சனி, 6 ஏப்ரல், 2013

பாதுகாப்பையும் பாதுகாப்பான கணினிப் பயன்பாட்டையும் புரிந்துகொள்ள.

நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள், மற்றவர்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள், அல்லது மற்றவர்களுடன் கோப்புகளை பகிர்ந்துகொள்கிறீர்கள் என்றால் உங்கள் கணினிக்குத் தீங்கு ஏற்படாத வகையில் நீங்கள் அதற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் மற்றவர்களின் கணினிகளைத் தாக்கும் கணினி குற்றவாளிகள் (அவர்களுக்கு ஹாக்கர்கள், க்ராக்கர்கள் என்றும் பெயர்கள் உண்டு) பலர் இருக்கிறார்கள். இவர்கள் இணையம் வழியாக உங்கள் கணினியில் நுழைந்து உங்கள் தனிநபர் தகவலைத் திருடுவதன் மூலம் நேரடியாகத் தாக்கக்கூடும் அல்லது உங்கள் கணினிக்குத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட தீங்குதரும் மென்பொருட்களை (அல்லது தீம்பொருள்களை) உருவாக்கி மறைமுகமாகத் தாக்கலாம்.
நல்ல வேளையாக, நீங்கள் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இந்தக் கட்டுரை அபாயங்களை விவரித்து, நீங்கள் அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று விளக்குகிறது.


உங்கள் பாதுகாப்பு நிலையை Windows பாதுகாப்பு மையத்தில் சரிபார்க்கவும்.

Windows பாதுகாப்பு மையம்(security center), கணினி பாதுகாப்புக்கான உங்கள் தலைமையகம். அது உங்கள் கணினியின் தற்போதைய பாதுகாப்பு நிலையைக் காண்பித்து, உங்கள் கணினியை மேலும் பாதுகாப்பானதாக ஆக்க நீங்கள் செய்ய வேண்டியதைப் பரிந்துரைக்கிறது.

பாதுகாப்பு மையம் உங்கள் கணினியில் பாதுகாப்புக்கு அவசியமான பின்வரும் அம்சங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கும்:

•    பாதுகாப்புச் சுவர் (firewall). ஒரு பாதுகாப்புச் சுவர் உங்கள் கணினியை ஹாக்கர்கள் அல்லது தீங்குதரும் மென்பொருட்கள் அணுக விடாமல் தடுத்து அதற்குப் பாதுகாப்பளிக்கிறது.
•    தானியங்கு புதுப்பித்தல்கள் (automatic updates). Windows உங்கள் கணினிக்கான புதுப்பித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்று தவறாமல் பார்த்து அவற்றைத் தானாக நிறுவ முடியும்.
•    தீம்பொருள் பாதுகாப்பு (malware protection). வைரஸ் தடுப்பு மென்பொருட்கள் உங்கள் கணினியை வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் தாக்காமல் தடுக்கக்கூடும். வேவுபொருள் தடுப்பு மென்பொருட்கள் உங்கள் கணினிக்கு வேவுபொருட்களும் விரும்பத்தகாத பிற மென்பொருட்களும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க உதவுகின்றன.
•    பிற பாதுகாப்பு அமைப்புகள் (other security settings). இணையப் பாதுகாப்பு அமைப்புகள் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளனவா என்றும் பயனர் கணக்குக் கட்டுப்பாடு(user account control) இயக்கத்தில் இருக்கிறதா(turned on) என்றும் பாதுகாப்பு மையம் பார்க்கிறது. கூடுதல் தகவலுக்கு, பயனர் கணக்குக் கட்டுப்பாடு மேலோட்டப் பார்வை என்பதைப் பார்க்கவும்.
 

படம் Windows பாதுகாப்பு மையம் காட்டுகின்றது.

பாதுகாப்பு உருப்படிகளில் எதற்காவது சிவப்பு அல்லது மஞ்சள் பின்புலம் இருந்தால், உங்கள் கணினி பாதுகாப்பு அபாயங்களுக்கு உள்ளாகக்கூடும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, ஒரு உருப்படியை கிளிக் செய்து விரிக்கவும், பிறகு அடுத்து வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பாதுகாப்பு எச்சரிக்கைகள் என்பவை என்ன?

பாதுகாப்புச் சுவர், தானியங்கு புதுப்பித்தல், தீம்பொருள் பாதுகாப்பு, அல்லது பிற பாதுகாப்பு அமைப்புகளில் ஏதேனும் ஒரு அம்சத்தில் மேம்பட்ட பாதுகாப்பு தேவை என்று Windows கண்டறிந்தால், அந்தச் சிக்கல் சரிசெய்யப்படும் வரை நீங்கள் உள்நுழையும்போதெல்லாம் ஓர் அறிவிப்பு தோன்றும். அறிவிப்புகள் பணிப்பட்டியின் அறிவிப்புப் பகுதியில் காண்பிக்கப்படும்.
 

படத்தில் அறிவிப்பு பணிபட்டியில் பாதுகாப்பு அறிவிப்பு தோன்றியுள்ளதை காட்டுகின்றது.

அறிவிப்பை கிளிக் செய்து பாதுகாப்பு மையத்தைத் திறக்கவும்; அங்கு நீங்கள் அந்தச் சிக்கலை எப்படிச் சரிசெய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பு
•    பாதுகாப்பு அறிவிப்புகளை அணைத்துவைக்க அல்லது அறிவிப்புப் பகுதியில் பாதுகாப்பு மையப் படவுருவை மறைக்க, பாதுகாப்பு மையம் என்னை எச்சரிக்கும் முறையை மாற்று என்பதை கிளிக் செய்து ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும். நீங்கள் அறிவிப்புகளை அணைத்துவைத்தாலும் பாதுகாப்பு மையம் தொடர்ந்து பாதுகாப்பு நிலையைச் சோதித்து நிலையைக் காண்பிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக