் செய்திகள் எப்படி இயங்குகிறது?  (how does feed headlines works?
RSS ஊட்டங்கள் (RSS feeds), XML ஊட்டங்கள் (XML feeds), ஒருங்கிணைந்த உள்ளடக்கம் (syndicated content), அல்லது வலை ஊட்டங்கள் (web feeds) என்று அழைக்கப்படும் ஊட்டங்களை(feed data) வழங்கும் ஒரு வலைத்தளத்திலிருந்து (website that supplies feeds) அடிக்கடி புதுப்பிக்கப்படும் தலைப்புச் செய்திகளை ஊட்டத் தலைப்புச் செய்திகள் எனும் (gadgets)பெட்டகங்கள் (Feed Headlines gadgets can display frequently updated headlines) தொடர்ந்து காண்பிக்கும். வலைத்தளங்கள் (websites) செய்திகளையும் (news) வலைப்பதிவுகளையும் (blogs) பகிர்ந்தளிக்கப் (to distribute ) பெரும்பாலும் ஊட்டங்களைப் (feeds) பயன்படுத்துகின்றன. இயல்புநிலையாக (in by default), ஊட்டத் தலைப்புச் செய்திகள் எனும் பெட்டகங்கள் (gadgets) எந்தத் தலைப்புச் செய்திகளையும் காண்பிக்காது. முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய தலைப்புச் செய்தித் தொகுதி ஒன்றைக் காண்பிக்க (To start displaying a small set of preselected headlines), தலைப்புச் செய்திகளைக் காண் என்பதை கிளிக் செய்யவேண்டும் ( click View headlines).
  
நீங்கள் ஊட்டத் தலைப்புச் செய்திகளைச் சுட்டும்போத (When you point to Feed Headlines), மூடு, விருப்பங்கள் ஆகிய பொத்தான்கள் அந்தப் பெட்டகத்தின் மேல் வலது மூலையில் தோன்றும் (the Close and Options buttons will appear near the upper-right corner of the gadget). விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்தால் (Clicking the Options button ), இருக்கும் ஊட்டங்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம் (allows you to choose from a list of available feeds). வலையிலிருந்து நீங்களே சில ஊட்டங்களைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலில் சேர்க்கலாம் (You can add to the list by choosing your own feeds from the web).
  •    Internet Explorer -ஐப் பயன்படுத்தி வலையிலிருந்து ஒரு ஊட்டத்தைத் தேர்வு செய்ய (To choose a feed from the web with Internet Explorer)
  
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (internet explorer), விண்டோஸ் operating system ல் சேர்ந்து வரும் ஒரு இணைய உலாவி (web browser), நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு வலைப்பக்கத்திலும் internet explorer ஆனது ஊட்டங்களை (webpage feeds) தெரிவிக்கின்றது.


ஒரு வலைப்பக்கத்தில்(one webpage) உள்ள ஊட்டங்களை எடுக்க உலாவுதல்(to browse) அவசியம்.


(Internet Explorer ஒவ்வொருமுறையும் பயன்படுத்தும்போது வலைப்பக்கத்தில்  ஊட்டங்கள் உள்ளனவா என அலசும். அப்படி செய்யும் போது ஊட்டங்கள் இருந்தால் internet explorer ல் உள்ள feed button சாம்பல் (gray) நிரத்தில்இருந்து orange நிரத்திர்க்கு மாறுபடும் )
 
feed button க்கு பக்கத்தில் உள்ள அம்பு குறியை களிக் செய்வும் பிறகு தோன்றும் பட்டியலில் நீங்கள் விரும்பிய ஊட்டங்களை தேர்வுசெய்து கொள்ளவும்.


பிறகு தோன்றும் உரையாடல் பெட்டியில், இந்த ஊட்டங்களுக்காக குழுசேர் (
Subscribe to this feed) என்பதை கிளிக் செய்யவும்.  
   

Windows விளையாட்டுகளை கணினியில் விளையாடுவது பற்றி விளக்கம்.

Windows -இல் சில விளையாட்டுகள் (games) இருக்கின்றனஇவற்றை ஆடி உற்சாகமூட்டிக்கொள்ளலாம். இந்தக் கட்டுரை ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது. மேலும் விரிவான உதவி பெறவிளையாட்டின் உதவி மெனுவில் உதவியைக் காண் (view help) என்பதை கிளிக் செய்யவும்.
Windows -உடன் வரும் விளையாட்டுகள்உங்கள் கணினியில் உள்ள விளையாட்டுகளுக்கான மைய இருப்பிடமான விளையாட்டுகள் கோப்புறையில் இருக்கும்.
விளையாட்டுகள் கோப்புறையைத்(Games folder) திறக்கதொடக்கம் பொத்தானை (Start button)  கிளிக் செய்துநிரல்கள்(programs) என்பதை கிளிக் செய்யவும்பிறகு விளையாட்டுகள் (games) என்பதை கிளிக் செய்யவும்பிறகு விளையாட்டுகள். கோப்புறையில் உள்ள விளையாட்டுகளில் ஒன்றைத் திறக்கஅதன் படவுருவை இரு-கிளிக் செய்யவும் (To open the Games folder, click the Start button -> click Programs ->click Games, ->and then click Games. To open one of the games in the folder, double-click its icon).

குறிப்பு
•    Windows விளையாட்டுகள் ஒரு சில Windows பதிப்புகளில் இயல்புநிலையாக நிறுவப்பட்டிருக்காது. அவற்றை நிறுவதொடக்கம் பொத்தானை (Start button ) கிளிக் செய்துஅமைப்புகள் (Settings) என்பதை கிளிக் செய்து,கட்டுப்பாட்டுப் பலகம் ( Control Panel) என்பதை கிளிக் செய்துபிறகு நிரல்கள் மற்றும் அம்சங்கள் (Programs and Features) என்பதை கிளிக் செய்யவும்பிறகு Windows அம்சங்களை இயக்கவும் அல்லது அணைக்கவும் என்பதை கிளிக் செய்யவும் (Turn Windows features on or off). Windows அம்சங்கள் உரையாடல் பெட்டியில் (Windows Features dialog box), விளையாட்டுகள் தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும் (Games check box), பிறகு சரி (OK) என்பதை கிளிக் செய்யவும். கடவுசொல்லை கேட்டால் கணினி நிர்வகிப்பாளரின் அனுமதி கோறவும்.


செஸ் டைட்டன்ஸ் (Chess Titans)

செஸ் டைட்டன்ஸ் முப்பரிமாண வரைவியலையும் அசைவூட்டத்தையும் (three-dimensional graphics and animation) சேர்த்து நாமறிந்த செஸ் விளையாட்டிற்கு உயிரூட்டுகிறது. தனிப்படுத்திக் காட்டப்படும் சதுரங்கள் நீங்கள் உங்கள் காய்களை எங்கே நகர்த்தலாம் என்று காண்பிக்கின்றன. செராமிக்பளிங்குஅல்லது மரத்தாலான போர்டைத் தேர்வு செய்யவும்போர்டை நீங்கள் விரும்பும் காட்சிக்கு சுழற்றவும்.
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: அல்லது 2
•    கடின நிலைகள்: 1 (தொடக்க நிலை) முதல் 10 (நிபுணர்) வரை
•    ஆட்ட நேரம்: 10 முதல் 60 நிமிடங்கள்


மாஜோங் டைட்டன்ஸ் (Mahjong Titans)

மாஜோங் டைட்டன்ஸ் என்பது டைல்களை வைத்து ஆடப்படும் (played with tiles) ஒரு சாலிட்டேர் விளையாட்டு (solitaire game). போர்டில் ஜோடியாக இருக்கும் டைல்களை அகற்றவும் (Remove matching pairs of tiles from the board); உங்களால் எல்லா டைல்களையும் அகற்ற முடிந்தால் நீங்கள் ஜெயித்தீர்கள்! (you win!)  எனப்பொருள். நான்கு விதமான டைல் வடிவமைப்புகள் (four different tile designs), ஆறு விதமான டைல் தளவமைப்புகள் (six different tile layouts), பல விதமாந பின்புலங்கள் (variety of backgrounds) ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இது பழங்கால மாஜோங் விளையாட்டிலிருந்து (ancient game of mahjong) மாறுபட்டதுஆனால் இதுவும் அதே போன்ற டைல்களைத்தான் பயன்படுத்துகிறது.
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: டைல் தளவமைப்புக்கேற்ப மாறும்
•    ஆட்ட நேரம்: 10 முதல் 30 நிமிடங்கள்


மைன்ஸ்வீப்பர் (Minesweeper)

மைன்ஸ்வீப்பரில்சதுரங்கள் நிரம்பிய மைதானத்தின் அடியில் மறைந்திருக்கும் எல்லா கண்ணி வெடிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சதுரத்தை கிளிக் செய்தால் அதில் என்ன இருக்கும் என்று தெரியும். சில சதுரங்களில் எண்கள் இருக்கும். அருகில் எங்கே கண்ணி வெடிகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க இவை உதவும். ஆனால் ஜாக்கிரதை — கண்ணி வெடி உள்ள ஒரு சதுரத்தை கிளிக் செய்தீர்கள் என்றால் போர்டில் இருக்கும் எல்லா கண்ணி வெடிகளும் வெடித்து ஆட்டம் முடிந்துவிடும்!
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்.



பர்பிள் ப்ளேஸ் (Purble Place)

பர்பிள் ப்ளேஸ் என்பது மூன்று விளையாட்டுகள் அடங்கிய ஒரு விளையாட்டு: காம்ஃபி கேக்ஸ் (Comfy Cakes)பர்பிள் ஷாப் (Purble Shop)பர்பிள் இணைகள் (Purble Pairs)தொடக்க நிலையில்இந்த அதிர்ஷ்ட அடிப்படையிலான ஆட்டங்கள் (whimsical games) குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்றவைஇவை நினைவுத் திறன் (in memory), ஒழுங்குவரிசையை அடையாளம் காணுதல் (pattern recognition), பகுத்தறிதல் (reasoning) ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உதவுகின்றஉயர்ந்த கடின நிலைகள்எல்லா வயது ஆட்டக்காரர்களுக்கும் சவாலாக இருக்கும்.

 i) காம்ஃபி கேக்ஸ். (Comfy Cakes)
இந்த விளையாட்டில் நீங்கள் தலைமைச் சமையல்காரர்பர்பிளின் பேக்கரியில் இருப்பீர்கள்இங்கு ஆர்டர் செய்யப்பட்ட கேக்குகளை நீங்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பேக்கரியின் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவேநீங்கள் கேக்குகளை ஆர்டர் செய்யப்பட்டபடிசரியான வடிவங்கள் (right combination of shapes), பேட்டர்கள் (batters), ஃபில்லிங் (fillings), ஐசிங் (icings), அலங்காரங்களை (decorations) ஆகியவற்றைப் பயன்படுத்தி கேக்குகளைத் தயாரிக்க வேண்டியிருக்கும். வேகமாகத் தயாரியுங்கள்ஏனென்றால் கேக்குகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்!
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்.


ii)பர்பிள் ஷாப். (Purble Shop)
இந்த விளையாட்டு உங்கள் பகுத்தறியும் திறனைச் சோதிக்கிறது (tests your powers of deduction). உங்கள் பர்பிளின் முகம் திரைக்குப் பின்னாலுள்ள மர்மமான பர்பிளுடன் பொருந்தும்படி செய்வதுதான் உங்கள் இலக்கு. அலமாரிகளிலிருந்து தலைமுடிகண்கள்மூக்குஉதடுகள் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்பிறகு உங்களிடம் எத்தனை அம்சங்கள் சரியாக இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவும்!
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்



iii) பர்பிள் இணைகள். (Purble Pairs)



இந்த விளையாட்டில்போர்டில் உள்ள படங்களில்பொருத்தமான இணைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு டைலைப் புரட்டினால் ஒரு படம் தெரியும். பிறகு அதற்கு ஜோடியான படத்தைக் கண்டுபிடிக்கவும். போர்டில் உள்ள எல்லா டைல்களையும் ஒரு பார்வை பார்க்க ஒரு "sneak peek" டோக்கனைப் பயன்படுத்தவும்.
•    ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
•    கடின நிலைகள்: தொடக்க நிலைநடு அளவுஉயர்நிலை
•    ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்

ஆவணத்தை வடிவமைத்தல் .

வடிவமைத்தல் என்பது உங்கள் ஆவணத்தில் உள்ள உரையின் தோற்றத்தையும் அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கிறது. WordPad உங்கள் ஆவணத்தில் உள்ள வடிவமைப்பை நீங்கள் எளிதாக மாற்ற உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் வெவ்வேறு எழுத்துருக்களையும் (different fonts) எழுத்துரு அளவுகளையும் (different font sizes) தேர்ந்தெடுக்கலாம், உரையை நீங்கள் விரும்பும் எந்த வண்ணத்திற்கு (color you want) வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் ஆவணத்தின் சீரமைப்பையும் (align) எளிதாக மாற்ற முடியும்.

எழுத்துரு, எழுத்துரு நடை, எழுத்துரு அளவு ஆகியவற்றை மாற்ற -To change the font, font style, or font size


1.    நீங்கள் வடிவமைப்பை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3.    எழுத்துரு பெட்டியில் (Font box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துருவைத் (font variety) தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font you want to use).
4.    எழுத்துரு நடை பெட்டியில் (Font Style box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துரு நடையைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font style you want to use).
5.    அளவு பெட்டியில் (Size box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் அளவைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு -Tip
  •    எழுத்துரு, எழுத்துரு அளவு, எழுத்துரு நடை ஆகியவற்றை மாற்ற நீங்கள் வடிவமைப்புப் பட்டியில் (format bar) உள்ள கட்டளைகளையும் (command keys) பயன்படுத்தலாம்.
வண்ணத்தை மாற்ற - To change the color
1.    நீங்கள் வண்ணத்தை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (Select the text).
2.    வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3.    வண்ணம் என்பதற்குக் கீழ் (Under Color,), நீங்கள் விரும்பும் வண்ணத்தை கிளிக் செய்யவும் (click the color that you want).
வெவ்வேறு எழுத்துருக்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆவணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்:
 

சீரமைப்பை மாற்ற - To change the alignment

உங்கள் ஆவணத்தில் உள்ள உரையை (text) (அல்லது ஆவணத்தில் உள்ள ஒரு பத்தியை (paragraph) ) இடது ஓரத்திற்கு (left margin), மையத்திற்கு (center), அல்லது வலது ஓரத்திற்குச் (right margin) சீரமைக்கலாம்.
1.    நீங்கள் சீரமைப்பை மாற்ற விரும்பும் பத்தியைத் தேர்ந்தெடுக்கவும் (select paragraph).
2.    வடிவமை மெனுவில் (format menu), பத்தி (Paragraph) என்பதை கிளிக் செய்யவும்.
3.    சீரமைப்பு பெட்டியில் (Alignment box), நீங்கள் விரும்பும் சீரமைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (click the alignment you want).
பத்திகள் வெவ்வேறு சீரமைப்புகளில் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தில் பார்க்கலாம்:
 

ஆவணத்தைச் சேமித்தல் - Saving your document

நீங்கள் உங்கள் ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது (when editing the documents) அவ்வப்போது (periodically) அதைச் சேமிப்பது (to save) நல்லது. அப்போதுதான் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் கணினி இயங்குவது நின்றுவிட்டால் கூட நீங்கள் செய்த பணி எதுவும் தொலைந்துபோகாது. ஆவணத்தைச் சேமித்தால்தான் நீங்கள் விரும்பும்போது அதில் மீண்டும் பணிபுரியவும் முடியும்.

ஆவணத்தைச் சேமிக்க - To save the document

•    கோப்பு மெனுவில் (file menu), சேமி (save) என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஆவணத்தை இதற்கு முன் சேமிக்கவில்லை எனில், ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (document name or file name, eg: schoolwork.doc ) தந்து சேமிக்க உங்கள் கணினியில் உள்ள ஓர் இருப்பிடத்தைக் (file or folder directory location) குறிப்பிடும்படி உங்களிடம் கேட்கப்படும்:
1.    இதில் சேமி பெட்டியில் (Save in box), நீங்கள் ஆவணத்தைச் சேமிக்க விரும்பும் இருப்பிடத்தை கிளிக் செய்யவும் (click the location where you want to save the document).
2.    கோப்பின் பெயர் பெட்டியில் (File name box), உங்கள் ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (type a name ) தட்டச்சு செய்யவும்.
3.    சேமி (Save) என்பதை கிளிக் செய்யவும்.

ஆவணத்தை அச்சிடுதல் Printing your document

கோப்பு மெனுவில் (File menu), அச்சிடு (Print) என்பதை கிளிக் செய்யவும். அச்சிடு உரையாடல் பெட்டியில் (Print dialog box), நீங்கள் எந்தப் பக்கங்களை அச்சிட விரும்புகிறீர்கள் (Page Range ) என்பதையும் எத்தனை நகல்கள் (Number of copies ) என்பதையும் பக்க வரம்பு பெட்டியிலும்(Page Range box) நகல்களின் எண்ணிக்கை பெட்டியிலும் (Number of copies box) குறிப்பிடவும். முடிந்ததும், அச்சிடு (Print ) என்பதை கிளிக் செய்யவும்.

WordPad -ஐப் பயன்படுத்துதல்.

Windows -இல் உள்ள ஓர் அடிப்படையான சொற்செயலி WordPad ஆகும். சொற்செயலி என்பது உரை ஆவணங்களை உருவாக்கவும் திருத்தவும் அச்சிடவும் பயன்படும் ஒரு கணினி நிரல் (word processing program). WordPad -ஐக் கொண்டு கடிதங்கள் (letters), அறிக்கைகள் (book reports), மற்றும் பல எளிய ஆவணங்களை (simple documents) நீங்கள் தட்டச்சு செய்யலாம். உரையின் தோற்றத்தை மாற்றுதல் (the text looks), வாக்கியங்களையும் பத்திகளையும் (sentences and paragraphs) துரிதமாக நகர்த்துதல், ஆவணங்களுக்குள்ளும் ஒரு ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திலும் உரையை நகலெடுத்து ஒட்டுவது (copy and paste text within and between documents) போன்ற பணிகளையும் நீங்கள் செய்யலாம்.

WordPad சாளரம் -The WordPad window

WordPad -ஐத் திறக்க, தொடக்கம் பொத்தானை (windows start menu button)  கிளிக் செய்து,  நிரல்கள் என்பதைச் சுட்டியால் குறிப்பிட்டு அதன்வழியாக  துணைக்கருவிகள் என்பவைக்கு சென்று, பிறகு WordPad -ஐ கிளிக் செய்யவும்.
 

WordPad சாளரத்தில் நான்கு முக்கியப் பகுதிகள் இருக்கின்றன:

கருவிப்பட்டி(toolbar): கருவிப்பட்டியில் சேமித்தல் (saving), அச்சிடுதல் (printing) ஆகியவை உள்பட அடிப்படையான கட்டளைகளுக்குப் (basic commands) பொத்தான்கள் இருக்கின்றன. ஒரு பொத்தான் (command button) என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள, உங்கள் சுட்டியின் குறிப்பானை (mouse pointer) அந்த பொத்தான் மேல் வைக்கவும். ஒரு பெட்டி தோன்றி அந்தப் கட்டளைப் பொத்தானின் செயல்பாட்டைக் சுருக்கமாக விளக்கும்.

வடிவமைப்புப் பட்டி (format bar): வடிவமைப்புப் பட்டியில்(format bar) உங்கள் ஆவணத்தில் இருக்கும் உரையை ( text in your document) வடிவமைக்கப்( to decorate in different format) பயன்படுத்துவதற்கான பொத்தான்கள் இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் உங்கள் உரையின்(text data) எழுத்துரு (font), வண்ணம் (color), சீரமைப்பு (alignment) ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.

அளவுகோல் (ruler): உங்கள் ஆவணத்தில் (document) உள்ள உரையின் தளவமைப்பையும் (layout) உரை வைக்கப்பட்டுள்ள ( placement of the text) இடத்தையும் அளவுகோலைப் (ruler) பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.

ஆவணப் பகுதி (document area): இங்குதான் நீங்கள் உங்கள் ஆவணத்தைத் தட்டச்சு செய்வீர்கள் (you type your document), உரையில் மாற்றங்கள் செய்வீர்கள் (make changes to the text), வடிவமைப்பைச் செயல்படுத்துவீர்கள் (apply your formatting on the document).

உரையைத் தட்டச்சு செய்தல் - typing text

நீங்கள் பணிபுரியத் தயாரானதும், WordPad -இன் ஆவணப் பகுதியில் தட்டச்சு செய்யவும். இடஞ்சுட்டி (cursor ( | ) ) என்ற மின்னும் செங்குத்துக் கோடு ஒன்று, நீங்கள் அடுத்துத் தட்டச்சு செய்யும் உரை எங்கு வரும்  (where the next text that you type will appear) என்று காண்பிக்கும். இடஞ்சுட்டியை உரைக்குள் நகர்த்த (To move the cursor within text), இடஞ்சுட்டி எங்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கு கிளிக் செய்யவும் (click where you want the cursor to appear).

தட்டச்சுப் பொறியைப் (typewriter) பயன்படுத்தும்போது அடுத்த வரியைத் தொடங்க ENTER விசையை அழுத்த வேண்டியிருக்கும்; WordPad -இல் அது தேவையில்லை. நீங்கள் ஒரு வரியைத் தட்டச்சு செய்து முடித்ததும் WordPad தானாகவே அடுத்த வரியைத் தொடங்கிவிடும். புதிய பத்தி (new paragraph) ஒன்றைத் தொடங்க விரும்பினால் ENTER விசையை (key) அழுத்தவும்.

உரையைத் தேர்ந்தெடுத்தல் - selecting the text

உங்கள் ஆவணத்தில் உள்ள உரையில் நகலெடுத்தல் (to copy), வடிவமைத்தல் (to format) போல ஏதேனும் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் உரையைத் தேர்ந்தெடுக்க (select) வேண்டும். உரையைத் தேர்ந்தெடுக்க, சுட்டியின் குறிப்பானை (mouse pointer) நீங்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்க விரும்பும் இடத்தின் இடப்பக்கத்தில் (left side of the text) வைத்துக்கொள்ளவும். குறிப்பானைச் சரியான இடத்தில் வைத்ததும், இடப்பக்கச் சுட்டிப் பொத்தானை கிளிக் செய்து அழுத்தி வைத்துக்கொண்டு, நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் உரையின் மேல் குறிப்பானை இழுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட உரை தனிப்படுத்திக் காட்டப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்து முடித்த பின், சுட்டிப் பொத்தானை விடுவிக்கவும்.


உரையை நகலெடுத்தலும் நகர்த்துதலும் - Copying and moving text

உங்கள் ஆவணத்தின் (digital document) ஒரு பகுதியில் உள்ள உரை (text) இன்னொரு பகுதியில் வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அந்த உரையை மீண்டும் தட்டச்சு செய்யாமலே அதை நகர்த்த இரண்டு வழிகள் இருக்கின்றன: நீங்கள் அதை நகலெடுத்து (to copy) வேறொரு இடத்தில் ஒட்டலாம் (past), அல்லது அதை வேறொரு இடத்திற்கு நகர்த்தலாம் (move it to another location).

 i) நீங்கள் உரையை நகலெடுக்கும்போது அது நகலகத்தில் (clipboard) வைக்கப்படும். பிறகு அதை நீங்கள் வேறு இடத்தில் ஒட்டலாம். மூல உரை (original text ) அப்படியே இருக்கும்.
 ii) நீங்கள் உரையை வேறொரு இடத்திற்கு நகர்த்தும்போது, மூல உரையானது (original text) அது முதலில் இருந்த இடத்தில் இருக்காது. உங்கள் ஆவணத்தில் இருக்கும் வாக்கியங்களையும் (sentences) பத்திகளையும் (paragraphs) மாற்றியமைக்க விரும்பினால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

உரையை நகலெடுத்து வேறொரு இடத்தில் ஒட்டுதல் - To copy text and paste it in another location

1.    நீங்கள் நகலெடுக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    திருத்து மெனுவில் (Edit menu), நகலெடு (copy) என்பதை கிளிக் செய்யவும்.
3.    நகலெடுத்த உரையை எங்கு செருக விரும்புகிறீர்களோ (want to insert the copied text) அந்த இடத்திற்குக் குறிப்பானை நகர்த்திச் செல்லவும்.
4.    திருத்து மெனுவில் (Edit menu), ஒட்டு (paste) என்பதை கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு - Tip
  •    நீங்கள் தேர்ந்தெடுத்த உரையைத் துரிதமாக நகலெடுக்க (To quickly copy ), CTRL+C அழுத்தவும். உரையைத் துரிதமாக ஒட்டுவதற்கு CTRL+V அழுத்தவும்.
உரையை வேறு இடத்திற்கு நகர்த்த - To move text to a different location

1.    நீங்கள் நகர்த்த விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2.    நீங்கள் தேர்ந்தெடுத்த உரையைச் சுட்டவும் (point the text), பிறகு இடது சுட்டிப் பொத்தானை கிளிக் செய்து அழுத்தி வைத்துக்கொள்ளவும் (press and hold left button of the mouse).
3.    உரை உங்கள் ஆவணத்தில் எங்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு உரையை இழுத்துச் (to drag) செல்லவும்.

உரையைச் செருவதும் நீக்குவதும் - Inserting and deleting text


உரையை எங்கு வேண்டுமானாலும் செருகுவதையும்(inserting text) நீக்குவதையும் (deleting text),  WordPad எளிதாக்குகிறது. உரையைச் செருக, அதை நீங்கள் செருக விரும்பும் இடத்தில் கிளிக் செய்து தட்டச்சு செய்யத் தொடங்கவும். உரையை நீக்க, நீங்கள் நீக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, DELETE விசையை அழுத்தவும் (press delete key).

உதவிக்குறிப்பு - Tip
•    உங்கள் ஆவணத்தில் உள்ள உரையைத் திருத்தும்போது நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால் அதன் தாக்கத்தை செயல்-தவிர்க்கலாம் (undo). நீங்கள் கடைசியாகச் செய்த செயலைச் செயல்-தவிர்க்க(undo) CTRL+Z அழுத்தவும்.

வலையில் தேடுதல்.

இணையத்தில் கோடிக்கணக்கான வலைப்பக்கங்கள் இருப்பதால், ஒவ்வொரு வலைப்பக்கமாகச் சென்று உங்களுக்குத் தேவையான ஒரு தகவலைக் கண்டுபிடிப்பது அசாத்தியம். நல்ல வேளையாக, அதற்கு இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள் தரும் சொற்களுக்கு அல்லது சொற்றொடர்களுக்கு மிகவும் பொருத்தமாந பக்கங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு தேடு பொறியைப்(search engine) பயன்படுத்தலாம். Google, Yahoo! Search, MSN Search, AOL Search, Ask.com போன்ற சில முக்கியமான தேடு பொறிகள்(search engine) இருக்கின்றன. நீங்கள் நேரடியாக எந்தத் தேடு பொறியின் வலைத்தளத்திலிருந்தும்(directly from any search engine's site) வலையில் தேடலாம்(can search web). அல்லது, முதலில் ஒரு தேடல் தளத்திற்குச் செல்லும் வேலையை மிச்சப்படுத்த, Internet Explorer -இல் உள்ள தேடு பெட்டியைப்(Search box)  பயன்படுத்தலாம்:

நீங்கள் முதல் முறையாகத் தேடு பெட்டியைப் (search box) பயன்படுத்துவதற்கு முன் இயல்புநிலை தேடல் சேவை (default search provider) ஒன்றை  தேர்வு செய்யவும். அதாவது நீங்கள் ஒவ்வொரு முறையும் தேடும்போதும் Internet Explorer தேட வேண்டிய தேடு பொறியை (search box) தேர்வு செய்யவும். நீங்கள் தேடல் சேவை (search service provider)எதையும் தேர்வு செய்யவில்லை என்றால் Windows Live Search பயன்படுத்தப்படும். (உங்கள் கணினியின் உற்பத்தியாளர் வேறொரு இயல்புநிலை தேடல் சேவையை அமைத்திருக்கக்கூடும்.)

தேடு பெட்டியைப் பயன்படுத்தி வலையில் தேட - To search the web using the search box
1.      உங்களுக்கு ஆர்வம் உள்ள ஒரு தலைப்பு பற்றிச் சில சொற்களை(word) அல்லது ஒரு சொற்றொடரை(phrase) உதாரணமாக, "அசைவ சமையல் குறிப்புகள்" என தேடு பெட்டியில் தட்டச்சு செய்யவும். உங்கள் தேடல் தொடர் நீங்கள் தேட விரும்பும் விஷயத்தைத் துல்லியமாக விவரிக்க வேண்டும்.
2.      ENTER விசையை அழுத்தவும் அல்லது தேடு பொத்தானை(search button) கிளிக் செய்யவும்.
3.      பத்துக்கு மேற்பட்ட தேடல் முடிவுகள் (search results) கொண்ட ஒரு பக்கம் தோன்றும். அவற்றில் ஒரு வலைத்தளத்திற்குச் செல்ல ஒரு முடிவை கிளிக் செய்யவும். நீங்கள் தேடுவது, முடிவுகள் (search results) பக்கத்தில் இல்லை என்றால், அந்தப் பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள அடுத்து என்பதை கிளிக் செய்து மேலும் பல முடிவுகளைப் பார்க்கவும், அல்லது மீண்டும் புதிதாகத் தேடவும்.

குறிப்பு:
o        சில தேடல் முடிவுகள் விளம்பரங்களாக இருக்கும். இவை பொதுவாக "Sponsored Sites" அல்லது "Sponsored Links" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிடித்த வலைப்பக்கங்களைச் சேமித்தல் - Saving favorite webpages.
நீங்கள் அடிக்கடி பார்க்கத்தக்க வலைத்தளம் ஒன்றைக் கண்டுபிடித்தால் அதை Internet Explorer -இல் ஒரு பிடித்தவை இணைப்பாகச்(Favorites link) சேமிக்கவும். இதன் மூலம் நீங்கள் அந்த வலைத்தளத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்ரால் பிடித்தவை பட்டியலில்(Favorites list) அதை கிளிக் செய்தாலே போதும்; அதன் வலை முகவரியை நினைவில் கொள்ளத் தேவையில்லை.

ஒரு வலைப்பக்கத்தைப் பிடித்தவை இணைப்பாகச் சேமிக்க (to save webpage as favorite)

    1.      Internet Explorer -இல், நீங்கள் பிடித்தவை இணைப்பாகச் சேமிக்க விரும்பும் வலைப்பக்கத்திற்குச்(go to your website) செல்லவும்.
2.      பிடித்தவையில் சேர் பொத்தானை (Add to Favorites என்ற button)கிளிக் செய்துவிட்டு,  பிறகு பிடித்தவையில் சேர்(Add to Favorites link) என்பதை கிளிக் செய்யவும்.
3.      பெயர் பெட்டியில் (Name box) அந்த வலைப்பக்கத்திற்கு ஒரு பெயரைத் தட்டச்சு(type a name for the webpage,) செய்து சேர்(Add) என்பதை கிளிக் செய்யவும்.

ஒரு பிடித்தவை இணைப்பைத் திறக்க (to open a favorite)

1.      Internet Explorer -இல் பிடித்தவை மையம்(Favorites Center) என்ற பொத்தானை(button) கிளிக் செய்யவும்.
2.      பிடித்தவை பொத்தான்(Favorites button)  முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை(not selected already) என்றால் favorite buttonஐ கிளிக் செய்யவும்.
3.      பிடித்தவை பட்டியலில் (in the Favorites list), நீங்கள் திறக்க விரும்பும் வலைப்பக்கத்தை(webpageஐ) கிளிக் செய்யவும்.
பிடித்தவை இணைப்புகள்(favorite-links) ஏராளமாக இருந்தால், அவற்றைக் கோப்புறைகளாக(file)வும் ஒழுங்குபடுத்தலாம்.

வரலாறு பட்டியலைப் பயன்படுத்துதல் - using the history list.

நீங்கள் கடந்த 20 நாட்களில் பார்த்த ஒரு வலைப்பக்கத்தை மீண்டும் பார்க்க வரலாறு பட்டியலைப் பயன்படுத்தலாம்.
1.      Internet Explorer -இல் பிடித்தவை மையம்(Favorites Center) பொத்தானை(button) கிளிக் செய்யவும்.
2.      வரலாறு பொத்தான்(History button) முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை(not already selected) என்றால் அதை கிளிக் செய்யவும்.
3.      வரலாறு பட்டியலில்(History list) ஒரு நாளை(day)  அல்லது வாரத்தை(week) கிளிக் செய்யவும், பிறகு ஒரு வலைத்தளத்தின் பெயரை(website name) கிளிக் செய்யவும். பிறகு அந்தப் பட்டியல் விரிந்து, நீங்கள் அந்த வலைத்தளத்தில் பார்த்த வலைப்பக்கங்களைக் காண்பிக்கும்.
4.      நீங்கள் திறக்க விரும்பும் வலைப்பக்கத்தை(webpage)  கிளிக் செய்யவும்.
 
ஒரே சமயத்தில் பல வலைப்பக்கங்களைத் திறத்தல் - opening multiple webpages
ஏதேனும் ஒரு காரணமாக, ஒரு வலைப்பக்கத்தை மூடாமலே ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பக்கத்தைத் திறக்க வேண்டும்மெனில். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, Internet Explorer, நீங்கள் புதிதாகத் திறக்க விரும்பும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு தாவலை(tab) உருவாக்கி தறுகிறது. தாவல்களைப்(tabs) பயன்படுத்தி ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் துரிதமாக மாறலாம்; எல்லா பக்கங்களையும் ஒரே சமயத்தில் கூடப் பார்க்கலாம்.
ஒரு வலைப்பக்கத்தைப் புதிய தாவலில் திறக்க, புதிய தாவல் பொத்தானை(New Tab button) கிளிக் செய்யவும்:

அந்தப் பொத்தானை கிளிக் செய்ததும், ஒரு புதிய தாவலில்(new tabல்) வெற்றுப் பக்கம்(blank page) ஒன்று திறக்கும்.

இப்போது ஒரு URL -ஐத் தட்டச்சு செய்து, அல்லது தேடல் பெட்டியைப் பயன்படுத்தி, அல்லது உங்கள் பிடித்தவை பட்டியலிலிருந்தோ வரலாறு பட்டியலிலிருந்தோ தேர்வு செய்து எந்த வலைப்பக்கத்தையும் திறக்கலாம். பல வலைப்பக்கங்களைத் திறந்ததும், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாறுவதற்குத் தாவல்களை(tabsஐ) கிளிக் செய்யவும்.
திறந்திருக்கும் எல்லா வலைப்பக்கங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க, விரைவுத் தாவல்கள்(Quick Tabs) பொத்தானை கிளிக் செய்யவும். ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் ஒரு சிறு வடிவம் தோன்றும்(miniature version). ஒரு பக்கத்திற்கு மாற அந்தப் பக்கத்தின் சிறு வடிவத்தை கிளிக் செய்யவும்.

திறந்திருக்கும் அனைத்து வலைப்பக்கங்களையும் பார்க்க விரைவுத் தாவல்கள்(quick tabs) பொத்தானைப் பயன்படுத்தவும்
ஒரு தாவலை மூடுவதற்கு(to close tabs), அந்தத் தாவலின் வலப்பக்கத்தில்(tabs right side) உள்ள மூடு(close) பொத்தானை கிளிக் செய்யவும்.

வலைக்குச் செல்ல.

ஒரு இணைய இணைப்பை(internet connection) உருவாக்கியப்பின் Internet Explorer மூலம் வலையை நீங்கள் அணுகலாம். Internet Explorer -என்பது Windows Operating system -இல் இருக்கும் ஒரு வலை உலாவி (Microsoft corporation web browser). நீங்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள வேறு ஒரு வலை உலாவிகளையும்(other web browsers Firefox)  பயன்படுத்தலாம்.
Internet explorer -ஐத் தொடங்க
தொடக்கம் பொத்தானை(start button) கிளிக் செய்து, நிரல்கள்(programs) என்பதன் வழியாக சென்று,  பிறகு Internet Explorer என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் Internet Explorer -ஐத் தொடங்கும்போது, அது முகப்புப் பக்கமாக (homepageஆக) அமைக்கப்பட்டுள்ள வலைப்பக்கத்திற்குச்(webpageஐ open செய்யும்) செல்லும். இயல்புநிலையாக(by default), MSN.com என்ற வலைதளத்தை முகப்புப் பக்கமாக(homepage) அமைக்கப்பட்டுள்ளது. இது பல வகையான தகவல்களையும் சேவைகளையும் கொண்ட ஒரு Microsoft வலைத்தளம். (உங்கள் கணினியின் உற்பத்தியாளர் வேறொரு வலைப்பக்கத்தை முகப்புப் பக்கமாக அமைத்திருக்கக்கூடும்.) இருந்தாலும், நீங்கள் எந்தப் பக்கத்தையும் (அல்லது ஒரு வெற்றுப் பக்கத்தை) உங்கள் முகப்புப் பக்கமாக அமைத்துக்கொள்ளலாம்.
உதவிக்குறிப்பு
·         நீங்கள் வேறு வலைத்தளங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்கள் முகப்புப் பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல Internet Explorer -இல் உள்ள முகப்பு பொத்தானை(home page button)கிளிக் செய்யவும்.

ஒரு வலை முகவரியை உள்ளிடுதல் - entering a web address

ஒவ்வொரு வீட்டிற்கும் அதற்குரிய முகவரி எப்படி இருக்கிறதோ, அது போல ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் அதற்கென்று தனியாக வலை முகவரி உள்ளது. இந்த முகவரிக்கு யூனிஃபார்ம் ரிசோர்ஸ் லொகேட்டர் (URL uniform resource locator) என்று பெயர். உதாரணமாக, Microsoft -இன் பிரதான வலைத்தளத்தின் URL(முகவரி), http://www.microsoft.com.
ஒரு வலைப்பக்கத்தின் URL உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் அதை நேரடியாக Internet Explorer -இல் தட்டச்சு செய்யலாம்:
1.      முகவரி பெட்டியில்(Address box) URL -ஐத் தட்டச்சு செய்யவும்.
2.      அந்த வலைத்தளத்திற்குச் செல்ல, செல் பொத்தானை(Go button) கிளிக் செய்யவும் அல்லது ENTER விசையை(key) அழுத்தவும்.
URLகளைத் தட்டச்சு செய்ய முகவரி பெட்டியைப் (address box) பயன்படுத்தவும்.
 
    
·         நீங்கள் http:// என்பதைத் தட்டச்சு செய்யத் தேவையில்லை. உதாரணமாக, நீங்கள் www.microsoft.com என்று தட்டச்சு செய்தால்  Internet Explorer மிச்சத்தை நிரப்பிவிடும்.
·         ".com" என்று முடியும் ஒரு URL -ஐத் துரிதமாகத் தட்டச்சு (to enter quickly) செய்ய, "www." என்பதற்கும் ".com" என்பதற்கும் இடையிலுள்ள பகுதியைத்(Microsoft என்பதை மட்டும்) தட்டச்சு செய்துவிட்டு CTRL+ENTER அழுத்தவும். பிறகு நேரடியாக மைக்ரோசாப்ட் வலைதளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்.

அடிப்படை வழிசெலுத்தல் - Basic navigation
  • இணைப்புகளைப் பயன்படுத்துதல் - Using links. பெரும்பாலான வலைப்பக்கங்களில் ஏராளமான இணைப்புகள் (dozens of links) இருக்கும். சிலவற்றில்நூற்றுக்கணக்கில் கூட இருக்கும்(hundreds of links). ஒரு வலைப்பக்கத்திலிருந்து இன்னொருவலைப்பக்கத்திற்குச் செல்ல ஏதேனும் ஒரு இணைப்பை(link) கிளிக் செய்யவும். இருந்தாலும், ஒருவலைப்பக்கத்தில் எவை இணைப்புகள் என்று கண்டறிவது எப்போதும் எளிதல்ல(is not always easy). இணைப்புகள்உரையாகவோ படங்களாகவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கலாம். உரை இணைப்புகள்பெரும்பாலும் வண்ணத்திலும் அடிக்கோடிடப்பட்டும் இருக்கும்(Text links often appear as colored and underlined); ஆனால் இணைப்பு நடைகள்(link styles) ஒவ்வொரு வலைத்தளத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
ஒரு உரை(text) அல்லது படம்(image) இணைப்பா இல்லையா(weather it is link or not a link) என்று கண்டுபிடிக்க,  அந்த உரையை உங்கள் சுட்டியின் குறிப்பானால் தொடவும். அது இணைப்பாக இருந்தால் இரண்டு விஷயங்கள் நடக்கும்:
·         சுட்டிக் குறிப்பான் (mouse pointer), சுட்டிக்காட்டும் விரலுடன் கூடிய ஒரு கையாக மாறும் (hand with a pointing finger).
·         உங்கள் வலை உலாவியின் நிலைப் பட்டியில்(status bar of your web browser) ஒரு URL தெரியும். நீங்கள் கிளிக் செய்தால்எந்த வலைத்தளம் திறக்கும் என்று இது காண்பிக்கும்.

ஒரு இணைப்பைச் சுட்டினால் (if you point to the link) சுட்டிக் குறிப்பான் மாறுகிறது (mouse pointer will change), நிலைப்பட்டியில்(in the statusbar) வலைப்பக்கத்தின் URL காண்பிக்கப்படுகிறது(displays webpage url).

  • பின் மற்றும் முன் பொத்தான்களைப் பயன்படுத்துதல்(Using the Back and Forward buttons):  நீங்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் என்றுஉலாவிக்கொண்டிருக்கும்போது Internet Explorer நீங்கள் எந்த தளதத்திற்கு போகிறீர்கள் என்றதகவலைப் பதிவு செய்துகொள்கிறது. முந்தைய பக்கத்திற்குத்(previous page) திரும்பிச் செல்ல, பின்பொத்தானை(back button) கிளிக் செய்யவும். இன்னும் சில பக்கங்களுக்குத்திரும்பிச் செல்ல, பின்பொத்தானைப் பல முறை கிளிக்செய்யவும் (Click the Back button several times).பின்பொத்தானை கிளிக் செய்த பிறகு, பாதையில்முன்னே செல்லமுன்பொத்தானை கிளிக் செய்யலாம்.

  • சமீபத்திய பக்கங்கள் மெனுவைப் பயன்படுத்துதல் Using the Recent Pages menu: சமீபத்தில் பார்த்த(visited in your current session) ஒரு பக்கத்திற்குத்(webpage) திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் பின் அல்லது முன் பொத்தான்களைத் திரும்பத் திரும்ப கிளிக் செய்ய விரும்பவில்லை என்றால் சமீபத்திய பக்கங்கள் மெனுவைப்(Recent Pages menu) பயன்படுத்தவும். முன் பொத்தானுக்கு அருகில் உள்ள அம்பை(arrow next to the Forward) கிளிக் செய்து, பட்டியலிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.