சனி, 6 ஏப்ரல், 2013

டிஜிட்டல் படங்களைக் கையாளுதல்.

முன்பெல்லாம் புகைப்படங்களைத் திருத்தவும் அச்சிடவும் ஒரு இருட்டறை அல்லது தொழில்முறை புகைப்பட ஆய்வகம் தேவைப்பட்டது; தொழில்நுட்பப் பயிற்சியும்தான். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் கேமராக்களும் கணினிகளும் புகைப்படத் துறையில் ஒரு புரட்சியையே கொண்டுவந்திருக்கின்றன. இன்று யார் வேண்டுமானாலும் புகைப்படங்களை வீட்டிலேயே திருத்த முடியும், அச்சிட முடியும். Windows -இல் இருக்கும் கருவிகளைக் கொண்டு உங்கள் டிஜிட்டல் படங்களைப் பார்ப்பது, ஒழுங்குபடுத்துவது, திருத்துவது, பகிர்வது, அச்சிடுவது ஆகியவற்றை எப்படிச் செய்வது என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள்.



படங்களை உங்கள் கேமராவிலிருந்து உங்கள் கணினிக்கு மாற்றுதல் - getting pictures from your into your computer.

பெரும்பாலான டிஜிட்டல் கேமராக்கள் காம்பாக்ட் ஃப்ளாஷ், செக்யூர் டிஜிட்டல் (SD) அட்டை போன்ற ஒரு அதிவிரைவு நினைவக அட்டையில்-flash memory  card படங்களை சேமித்துவைக்கின்றன. ஒரு நினைவக அட்டை-memory card முழுக்க உங்கள் படங்கள் நிரம்பியிருந்தால் நீங்கள் அந்தப் படங்களை உங்கள் கணினிக்கு இறக்குமதி-import செய்ய விரும்புவீர்கள். அதன் பிறகு நினைவக அட்டையில் உள்ளவற்றை அழித்துவிட்டு, புதிய படங்களை எடுக்க அதைப் பயன்படுத்தலாம்.

படங்களை இறக்குமதி செய்ய இரண்டு முக்கிய வழிகள் இருக்கின்றன:
  1. கேமராவை நேரடியாக இணைத்தல். யுனிவர்சல் சீரியல் பஸ் (USB) கேபிள் ஒன்றைப் பயன்படுத்தி கேமராவை நேரடியாக உங்கள் கணினியுடன் இணைத்துப் படங்களை இறக்குமதி செய்யலாம். இந்த முறைப்படி செய்தால் உங்கள் கேமரா இயக்கத்தில் இருக்க வேண்டும்; இதனால் படங்களை இறக்குமதி செய்வது சிறிது மின்கலச் சக்தி செலவாகும். நீங்கள் தொடர்ந்து படங்களை இறக்குமதி செய்துகொண்டிருந்தால் கேபிளைக் கைக்கெட்டும் இடத்தில் வைத்திருக்க வேண்டியிருக்கும்.
 


2.ஒரு நினைவக அட்டை படிப்பியை  பயன்படுத்துதல் (use a memory card reader).  படங்களை இறக்குமதி செய்வதற்கு மிக விரைவான வழி, நீங்கள் தனியாக வாங்கிய ஒரு நினைவக அட்டை படிப்பியைப் பயன்படுத்துவது. உங்கல் கேமராவிலிருந்து நினைவக அட்டையை அகற்றவும், அதை அட்டை படிப்பியில் நுழைக்கவும், பிறகு அட்டை படிப்பியை உங்கள் கணினியின் USB முனையத்தில் செருகவும். பல கணினிகளில் அட்டை படிப்பிகள் இருக்கும். இவற்றைப் பயன்படுத்தி நினைவக அட்டைகளை நேரடியாகக் கணினியில் செருகலாம்.



நீங்கள் எந்த வழியைப் பின்பற்றினாலும், அட்டை படிப்பியை உங்கள் கணினியில் செருகியதும் Windows உங்கள் கேமராவை அல்லது அட்டை படிப்பியைத் தானாக அடையாளம் காணும் (அடையாளம் காணவில்லை என்றால் கேமரா இணைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க அல்லது USB சாதனப் பிரச்சினைகளைத் தீர்க்க என்பதைப் பார்க்கவும்). பிறகு பின்வரும் வழிமுறையைப் பின்பற்றவும்:

1.    தானியங்கு இயக்கு உரையாடல் பெட்டியில்- in the auto play dialog box, Windows -ஐப் பயன்படுத்திப் படங்களை இறக்குமதிசெய் என்பதை கிளிக் செய்யவும். Windows உங்கள் நினைவக அட்டையில் உள்ள படங்களைக் கண்டுபிடிக்கும்.


இந்த உரையாடல் பெட்டி நீங்கள் ஒரு கேமராவையோ அட்டை படிப்பியையோ உங்கள் கணினியில் செருகும்போது தோன்றும்.

2.    Windows உங்கள் படங்களைக் கண்டுபிடித்த பின், நீங்கள் இறக்குமதி செய்யும் படங்களுக்கு ஒரு குறிக்குழு(அந்தக் குழுவை விவரிக்கும் ஒரு சொல் அல்லது சிறு சொற்றொடர், tag) உருவாக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும். உருவாக்க விரும்புகிறீர்கள் என்றால் குறிக்குழுவுக்கான பெயரை இந்தப் படங்களைக் குறிக்குழுவாக்கு (விருப்பப்படி) என்ற பெட்டியில் தட்டச்சு செய்யவும். நீங்கள் இறக்குமதி செய்யும் படங்களுக்குப் பொதுவான குணம் எதுவும் இல்லை என்றால் குறிக்குழு-tag, உருவாக்குவதை விட்டுவிடுங்கள். பிறகு எப்போது வேண்டுமானாலும் தனிப் படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்கலாம் (இந்தக் கட்டுரையில் உள்ள "உங்கள் படங்களை ஒழுங்குபடுத்துவதும் கண்டுபிடிப்பதும்" என்ற பகுதியைப் பார்க்கவும்).


படங்களை இறக்குமதி செய்யும்போது அவற்றுக்கு ஒரு குறிக்குழு சேர்க்கலாம்.

3.    இறக்குமதி முடிந்த பின் உங்கள் படங்களை நினைவக அட்டையிலிருந்து-memory card நீக்க விரும்பினால், Windows உங்கள் படங்களை இறக்குமதி செய்யத் தொடங்கும்போது, இறக்குமதி செய்த பின் அழி-Erase after importing , என்ற தேர்வுப் பெட்டியைத்-check box தேர்ந்தெடுக்கவும்-select . இது அட்டையில் உள்ள இடத்தைக் காலி செய்வதால் நீங்கள் மீண்டும் புதிதாக நிறைய படங்களை எடுக்கலாம்.


உங்கள் படங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின் Windows நிறழ்படத் தொகுப்பில்- Photo Gallery, தோன்றும்.

உதவிக்குறிப்பு
•    சாதாரண புகைப்படங்களை டிஜிட்டல் படங்களாக மாற்றுவதற்கு நீங்கள் ஸ்கேனர் என்ற சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக