ஒரு இணைய இணைப்பை(internet
connection) உருவாக்கியப்பின் Internet Explorer மூலம் வலையை நீங்கள் அணுகலாம். Internet Explorer -என்பது
Windows
Operating system -இல்
இருக்கும் ஒரு வலை உலாவி (Microsoft corporation web browser). நீங்கள் உங்கள் கணினியில்
நிறுவப்பட்டுள்ள வேறு ஒரு வலை உலாவிகளையும்(other web browsers
–Firefox)
பயன்படுத்தலாம்.
தொடக்கம் பொத்தானை(start button) கிளிக் செய்து,
நிரல்கள்(programs)
என்பதன் வழியாக சென்று,
பிறகு Internet
Explorer என்பதை
கிளிக் செய்யவும்.
நீங்கள் Internet Explorer
-ஐத் தொடங்கும்போது, அது முகப்புப் பக்கமாக
(homepageஆக) அமைக்கப்பட்டுள்ள
வலைப்பக்கத்திற்குச்(webpageஐ open செய்யும்) செல்லும். இயல்புநிலையாக(by
default), MSN.com என்ற வலைதளத்தை முகப்புப் பக்கமாக(homepage)
அமைக்கப்பட்டுள்ளது. இது பல வகையான தகவல்களையும் சேவைகளையும் கொண்ட ஒரு
Microsoft வலைத்தளம். (உங்கள்
கணினியின் உற்பத்தியாளர் வேறொரு வலைப்பக்கத்தை முகப்புப் பக்கமாக
அமைத்திருக்கக்கூடும்.) இருந்தாலும், நீங்கள் எந்தப் பக்கத்தையும் (அல்லது ஒரு வெற்றுப்
பக்கத்தை) உங்கள் முகப்புப் பக்கமாக அமைத்துக்கொள்ளலாம். உதவிக்குறிப்பு
· நீங்கள் வேறு வலைத்தளங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்கள் முகப்புப் பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல
Internet Explorer -இல்
உள்ள முகப்பு பொத்தானை(home page button)கிளிக் செய்யவும்.
ஒரு வலை முகவரியை உள்ளிடுதல் - entering a
web address
ஒவ்வொரு வீட்டிற்கும் அதற்குரிய முகவரி எப்படி
இருக்கிறதோ, அது போல
ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் அதற்கென்று தனியாக வலை முகவரி
உள்ளது. இந்த முகவரிக்கு யூனிஃபார்ம் ரிசோர்ஸ் லொகேட்டர் (URL – uniform resource locator) என்று பெயர். உதாரணமாக, Microsoft -இன் பிரதான வலைத்தளத்தின் URL(முகவரி), http://www.microsoft.com.
ஒரு வலைப்பக்கத்தின் URL உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் அதை நேரடியாக Internet Explorer -இல் தட்டச்சு செய்யலாம்:
1. முகவரி
பெட்டியில்(Address box) URL -ஐத் தட்டச்சு செய்யவும்.
2. அந்த வலைத்தளத்திற்குச் செல்ல, செல் பொத்தானை(Go button) கிளிக் செய்யவும் அல்லது ENTER விசையை(key) அழுத்தவும்.
URLகளைத் தட்டச்சு செய்ய முகவரி
பெட்டியைப் (address box) பயன்படுத்தவும்.
· நீங்கள்
http:// என்பதைத்
தட்டச்சு செய்யத் தேவையில்லை. உதாரணமாக, நீங்கள்
www.microsoft.com என்று தட்டச்சு செய்தால் Internet Explorer
மிச்சத்தை நிரப்பிவிடும்.
· ".com" என்று முடியும் ஒரு URL -ஐத் துரிதமாகத் தட்டச்சு (to enter quickly) செய்ய, "www." என்பதற்கும் ".com" என்பதற்கும் இடையிலுள்ள பகுதியைத்(Microsoft என்பதை
மட்டும்) தட்டச்சு செய்துவிட்டு CTRL+ENTER அழுத்தவும். பிறகு நேரடியாக மைக்ரோசாப்ட் வலைதளத்திற்கு
அழைத்து செல்லப்படுவீர்.
அடிப்படை வழிசெலுத்தல் - Basic
navigation
- இணைப்புகளைப் பயன்படுத்துதல் - Using links. பெரும்பாலான வலைப்பக்கங்களில் ஏராளமான இணைப்புகள் (dozens of links) இருக்கும். சிலவற்றில்நூற்றுக்கணக்கில் கூட இருக்கும்(hundreds of links). ஒரு வலைப்பக்கத்திலிருந்து இன்னொருவலைப்பக்கத்திற்குச் செல்ல ஏதேனும் ஒரு இணைப்பை(link) கிளிக் செய்யவும். இருந்தாலும், ஒருவலைப்பக்கத்தில் எவை இணைப்புகள் என்று கண்டறிவது எப்போதும் எளிதல்ல(is not always easy). இணைப்புகள்உரையாகவோ படங்களாகவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கலாம். உரை இணைப்புகள்பெரும்பாலும் வண்ணத்திலும் அடிக்கோடிடப்பட்டும் இருக்கும்(Text links often appear as colored and underlined); ஆனால் இணைப்பு நடைகள்(link styles) ஒவ்வொரு வலைத்தளத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
· சுட்டிக் குறிப்பான் (mouse pointer), சுட்டிக்காட்டும் விரலுடன் கூடிய ஒரு கையாக மாறும் (hand
with a pointing finger).
· உங்கள் வலை உலாவியின் நிலைப் பட்டியில்(status
bar of your web browser) ஒரு URL
தெரியும். நீங்கள்
கிளிக் செய்தால்எந்த வலைத்தளம்
திறக்கும் என்று இது காண்பிக்கும்.
- பின் மற்றும் முன் பொத்தான்களைப் பயன்படுத்துதல்(Using the Back and Forward buttons): நீங்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் என்றுஉலாவிக்கொண்டிருக்கும்போது Internet Explorer நீங்கள் எந்த தளதத்திற்கு போகிறீர்கள் என்றதகவலைப் பதிவு செய்துகொள்கிறது. முந்தைய பக்கத்திற்குத்(previous page) திரும்பிச் செல்ல, பின்பொத்தானை(back button) கிளிக் செய்யவும். இன்னும் சில பக்கங்களுக்குத்திரும்பிச் செல்ல, பின்பொத்தானைப் பல முறை கிளிக்செய்யவும் (Click the Back button several times).பின்பொத்தானை கிளிக் செய்த பிறகு, பாதையில்முன்னே செல்லமுன்பொத்தானை கிளிக் செய்யலாம்.
- சமீபத்திய பக்கங்கள் மெனுவைப் பயன்படுத்துதல் Using the Recent Pages menu: சமீபத்தில் பார்த்த(visited in your current session) ஒரு பக்கத்திற்குத்(webpage) திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் பின் அல்லது முன் பொத்தான்களைத் திரும்பத் திரும்ப கிளிக் செய்ய விரும்பவில்லை என்றால் சமீபத்திய பக்கங்கள் மெனுவைப்(Recent Pages menu) பயன்படுத்தவும். முன் பொத்தானுக்கு அருகில் உள்ள அம்பை(arrow next to the Forward) கிளிக் செய்து, பட்டியலிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக