சனி, 6 ஏப்ரல், 2013

உங்கள் படங்களை ஒழுங்குபடுத்துவத்துதல்


நீங்கள் உங்கள் டிஜிட்டல் கேமராவைத் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள் என்றால், விரைவிலேயே உங்கள் கணினியில் ஆயிரக்கணக்கான படங்கள் சேர்ந்துவிடும். உங்கள் தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு படத்தைக் கண்டெடுக்க வேண்டும் என்றால், Windows நிறழ்படத் தொகுப்பில் உள்ள கருவிகள் உங்களுக்கு உதவும்.

தேதியைக் கொண்டு படங்களைக் கண்டுபிடிக்க - find pictures by date

உங்கள் டிஜிட்டல் கேமரா, படங்களில் அவை எடுக்கப்பட்ட தேதியைச் சிட்டையாகச் சேர்க்கின்றன. நிழற்படத் தொகுப்பு இந்தத் தகவலைப் பயன்படுத்தி உங்கள் படங்களை தானாகத் தேதிப்படி ஒழுங்குபடுத்தும். எனவே, நீங்கள் உங்கள் படங்களை அவை எடுக்கப்பட்ட ஆண்டு, மாதம், அல்லது தேதிப்படி உலாவிப் பார்க்கலாம்.
படங்களைத் தேதி அடிப்படையில் தேட, நிழற்படத் தொகுப்பின் வழிசெலுத்துப் பலகத்தில் (இடது பலகத்தில்) உள்ள எடுக்கப்பட்ட தேதி என்பதன் கீழ் ஒரு ஆண்டு, மாதம், அல்லது நாளை கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் தெரியும்.


படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்க - add tags to pictures

நீங்கள் Windows நிழற்படத் தொகுப்பைப் பயன்படுத்தி உங்கள் படங்களில் குறிக்குழுக்களை சேர்க்கலாம் — இவை ஒரு படத்தில் இருப்பது யார் அல்லது என்ன, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்களை விவரிக்கும் அர்த்தமுள்ள சொற்கள் அல்லது சொற்றொடர்கள். உங்கள் படங்களுக்குக் குறிக்குழு சேர்த்தால் அவற்றைப் பின்னர் கண்டுபிடிப்பது சுலபம். ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு குறிக்குழுவைக் கொண்ட எல்லாப் படங்களையும் எளிதாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு படத்திற்கும் குறிக்குழுவைச் சேர்ப்பது கணிசமாக நேரத்தை விழுங்கும் பணி போல் தெரிந்தால் கவலை வேண்டாம் — ஒரே சமயத்தில் பல படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்கலாம். உதாரணமாக, ஒரு பிறந்தநாள் விழாவில் எடுத்த 20 அல்லது 30 படங்களில் "பிறந்தநாட்கள்" என்ற குறிக்குழுவைச் சேர்க்கலாம். படங்களில் குறிக்குழுவைச் சேர்க்க, பின்வரும் வழிமுறையைப் பின்பற்றவும்:

1.    நிழற்படத் தொகுப்பில், நீங்கள் குறிக்குழுவாக்க விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும். பல படங்களைத் தேர்ந்தெடுக்க, CTRL விசையை அழுத்திக்கொண்டு படங்களை கிளிக் செய்யவும்.
2.    தகவல் பொத்தானை  கிளிக் செய்யவும். தகவல் பலகம் திறக்கும்.
3.    தகவல் பலகத்தில் குறிக்குழுக்களைச் சேர் (add tags) என்பதை கிளிக் செய்து, பெட்டியில் குறிக்குழுவின் பெயரைத் தட்டச்சு செய்யவும், பிறகு ENTER விசையை அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் படங்களிலும் அந்தக் குறிக்குழு சேர்க்கப்படும். எத்தனை குறிக்குழுக்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கான குறிக்குழுக்களைத் தகவல் பலகத்தில் தட்டச்சு செய்யவும்.

நீங்கள் முன்பே உருவாக்கிய குறிக்குழுக்களை மீண்டும் தட்டச்சு செய்யத் தேவையில்லை. (நிழற்படத் தொகுப்பின் வழிசெலுத்துப் பலகத்தில் குறிக்குழுக்கள் என்பதன் அருகில் உள்ள அம்பை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய குறிக்குழுக்களைப் பார்க்கலாம்.) முன்பே உள்ள குறிக்குழு ஒன்றை ஒரு படத்தில் சேர்க்க, கீழுள்ள படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பது போல் படத்தைக் குறிக்குழுவிற்கு இழுக்கவும்.
ஒரு குறிக்குழுவைப் படங்களில் சேர்க்க, அந்தப் படங்களை அந்தக் குறிக்குழுவிற்கு இழுக்கவும்

படங்களை இறக்குமதி செய்ததும் அவற்றில் குறிக்குழுக்களைச் சேர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். இந்தப் பழக்கம் வந்துவிட்டால் நீங்கள் குறிக்குழு சேர்க்கப் படங்களின் படையே காத்திருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக