சனி, 6 ஏப்ரல், 2013

Windows நிழற்படத் தொகுப்பும் படங்கள் கோப்புறையும்.

Windows நிழற்படத் தொகுப்பு(windows photo gallery) என்பது - Windows OSஇல் உள்ள ஒரு கருவி (tool). இதைப் பயன்படுத்தி உங்கள் டிஜிட்டல் படங்களை (வீடியோக்களையும் கூட) பார்க்கலாம், ஒழுங்குபடுத்தலாம், திருத்தலாம், பகிர்ந்துகொள்ளலாம், அச்சிடலாம். இது நீங்கள் ஒரு படத் தொகுதியை இறக்குமதி செய்ததும் தானாகத் திறக்கும். அதை வேறு சமயங்களில் திறக்க, தொடக்கம் பொத்தானை (start button)  கிளிக் செய்து, நிரல்கள் (programs) என்பதை கிளிக் செய்து, பிறகு Windows நிழற்படத் தொகுப்பு (photo gallery) என்பதை கிளிக் செய்யவும்.
Windows நிழற்படத் தொகுப்பு (windows photo gallery), உங்கள் கணினியில் படங்களைச் சேமித்துவைப்பதற்கான முக்கிய இடமான படங்கள் கோப்புறையுடன் (pictures folder) இணைத்துப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படங்கள் கோப்புறையில் உள்ள எந்தப் படங்களும் — நீங்கள் இறக்குமதி செய்தவை உட்பட — நிழற்படத் தொகுப்பில் தெரியும். படங்கள் கோப்புறையைத் திறக்க, தொடக்கம் பொத்தானை (start button )  கிளிக் செய்யவும், ஆவணங்கள் ( documents ) என்பதை கிளிக் செய்து, பிறகு படங்கள் (pictures) என்பதை கிளிக் செய்யவும்.
Windows நிழற்படத் தொகுப்பிலும் படங்கள் கோப்புறையிலும் ஒரே மாதிரியான பணிகள் சிலவற்றைச் செய்யலாம். உதாரணமாக, படங்களைப் பார்ப்பது, அச்சிடுவது, உங்கள் படங்களின் ஸ்லைடு காட்சியைப் பார்ப்பது போன்றவற்றைப் படங்கள் கோப்புறையிலும் செய்யலாம், நிழற்படத் தொகுப்பிலும் செய்யலாம். எனவே, இதில் எதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்?

பொதுவாக, உங்கள் படங்களைக் கையாளச் சிறந்த இடம் நிழற்படத் தொகுப்புதான் (picture folder). இது உங்கள் எல்லாப் படங்களையும் ஒரே இடத்தில் பார்க்க உதவுகிறது. அவற்றைத் தேதி (by date), குறிக்குழு (by tag) மற்றும் பிற விவரங்களின்படி பார்ப்பதை எளிதாக்குகிறது. படங்கள் கோப்புறையில் இல்லாத சில அம்சங்களும் இதில் உள்ளன. உதாரணமாக, ஒரு படத்தின் ஒளிவெளிப்பாட்டையும் வண்ணத்தையும் மாற்றலாம், நுனிவெட்டலாம், கறைகளை அகற்றலாம்.
  • உங்கள் படங்களைப் பார்த்தல் - viewing your picture

Windows நிழற்படத் தொகுப்பில், உங்கள் படத் தொகுப்பைப் பார்க்கப் பல வகையான விருப்பங்கள் இருக்கின்றன. நீங்கள் முதலில் நிழற்படத் தொகுப்பைத் திறக்கும்போது, உங்கள் படங்கள், வீடியோக்கள் ஆகிய அனைத்தும் தெரியும். படங்களை மட்டும் பார்க்க, அனைத்துப் படங்களும் வீடியோக்களும் (all pictures and videos) என்பதற்கு அருகில் உள்ள அம்பை கிளிக் செய்து, படங்கள் என்பதை கிளிக் செய்யவும்.
  • சிறுஉருவங்களைக் கையாளுதல் - working with thumbnails

Windows நிழற்படத் தொகுப்பு உங்கள் படங்களைச் சிறுஉருவங்களாக — முழு அளவுப் படங்களின் சிறு வடிவங்களாக — காண்பிக்கிறது. முடிந்த வரை அதிகச் சிறுஉருவங்களைப் பார்க்க, பெரிதாக்கு பொத்தானை  கிளிக் செய்து நிழற்படத் தொகுப்பு சாளரத்தை உங்கள் திரை முழுதும் நிரப்பவும்.
சிறுஉருவங்களின் அளவை மாற்ற, பெரிதாக்கு பொத்தானை (maximize button )  கிளிக் செய்யவும், பிறகு நகர்வுகோலை மேலே அல்லது கீழே நகர்த்தவும். ஒரே சமயத்தில் ஏராளமான படங்களைப் பார்க்க, சிறுஉருவங்களைச் சிறிதாக்கலாம். அல்லது, ஒவ்வொரு படத்தையும் மேலும் நுட்பமாகப் பார்க்க, சிறுஉருவங்களைப் பெரிதாக்கவும். ஒரு படத்தின் சிறுஉருவ அளவை மாற்றுவதால் படத்தின் அளவு மாறிவிடாது.

 
பெரிய சிறுஉருவங்கள் (இடது); சிறிய சிறுஉருவங்கள் (வலது)

முன்பிருந்தது போல் நடு அளவு சிறுஉருவங்களைப் பார்க்க (medium-sized thumbnails), இயல்புநிலை சிறுஉருவ அளவு பொத்தானை (default thumbnail size button)  கிளிக் செய்யவும்.

சிறிய மற்றும் நடு அளவு சிறுஉருவங்களாகப் பார்க்கும்போது, ஒரு சிறுஉருவத்தைச் சுட்டினால் பெரிய அளவு முன்னோட்டமும் (large preview) தெரியும்,  அதோ படத்தைப் பற்றிடுய சில விவரங்களும் தெரியும்
மேல் உள்ள படத்தில் பெரிய முன்னோட்டத்தைப் (large preview) பார்க்க ஒரு சிறுஉருவத்தைச் எப்படி சுட்டப்பட்டுள்ளது என்பதை காட்டப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக