ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

வலையில் தேடுதல்.

இணையத்தில் கோடிக்கணக்கான வலைப்பக்கங்கள் இருப்பதால், ஒவ்வொரு வலைப்பக்கமாகச் சென்று உங்களுக்குத் தேவையான ஒரு தகவலைக் கண்டுபிடிப்பது அசாத்தியம். நல்ல வேளையாக, அதற்கு இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள் தரும் சொற்களுக்கு அல்லது சொற்றொடர்களுக்கு மிகவும் பொருத்தமாந பக்கங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு தேடு பொறியைப்(search engine) பயன்படுத்தலாம். Google, Yahoo! Search, MSN Search, AOL Search, Ask.com போன்ற சில முக்கியமான தேடு பொறிகள்(search engine) இருக்கின்றன. நீங்கள் நேரடியாக எந்தத் தேடு பொறியின் வலைத்தளத்திலிருந்தும்(directly from any search engine's site) வலையில் தேடலாம்(can search web). அல்லது, முதலில் ஒரு தேடல் தளத்திற்குச் செல்லும் வேலையை மிச்சப்படுத்த, Internet Explorer -இல் உள்ள தேடு பெட்டியைப்(Search box)  பயன்படுத்தலாம்:

நீங்கள் முதல் முறையாகத் தேடு பெட்டியைப் (search box) பயன்படுத்துவதற்கு முன் இயல்புநிலை தேடல் சேவை (default search provider) ஒன்றை  தேர்வு செய்யவும். அதாவது நீங்கள் ஒவ்வொரு முறையும் தேடும்போதும் Internet Explorer தேட வேண்டிய தேடு பொறியை (search box) தேர்வு செய்யவும். நீங்கள் தேடல் சேவை (search service provider)எதையும் தேர்வு செய்யவில்லை என்றால் Windows Live Search பயன்படுத்தப்படும். (உங்கள் கணினியின் உற்பத்தியாளர் வேறொரு இயல்புநிலை தேடல் சேவையை அமைத்திருக்கக்கூடும்.)

தேடு பெட்டியைப் பயன்படுத்தி வலையில் தேட - To search the web using the search box
1.      உங்களுக்கு ஆர்வம் உள்ள ஒரு தலைப்பு பற்றிச் சில சொற்களை(word) அல்லது ஒரு சொற்றொடரை(phrase) உதாரணமாக, "அசைவ சமையல் குறிப்புகள்" என தேடு பெட்டியில் தட்டச்சு செய்யவும். உங்கள் தேடல் தொடர் நீங்கள் தேட விரும்பும் விஷயத்தைத் துல்லியமாக விவரிக்க வேண்டும்.
2.      ENTER விசையை அழுத்தவும் அல்லது தேடு பொத்தானை(search button) கிளிக் செய்யவும்.
3.      பத்துக்கு மேற்பட்ட தேடல் முடிவுகள் (search results) கொண்ட ஒரு பக்கம் தோன்றும். அவற்றில் ஒரு வலைத்தளத்திற்குச் செல்ல ஒரு முடிவை கிளிக் செய்யவும். நீங்கள் தேடுவது, முடிவுகள் (search results) பக்கத்தில் இல்லை என்றால், அந்தப் பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள அடுத்து என்பதை கிளிக் செய்து மேலும் பல முடிவுகளைப் பார்க்கவும், அல்லது மீண்டும் புதிதாகத் தேடவும்.

குறிப்பு:
o        சில தேடல் முடிவுகள் விளம்பரங்களாக இருக்கும். இவை பொதுவாக "Sponsored Sites" அல்லது "Sponsored Links" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிடித்த வலைப்பக்கங்களைச் சேமித்தல் - Saving favorite webpages.
நீங்கள் அடிக்கடி பார்க்கத்தக்க வலைத்தளம் ஒன்றைக் கண்டுபிடித்தால் அதை Internet Explorer -இல் ஒரு பிடித்தவை இணைப்பாகச்(Favorites link) சேமிக்கவும். இதன் மூலம் நீங்கள் அந்த வலைத்தளத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்ரால் பிடித்தவை பட்டியலில்(Favorites list) அதை கிளிக் செய்தாலே போதும்; அதன் வலை முகவரியை நினைவில் கொள்ளத் தேவையில்லை.

ஒரு வலைப்பக்கத்தைப் பிடித்தவை இணைப்பாகச் சேமிக்க (to save webpage as favorite)

    1.      Internet Explorer -இல், நீங்கள் பிடித்தவை இணைப்பாகச் சேமிக்க விரும்பும் வலைப்பக்கத்திற்குச்(go to your website) செல்லவும்.
2.      பிடித்தவையில் சேர் பொத்தானை (Add to Favorites என்ற button)கிளிக் செய்துவிட்டு,  பிறகு பிடித்தவையில் சேர்(Add to Favorites link) என்பதை கிளிக் செய்யவும்.
3.      பெயர் பெட்டியில் (Name box) அந்த வலைப்பக்கத்திற்கு ஒரு பெயரைத் தட்டச்சு(type a name for the webpage,) செய்து சேர்(Add) என்பதை கிளிக் செய்யவும்.

ஒரு பிடித்தவை இணைப்பைத் திறக்க (to open a favorite)

1.      Internet Explorer -இல் பிடித்தவை மையம்(Favorites Center) என்ற பொத்தானை(button) கிளிக் செய்யவும்.
2.      பிடித்தவை பொத்தான்(Favorites button)  முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை(not selected already) என்றால் favorite buttonஐ கிளிக் செய்யவும்.
3.      பிடித்தவை பட்டியலில் (in the Favorites list), நீங்கள் திறக்க விரும்பும் வலைப்பக்கத்தை(webpageஐ) கிளிக் செய்யவும்.
பிடித்தவை இணைப்புகள்(favorite-links) ஏராளமாக இருந்தால், அவற்றைக் கோப்புறைகளாக(file)வும் ஒழுங்குபடுத்தலாம்.

வரலாறு பட்டியலைப் பயன்படுத்துதல் - using the history list.

நீங்கள் கடந்த 20 நாட்களில் பார்த்த ஒரு வலைப்பக்கத்தை மீண்டும் பார்க்க வரலாறு பட்டியலைப் பயன்படுத்தலாம்.
1.      Internet Explorer -இல் பிடித்தவை மையம்(Favorites Center) பொத்தானை(button) கிளிக் செய்யவும்.
2.      வரலாறு பொத்தான்(History button) முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை(not already selected) என்றால் அதை கிளிக் செய்யவும்.
3.      வரலாறு பட்டியலில்(History list) ஒரு நாளை(day)  அல்லது வாரத்தை(week) கிளிக் செய்யவும், பிறகு ஒரு வலைத்தளத்தின் பெயரை(website name) கிளிக் செய்யவும். பிறகு அந்தப் பட்டியல் விரிந்து, நீங்கள் அந்த வலைத்தளத்தில் பார்த்த வலைப்பக்கங்களைக் காண்பிக்கும்.
4.      நீங்கள் திறக்க விரும்பும் வலைப்பக்கத்தை(webpage)  கிளிக் செய்யவும்.
 
ஒரே சமயத்தில் பல வலைப்பக்கங்களைத் திறத்தல் - opening multiple webpages
ஏதேனும் ஒரு காரணமாக, ஒரு வலைப்பக்கத்தை மூடாமலே ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பக்கத்தைத் திறக்க வேண்டும்மெனில். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, Internet Explorer, நீங்கள் புதிதாகத் திறக்க விரும்பும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு தாவலை(tab) உருவாக்கி தறுகிறது. தாவல்களைப்(tabs) பயன்படுத்தி ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் துரிதமாக மாறலாம்; எல்லா பக்கங்களையும் ஒரே சமயத்தில் கூடப் பார்க்கலாம்.
ஒரு வலைப்பக்கத்தைப் புதிய தாவலில் திறக்க, புதிய தாவல் பொத்தானை(New Tab button) கிளிக் செய்யவும்:

அந்தப் பொத்தானை கிளிக் செய்ததும், ஒரு புதிய தாவலில்(new tabல்) வெற்றுப் பக்கம்(blank page) ஒன்று திறக்கும்.

இப்போது ஒரு URL -ஐத் தட்டச்சு செய்து, அல்லது தேடல் பெட்டியைப் பயன்படுத்தி, அல்லது உங்கள் பிடித்தவை பட்டியலிலிருந்தோ வரலாறு பட்டியலிலிருந்தோ தேர்வு செய்து எந்த வலைப்பக்கத்தையும் திறக்கலாம். பல வலைப்பக்கங்களைத் திறந்ததும், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாறுவதற்குத் தாவல்களை(tabsஐ) கிளிக் செய்யவும்.
திறந்திருக்கும் எல்லா வலைப்பக்கங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க, விரைவுத் தாவல்கள்(Quick Tabs) பொத்தானை கிளிக் செய்யவும். ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் ஒரு சிறு வடிவம் தோன்றும்(miniature version). ஒரு பக்கத்திற்கு மாற அந்தப் பக்கத்தின் சிறு வடிவத்தை கிளிக் செய்யவும்.

திறந்திருக்கும் அனைத்து வலைப்பக்கங்களையும் பார்க்க விரைவுத் தாவல்கள்(quick tabs) பொத்தானைப் பயன்படுத்தவும்
ஒரு தாவலை மூடுவதற்கு(to close tabs), அந்தத் தாவலின் வலப்பக்கத்தில்(tabs right side) உள்ள மூடு(close) பொத்தானை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக