சனி, 6 ஏப்ரல், 2013

உங்கள் கணினியைச் சரியான முறையில் அணைத்தல்.

நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தி முடித்த பின் அதைச் சரியான முறையில் அணைப்பது(turn it off properly) முக்கியம் மின்சக்தியைச் சேமிப்பதற்கு மட்டுமல்ல, உங்கள் தரவு(your data) சேமிக்கப்படுவதையும் உங்கள் கணினி மேலும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்வதற்கும் சரியானமுறையில் அணைப்பது முக்கியம். அதையெல்லாம் விட, உங்கள் கணினி நீங்கள் அடுத்த முறை அதைப் பயன்படுத்தும்போது மேலும் விரைவாகத் தொடங்கும்.


தொடக்க மெனுவில் உள்ள சக்தி பொத்தானைப் பயன்படுத்தவும்.

உங்கள் கணினியை அணைக்க, தொடக்கம் பொத்தானை(start button) கிளிக் செய்யவும், பிறகு தொடக்க மெனுவின்(start menu) கீழ் வலப்பக்க மூலையில் உள்ள சக்தி பொத்தானை(power button or shutdown link) கிளிக் செய்யவும்.
நீங்கள் இந்தப் பொத்தானை கிளிக் செய்ததும் உங்கள் கணினி உறக்கப் பயன்முறைக்குப் போய்விடும்(goes to sleep- அதாவது இயக்கமுறைமையிலிருந்து உறக்கமுறைமைக்கு சென்றுவிடும்). அப்போது Windows-operating system (windows-இயக்கமுறைமை(operating system) ) பாதியில் விட்ட உங்கள் பணியைத் தானாகச் சேமிக்கும், காட்சி அணைக்கப்படும்(display turns off), கணினியின் விசிறி எழுப்பும் சத்தம் நின்றுவிடும். பொதுவாக, உங்கள் கணினிக்கு வெளிப்பக்கம் இருக்கும் ஒரு விளக்கு சிமிட்டி கொண்டே இருக்கும் அல்லது மஞ்சளாக மாறி உங்கள் கணினி உறங்குவதைச்(computer is sleeping) சுட்டிக்காட்டும். இவை அனைத்தும் நடக்கச் சில நொடிகளே ஆகும்.
Windows உங்கள் பணியைச் சேமிக்கும் என்பதால் உங்கள் கணினியை உறங்க வைப்பதற்கு முன் நிரல்கள், கோப்புகள் ஆகியவற்றை மூடத் தேவையில்லை(dont need to minimize the program screens). அடுத்த முறை நீங்கள் கணினியை இயக்கும்போது (தேவைப்பட்டால் கடவுச்சொல்லையும்-password உள்ளிடும்போது), அதன் திரை(screen) நீங்கள் உங்கள் கணினியை அணைக்கும்போது(when turned off your computer) இருந்தது போல் இருக்கும்.
உங்கள் கணினிக்கு விழிப்பூட்ட(To wake your computer), உங்கள் கணினியின் பெட்டியில் உள்ள சக்தி பொத்தானை(power button)  அழுத்தவும். Windows தொடங்குவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை என்பதால், உங்கள் கணினி சில நொடிகளில் விழித்தெழும்; நீங்களும் கிட்டத்தட்ட உடனடியாகவே உங்கள் பணியைத் விட்ட இடத்தல் இருந்து தொடரலாம்(windows can resume work almost immediately).

குறிப்பு

·         உங்கள் கணினி உறங்கும்போது (While your computer is sleeping), உங்கள் பணியைத் தன் நினைவகத்தில் வைத்திருக்க அது மிகச் சிறிதளவு மின்சக்தியையே பயன்படுத்தும். நீங்கள் ஒரு செல்லிடக் கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் கவலை வேண்டாம் மின்கலம் காலியாகிவிடாது. உங்கள் கணினி உறங்கத் தொடங்கிப் பல மணிநேரங்கள் ஆன பின், அல்லது மின்கலத்தில் சக்தி குறைவாக இருந்தால், உங்கள் பணி நிலை வட்டில் சேமிக்கப்படும், பிறகு உங்கள் கணினி சக்தியைப் பயன்படுத்தாமலே(drawing no power) முழுவதுமாக அணையும்(shutdown).

உங்கள் சக்தி பொத்தான் வேறு மாதிரி இருக்கக் காரணம்.

தொடக்க மெனுவின்(start menu) சக்தி பொத்தானால்(power button) தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடியும். சில சூழ்நிலைகளில் இந்தப் பொத்தான் இப்படி இருக்கும்:
இந்த வடிவத்தில் உள்ள பொத்தானை நீங்கள் அழுத்தியதும் உங்கள் கணினி அணையும். உங்கள் கணினியை உறங்கவைப்பது போலல்லாமல், கணினியை நிறுத்தினால்(if you shutting down computer) திறந்திருக்கும் எல்லா நிரல்களும் மட்டுமின்றி Windows -உம் மூடப்படும்; பிறகு உங்கள் திரையும் கணினியும் முழுமையாக அணையும். நிறுத்தும்போது உங்கள் பணி சேமிக்கப்படாது(shutting down doesn't save your work) என்பதால், நிறுத்துவதற்கு முன் உங்கள் கோப்புகளை(files) நீங்கள் சேமிக்க வேண்டும்.
சக்தி பொத்தான் பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் கணினியை நிறுத்தும்:
·         உங்கள் கணினி வன்பொருளில்(computer hardware) உறக்கம் என்ற வசதி(sleep option) இல்லாதபோது.
·         நீங்கள் அல்லது உங்கள் கணினி நிர்வாகி, சக்தி பொத்தானை(power button) அழுத்தினால் எப்போதும் கணினி அணையும்படி கட்டளையிட்டிருந்தால் கணினி முழுவதுமாக அணைந்துவடும்.
1.சக்தி விருப்பங்களை(power option) கிளிக் செய்து திறக்கவும்.
2.தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சக்தி திட்டத்தில் திட்ட அமைப்புகளை(change power plan) மாற்று என்பதை கிளிக் செய்யவும்.
3.திட்ட அமைப்புகளைத் திருத்து(Edit Plan Setting ) என்ற உரையாடல் பெட்டியில், மேம்பட்ட சக்தி அமைப்புகளை மாற்று (Change advanced power settings) என்பதை கிளிக் செய்யவும்.
4.சக்தி விருப்பங்கள்(Power Options) உரையாடல் பெட்டியில்(dialog box) சக்தி பொத்தான்கள் மற்றும் மூடி (Power buttons and lid) என்பதற்கு அருகில் உள்ள கூட்டல் குறியை (+) கிளிக் செய்து பட்டியலை விரிக்கவும்.
5.தொடக்க மெனு சக்தி பொத்தான்(Start menu power button) என்பதற்கு அருகில் உள்ள கூட்டல் குறியை (+) கிளிக் செய்து பட்டியலை விரிக்கவும்(expand the list).
6.திரைப்பலகக் கணினி(desktop computer) என்றால் அமைப்பு(Setting) பட்டியலில் சக்தி பொத்தானுக்கு உரிய அமைப்பு ஒன்றை கிளிக் செய்யவும்.
அல்லதுசெல்லிடக் கணினி(mobile PC) என்றால் மின்கலத்தில்(On battery ) மற்றும் செருகப்பட்டுள்ளவை பட்டியல்களில்(Plugged in list) சக்தி பொத்தானுக்குரிய அமைப்புகளை கிளிக் செய்யவும்.
7.சரி(OK) என்பதை கிளிக் செய்யவும்.
சக்தி பொத்தான் இன்னும் வேரொரு வடிவத்திலும் வரலாம். உங்கள் கணினியைத் தானாகப் புதுப்பித்தல்களை பெறும்படி அமைத்திருந்தால்(receive updates automatically), அந்தப் புதுப்பித்தல்கள் நிறுவப்படுவதற்குத் தயாராக(ready to install) இருந்தால், இந்தப் பொத்தான் ஒரு கேடயச்(shield) சின்னத்துடன் தோன்றும்.

நீங்கள் இந்த வடிவத்தில் உள்ள பொத்தானை கிளிக் செய்ததும், நிறுவல் நிறைவடைந்த பின்(after completing the installation) Windows அந்தப் புதுப்பித்தல்களை நிறுவிவிட்டு உங்கள் கணினியை நிறுத்துகிறது.

குறிப்பு
 
·         உங்கள் கணினியை உறக்கத்திலிருந்து விழிப்பூட்டுவதற்கு(waking your computer from sleep) ஆகும் நேரத்தை விட, அதை நிறுத்தப்பட்ட நிலையிலிருந்து தொடங்குவதற்கு(to start computer form the shutdown stage) அதிக நேரம் ஆகும் உங்கள் கணினியின் வேகத்தைப் பொருத்துப் பொதுவாக 30 நொடிகள் அல்லது அதற்கு மேல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக