Windows -இல் உள்ள ஓர் அடிப்படையான சொற்செயலி WordPad ஆகும்.
சொற்செயலி என்பது உரை
ஆவணங்களை உருவாக்கவும் திருத்தவும் அச்சிடவும் பயன்படும் ஒரு கணினி நிரல் (word
processing program). WordPad -ஐக் கொண்டு கடிதங்கள் (letters), அறிக்கைகள் (book
reports), மற்றும் பல எளிய ஆவணங்களை (simple documents) நீங்கள் தட்டச்சு
செய்யலாம். உரையின் தோற்றத்தை மாற்றுதல் (the text looks), வாக்கியங்களையும்
பத்திகளையும் (sentences and paragraphs) துரிதமாக நகர்த்துதல், ஆவணங்களுக்குள்ளும்
ஒரு ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திலும் உரையை நகலெடுத்து ஒட்டுவது (copy and
paste text within and between documents) போன்ற பணிகளையும் நீங்கள்
செய்யலாம்.
WordPad
சாளரம் -The WordPad window
WordPad -ஐத் திறக்க, தொடக்கம் பொத்தானை (windows start menu button)
கிளிக் செய்து, நிரல்கள் என்பதைச் சுட்டியால் குறிப்பிட்டு அதன்வழியாக
துணைக்கருவிகள் என்பவைக்கு சென்று, பிறகு WordPad -ஐ கிளிக் செய்யவும்.
WordPad சாளரத்தில் நான்கு முக்கியப் பகுதிகள்
இருக்கின்றன:
கருவிப்பட்டி(toolbar): கருவிப்பட்டியில் சேமித்தல்
(saving), அச்சிடுதல் (printing) ஆகியவை உள்பட அடிப்படையான கட்டளைகளுக்குப் (basic
commands) பொத்தான்கள் இருக்கின்றன. ஒரு பொத்தான் (command button) என்ன செய்யும்
என்று தெரிந்துகொள்ள, உங்கள் சுட்டியின் குறிப்பானை (mouse pointer) அந்த
பொத்தான் மேல் வைக்கவும். ஒரு பெட்டி தோன்றி அந்தப் கட்டளைப்
பொத்தானின் செயல்பாட்டைக் சுருக்கமாக விளக்கும்.
வடிவமைப்புப் பட்டி
(format bar): வடிவமைப்புப் பட்டியில்(format bar) உங்கள் ஆவணத்தில் இருக்கும்
உரையை ( text in your document) வடிவமைக்கப்( to decorate in different format)
பயன்படுத்துவதற்கான பொத்தான்கள் இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் உங்கள்
உரையின்(text data) எழுத்துரு (font), வண்ணம் (color), சீரமைப்பு (alignment)
ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.
அளவுகோல் (ruler): உங்கள் ஆவணத்தில்
(document) உள்ள உரையின் தளவமைப்பையும் (layout) உரை வைக்கப்பட்டுள்ள ( placement
of the text) இடத்தையும் அளவுகோலைப் (ruler) பயன்படுத்திச்
சரிபார்க்கலாம்.
ஆவணப் பகுதி (document area): இங்குதான் நீங்கள்
உங்கள் ஆவணத்தைத் தட்டச்சு செய்வீர்கள் (you type your document), உரையில்
மாற்றங்கள் செய்வீர்கள் (make changes to the text), வடிவமைப்பைச்
செயல்படுத்துவீர்கள் (apply your formatting on the document).
உரையைத் தட்டச்சு செய்தல் - typing
text
நீங்கள் பணிபுரியத் தயாரானதும், WordPad -இன்
ஆவணப் பகுதியில் தட்டச்சு செய்யவும். இடஞ்சுட்டி (cursor ( | ) ) என்ற மின்னும்
செங்குத்துக் கோடு ஒன்று, நீங்கள் அடுத்துத் தட்டச்சு செய்யும் உரை எங்கு வரும்
(where the next text that you type will appear) என்று காண்பிக்கும். இடஞ்சுட்டியை
உரைக்குள் நகர்த்த (To move the cursor within text), இடஞ்சுட்டி எங்கு வர வேண்டும்
என்று விரும்புகிறீர்களோ அங்கு கிளிக் செய்யவும் (click where you want the cursor
to appear).
தட்டச்சுப் பொறியைப் (typewriter) பயன்படுத்தும்போது அடுத்த
வரியைத் தொடங்க ENTER விசையை அழுத்த வேண்டியிருக்கும்; WordPad -இல் அது
தேவையில்லை. நீங்கள் ஒரு வரியைத் தட்டச்சு செய்து முடித்ததும் WordPad தானாகவே
அடுத்த வரியைத் தொடங்கிவிடும். புதிய பத்தி (new paragraph) ஒன்றைத் தொடங்க
விரும்பினால் ENTER விசையை (key) அழுத்தவும்.
உரையைத் தேர்ந்தெடுத்தல் - selecting the
text
உங்கள் ஆவணத்தில் உள்ள உரையில் நகலெடுத்தல் (to
copy), வடிவமைத்தல் (to format) போல ஏதேனும் செய்ய விரும்புகிறீர்கள் என்றால்
நீங்கள் முதலில் உரையைத் தேர்ந்தெடுக்க (select) வேண்டும். உரையைத் தேர்ந்தெடுக்க,
சுட்டியின் குறிப்பானை (mouse pointer) நீங்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்க விரும்பும்
இடத்தின் இடப்பக்கத்தில் (left side of the text) வைத்துக்கொள்ளவும். குறிப்பானைச்
சரியான இடத்தில் வைத்ததும், இடப்பக்கச் சுட்டிப் பொத்தானை கிளிக் செய்து அழுத்தி
வைத்துக்கொண்டு, நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் உரையின் மேல் குறிப்பானை
இழுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட உரை தனிப்படுத்திக் காட்டப்படும். நீங்கள்
தேர்ந்தெடுத்து முடித்த பின், சுட்டிப் பொத்தானை விடுவிக்கவும்.
உரையை நகலெடுத்தலும் நகர்த்துதலும் -
Copying and moving text
உங்கள் ஆவணத்தின் (digital document) ஒரு பகுதியில் உள்ள உரை (text)
இன்னொரு பகுதியில் வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அந்த உரையை மீண்டும்
தட்டச்சு செய்யாமலே அதை நகர்த்த இரண்டு வழிகள் இருக்கின்றன: நீங்கள் அதை நகலெடுத்து
(to copy) வேறொரு இடத்தில் ஒட்டலாம் (past), அல்லது அதை வேறொரு இடத்திற்கு
நகர்த்தலாம் (move it to another location).
i)
நீங்கள் உரையை
நகலெடுக்கும்போது அது நகலகத்தில் (clipboard) வைக்கப்படும். பிறகு அதை நீங்கள்
வேறு இடத்தில் ஒட்டலாம். மூல உரை (original text ) அப்படியே இருக்கும்.
ii)
நீங்கள் உரையை வேறொரு இடத்திற்கு நகர்த்தும்போது,
மூல உரையானது
(original text) அது முதலில்
இருந்த இடத்தில் இருக்காது. உங்கள்
ஆவணத்தில் இருக்கும் வாக்கியங்களையும் (sentences) பத்திகளையும் (paragraphs)
மாற்றியமைக்க விரும்பினால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக
இருக்கும்.
உரையை நகலெடுத்து வேறொரு இடத்தில் ஒட்டுதல் - To copy text
and paste it in another location
1. நீங்கள் நகலெடுக்க விரும்பும்
உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2. திருத்து மெனுவில்
(Edit menu), நகலெடு (copy) என்பதை கிளிக் செய்யவும்.
3.
நகலெடுத்த உரையை எங்கு செருக விரும்புகிறீர்களோ (want to insert the copied text)
அந்த இடத்திற்குக் குறிப்பானை நகர்த்திச் செல்லவும்.
4. திருத்து மெனுவில்
(Edit menu), ஒட்டு (paste) என்பதை கிளிக்
செய்யவும்.
உதவிக்குறிப்பு - Tip
- நீங்கள் தேர்ந்தெடுத்த உரையைத் துரிதமாக நகலெடுக்க (To quickly copy ),
CTRL+C அழுத்தவும். உரையைத் துரிதமாக ஒட்டுவதற்கு CTRL+V அழுத்தவும்.
உரையை வேறு இடத்திற்கு நகர்த்த - To move text to a different
location
1. நீங்கள் நகர்த்த விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும்
(select text).
2. நீங்கள் தேர்ந்தெடுத்த உரையைச் சுட்டவும் (point the
text), பிறகு இடது சுட்டிப் பொத்தானை கிளிக் செய்து அழுத்தி வைத்துக்கொள்ளவும்
(press and hold left button of the mouse).
3. உரை உங்கள் ஆவணத்தில் எங்கு
வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு உரையை இழுத்துச் (to drag)
செல்லவும்.
உரையைச் செருவதும் நீக்குவதும் - Inserting and deleting
text
உரையை எங்கு வேண்டுமானாலும் செருகுவதையும்(inserting text)
நீக்குவதையும் (deleting text), WordPad எளிதாக்குகிறது. உரையைச் செருக, அதை
நீங்கள் செருக விரும்பும் இடத்தில் கிளிக் செய்து தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
உரையை நீக்க, நீங்கள் நீக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, DELETE விசையை
அழுத்தவும் (press delete key).
உதவிக்குறிப்பு - Tip
• உங்கள்
ஆவணத்தில் உள்ள உரையைத் திருத்தும்போது நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால் அதன்
தாக்கத்தை செயல்-தவிர்க்கலாம் (undo). நீங்கள் கடைசியாகச் செய்த செயலைச்
செயல்-தவிர்க்க(undo) CTRL+Z அழுத்தவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக