windows -ஐ பிணையத்துடன் இணைதத்து விட்டால் ஒரு கணினியில் உள்ள எல்லா
பயன்பாடுகளையும் ( application programming) பிணையத்தில் உள்ள வேறொரு கணினியின்
மூலம், அந்தப்பயன்களை காணலாம் மற்றும் அதனை மாற்றி அமைக்களாம். பிணையத்தில் மூன்று
வகைகள் உண்டு 1. உள்ளுா் வரம்பு பிணையம் (local area network), 2. பிராந்திய வரம்பு
பிணையம் (metropolitan are network), 3. வைய வரம்பு பிணையம் (wide area
network).
இந்த மூன்று வகை பிணையத்திளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வைய வரம்பு பிணைத்தினுள்ள கணினிகளின் பலனை அனுபவிக்க ஒரு கணினியை இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்புகளை கம்பி மூலம் ஏற்படுத்தலம் சில நவீன கணினிகள் கம்பியில்லா இணைப்புகளையே கொண்டுள்ளன. • கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல். • இல்ல பிணையத்தில்(home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல். • பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத் தீர்த்தல். ஆகிய வற்றை பற்றி இந்த வலைதளத்தில் விரிவாகப் பார்போம். பிணையமாக்கள்
1.
கம்பியில்லா பிணையங்களை கண்டுபிடிப்பதில் எழும் சிக்கல்களைத்
தீர்த்தல்.
உங்கள் கணினியில் ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் (wireless network adapter) இருந்தால், விண்டோஸ் தானாகவே உங்கள் கணினியின் வரம்பில் உள்ள எல்லா வயர்லெஸ் நெட்வொர்க்குகளையும் கண்டறியும். நீங்கள் அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்குகள் பட்டியலையும் பார்க வேண்டும்மெனில் பிணையம் இணைத்தல் (connect to network) என்னும் மெனுவை கிலிக்செய்து பார்து கொள்ளலாம். விண்டோஸ் உங்கள் கணினியில் வரம்பில் உள்ள கம்பியில்லா பிணைய இனைப்பை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அது ஒரு பின்வரும் காரணங்கள் இருக்க கூடும்:
நீங்கள் நெருக்கமாக திசைவி அல்லது அணுகல் புள்ளி பெற முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர்க்கு வெளிப்புறத்தில் ஆன்டென்னா வாங்கி நிறுவ வேண்டும். அதாவது external antenna வை உங்கள் wireless adapter ல் பெருத்தவேண்டும் அவ்வாறு செய்தால் வெளிப்புற ஆன்டென்னாவில் இருந்து அதிக தூரத்தில் இருந்து கம்பியில்லா இணைப்பு ஏற்படும் . நீங்கள் ஒரு கூடுதல் ஆண்டெனா நிறுவ முடியும் என்பதை உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அடாப்டர் தயாரிப்பாலா் கொடுத்துள்ளார என பார்கவும்
2. இல்ல
பிணையத்தில் (home network) உள்ள கணிப்பொறிகளை கண்டுபிடிப்பதில் எழும்
சிக்கல்களைத் தீர்த்தல்.
உங்கள் கணினி பிணைய இணைப்பில் இல்லை யெனில். நெட்வொர்க் கோப்புறை (network folder) காலியாக தோன்றும், இந்த சிக்கலை தீர்க்க, அந்த நெட்வொர்க்கில் புதிய பிணைய இணைப்பு ஏற்படுத்த வேண்டும். பிணைய கண்டுபிடிப்பு (network discovery) உங்களை மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் இருப்பதை பார்க்க தடுக்கின்றது எனில் உங்கள் கணினியில் பிணைய கண்டுபிடிப்பு (network discovery) அமைப்பை turn off செய்யப்பட்டுள்ளது எனப்பொருள் ,எனவே நீங்கள் பிணைய மற்ற கணினிகள் மற்றும் சாதனங்கள் பார்க்க முடியாது. உங்கள் பிணைய கண்டுபிடிப்பு அமைப்பை (network discovery settings) மாற்ற, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்: நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் திறக்கவும் (open network and sharing center) பிணைய கண்டுபிடிப்பு (network discovery) ஆஃப் செய்திருந்தால், பகுதி விரிவாக்க அம்புக்குறி பொத்தானை கிளிக் செய்யவும், பிணைய கண்டுபிடிப்பு இயக்கு (Turn on network discovery) என்பதை கிளிக் செய்து, பின்னர் பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடவுச்சொல்லை தட்டச்சு செய்து உறுதி படுத்த வேண்டும்.நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் (network and sharing center) ஒரு மையப்படுத்தப்பட்ட இடம் வழங்குகிறது (provides a centralized location ) அதன் மூலம் நீங்கள் உள்ளூர் பகுதி நெட்வொர்க் (LAN - local area network), கம்பியில்லா அக பரப்பு நெட்வொர்க் (WLAN - wireless local area network), மெய்நிகர் தனியார் பிணையம் (VPN - virtual private network), கணினியுடன் இணைக்கப்பட்ட டயல் அப் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் (dial-up, and Broadband connections on your computer) போன்றவற்றை பார்க்க (to view), உருவாக்க (to create), மாற்ற( to change) முடியும். கூடுதலாக, நீங்கள் நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையம் முலம் (network and sharing center) உள்ளூர் கணினி (local computers- பிணையம்யற்ற கணினி) மற்றும் பகிர்வு விருப்பங்கள்ளின் (sharing option) அமைக்கபுகளை மாற்ற (configuration change) முடியும். அதன் காரணமாக நீங்கள் பிணைய இணைப்பில் உள்ள மற்ற கணினிகளுக்கு (computers) மற்றும் சாதனங்களுக்கு (devices) கோப்புகள் (file sharing or content sharing) கிடைக்கும் அல்லது கிடைக்காது என்ற உள்ளடக்கத்தை குறிப்பிடலாம்.
3. பிணையம் மற்றும் இணைய இணைப்பில் எழும் சிக்கல்களைத்
தீர்த்தல்.
அனைத்து கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளது என உறுதிபடுத்தவும் (எடுத்துக்காட்டாக, நேரடியாகவோ அல்லது ஒரு திசைவி மூலம் (router), உங்கள் மோடம் நல்ல நிலையில் உள்ள தொலைபேசி மூலம் இணைக்கப்படவும்) நீங்கள் மற்றொரு கணினியில் உங்கள் கணினியை இணைக்க முயற்சிக்கும் போது, அந்த கணினி செயல்படும் நிலையில் (make sure that computer is turn on) உள்ளதா என உறுதி படுத்தவும். நீங்கள் புதிய மென்பொருள் நிறுவப்பட்ட பிறகு பிரச்சனை தொடங்கியது என்றால், அவைகள் மாற்றப்பட்டுள்ளனவா என்பதை உங்கள் இணைப்பு அமைப்புகளை (connection settings) சரிபார்க்கவும். பிணைய இணைப்புகளை திறக்க start menu வை click செய்து control panel ஐ கிலிக் செய்யவும் பிறகு network connection ஐ கிலிக் செய்யவும் . இணைப்பில் வலது கிளிக் செய்து, பின்னர் பண்புகள் கிளிக். நீங்கள் ஒரு கணினி உரிமையாலர் என்பதை உறுதி படுத்த கடவுச்சொல்லை (username and password) கேட்கும் என்றால், கடவுச்சொல்லை தட்டச்சு செய்து உறுதி படுத்தவும். |
கணினி என்பது என்ன, கணினியின் வகைகள், கணினியின் பயன்பாடுகள், மற்றும் கணினி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை பற்றி இந்த வலைத்தளம் விளக்கமாக கூறுகின்றது. அது மட்டும்யின்றி கணினியில் இயக்கமுறைமை எவ்வாறு தரவுகளை மேலான்மை செய்கின்றது என்பதை பற்றியும், பாதுகாப்பான முறையில் கணினியை எவ்வாறு இயக்குவது என்பதனை பற்றியும் இந்த வலைத்தளத்தில் தெளிவாக எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
Windows -ஐ பிணையத்துடன் இணைத்தல்.
Windows ஓரப்பட்டியும் பெட்டகங்களும்.
Windows விளையாட்டுகளை கணினியில் விளையாடுவது பற்றி விளக்கம்.
Windows -இல் சில விளையாட்டுகள் (games) இருக்கின்றன; இவற்றை ஆடி உற்சாகமூட்டிக்கொள்ளலாம். இந்தக் கட்டுரை ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது. மேலும் விரிவான உதவி பெற, விளையாட்டின் உதவி மெனுவில் உதவியைக் காண் (view help) என்பதை கிளிக் செய்யவும்.
Windows -உடன் வரும் விளையாட்டுகள், உங்கள் கணினியில் உள்ள விளையாட்டுகளுக்கான மைய இருப்பிடமான விளையாட்டுகள் கோப்புறையில் இருக்கும்.
விளையாட்டுகள் கோப்புறையைத்(Games folder) திறக்க, தொடக்கம் பொத்தானை (Start button) கிளிக் செய்து, நிரல்கள்(programs) என்பதை கிளிக் செய்யவும், பிறகு விளையாட்டுகள் (games) என்பதை கிளிக் செய்யவும், பிறகு விளையாட்டுகள். கோப்புறையில் உள்ள விளையாட்டுகளில் ஒன்றைத் திறக்க, அதன் படவுருவை இரு-கிளிக் செய்யவும் (To open the Games folder, click the Start button -> click Programs ->click Games, ->and then click Games. To open one of the games in the folder, double-click its icon).
குறிப்பு
• Windows விளையாட்டுகள் ஒரு சில Windows பதிப்புகளில் இயல்புநிலையாக நிறுவப்பட்டிருக்காது. அவற்றை நிறுவ, தொடக்கம் பொத்தானை (Start button ) கிளிக் செய்து, அமைப்புகள் (Settings) என்பதை கிளிக் செய்து,கட்டுப்பாட்டுப் பலகம் ( Control Panel) என்பதை கிளிக் செய்து, பிறகு நிரல்கள் மற்றும் அம்சங்கள் (Programs and Features) என்பதை கிளிக் செய்யவும், பிறகு Windows அம்சங்களை இயக்கவும் அல்லது அணைக்கவும் என்பதை கிளிக் செய்யவும் (Turn Windows features on or off). Windows அம்சங்கள் உரையாடல் பெட்டியில் (Windows Features dialog box), விளையாட்டுகள் தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும் (Games check box), பிறகு சரி (OK) என்பதை கிளிக் செய்யவும். கடவுசொல்லை கேட்டால் கணினி நிர்வகிப்பாளரின் அனுமதி கோறவும்.
செஸ் டைட்டன்ஸ் (Chess Titans)
செஸ் டைட்டன்ஸ் முப்பரிமாண வரைவியலையும் அசைவூட்டத்தையும் (three-dimensional graphics and animation) சேர்த்து நாமறிந்த செஸ் விளையாட்டிற்கு உயிரூட்டுகிறது. தனிப்படுத்திக் காட்டப்படும் சதுரங்கள் நீங்கள் உங்கள் காய்களை எங்கே நகர்த்தலாம் என்று காண்பிக்கின்றன. செராமிக், பளிங்கு, அல்லது மரத்தாலான போர்டைத் தேர்வு செய்யவும், போர்டை நீங்கள் விரும்பும் காட்சிக்கு சுழற்றவும்.
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1 அல்லது 2
• கடின நிலைகள்: 1 (தொடக்க நிலை) முதல் 10 (நிபுணர்) வரை
• ஆட்ட நேரம்: 10 முதல் 60 நிமிடங்கள்
மாஜோங் டைட்டன்ஸ் (Mahjong Titans)
மாஜோங் டைட்டன்ஸ் என்பது டைல்களை வைத்து ஆடப்படும் (played with tiles) ஒரு சாலிட்டேர் விளையாட்டு (solitaire game). போர்டில் ஜோடியாக இருக்கும் டைல்களை அகற்றவும் (Remove matching pairs of tiles from the board); உங்களால் எல்லா டைல்களையும் அகற்ற முடிந்தால் நீங்கள் ஜெயித்தீர்கள்! (you win!) எனப்பொருள். நான்கு விதமான டைல் வடிவமைப்புகள் (four different tile designs), ஆறு விதமான டைல் தளவமைப்புகள் (six different tile layouts), பல விதமாந பின்புலங்கள் (variety of backgrounds) ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இது பழங்கால மாஜோங் விளையாட்டிலிருந்து (ancient game of mahjong) மாறுபட்டது, ஆனால் இதுவும் அதே போன்ற டைல்களைத்தான் பயன்படுத்துகிறது.
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: டைல் தளவமைப்புக்கேற்ப மாறும்
• ஆட்ட நேரம்: 10 முதல் 30 நிமிடங்கள்
மைன்ஸ்வீப்பர் (Minesweeper)
மைன்ஸ்வீப்பரில், சதுரங்கள் நிரம்பிய மைதானத்தின் அடியில் மறைந்திருக்கும் எல்லா கண்ணி வெடிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சதுரத்தை கிளிக் செய்தால் அதில் என்ன இருக்கும் என்று தெரியும். சில சதுரங்களில் எண்கள் இருக்கும். அருகில் எங்கே கண்ணி வெடிகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க இவை உதவும். ஆனால் ஜாக்கிரதை — கண்ணி வெடி உள்ள ஒரு சதுரத்தை கிளிக் செய்தீர்கள் என்றால் போர்டில் இருக்கும் எல்லா கண்ணி வெடிகளும் வெடித்து ஆட்டம் முடிந்துவிடும்!
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்.
பர்பிள் ப்ளேஸ் (Purble Place)
பர்பிள் ப்ளேஸ் என்பது மூன்று விளையாட்டுகள் அடங்கிய ஒரு விளையாட்டு: காம்ஃபி கேக்ஸ் (Comfy Cakes), பர்பிள் ஷாப் (Purble Shop), பர்பிள் இணைகள் (Purble Pairs). தொடக்க நிலையில், இந்த அதிர்ஷ்ட அடிப்படையிலான ஆட்டங்கள் (whimsical games) குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்றவை. இவை நினைவுத் திறன் (in memory), ஒழுங்குவரிசையை அடையாளம் காணுதல் (pattern recognition), பகுத்தறிதல் (reasoning) ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உதவுகின்றன, உயர்ந்த கடின நிலைகள், எல்லா வயது ஆட்டக்காரர்களுக்கும் சவாலாக இருக்கும்.
i) காம்ஃபி கேக்ஸ். (Comfy Cakes)
இந்த விளையாட்டில் நீங்கள் தலைமைச் சமையல்காரர், பர்பிளின் பேக்கரியில் இருப்பீர்கள். இங்கு ஆர்டர் செய்யப்பட்ட கேக்குகளை நீங்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பேக்கரியின் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, நீங்கள் கேக்குகளை ஆர்டர் செய்யப்பட்டபடி, சரியான வடிவங்கள் (right combination of shapes), பேட்டர்கள் (batters), ஃபில்லிங் (fillings), ஐசிங் (icings), அலங்காரங்களை (decorations) ஆகியவற்றைப் பயன்படுத்தி கேக்குகளைத் தயாரிக்க வேண்டியிருக்கும். வேகமாகத் தயாரியுங்கள், ஏனென்றால் கேக்குகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்!
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்.
ii)பர்பிள் ஷாப். (Purble Shop)
இந்த விளையாட்டு உங்கள் பகுத்தறியும் திறனைச் சோதிக்கிறது (tests your powers of deduction). உங்கள் பர்பிளின் முகம் திரைக்குப் பின்னாலுள்ள மர்மமான பர்பிளுடன் பொருந்தும்படி செய்வதுதான் உங்கள் இலக்கு. அலமாரிகளிலிருந்து தலைமுடி, கண்கள், மூக்கு, உதடுகள் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும், பிறகு உங்களிடம் எத்தனை அம்சங்கள் சரியாக இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவும்!
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள்
iii) பர்பிள் இணைகள். (Purble Pairs)
இந்த விளையாட்டில், போர்டில் உள்ள படங்களில், பொருத்தமான இணைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு டைலைப் புரட்டினால் ஒரு படம் தெரியும். பிறகு அதற்கு ஜோடியான படத்தைக் கண்டுபிடிக்கவும். போர்டில் உள்ள எல்லா டைல்களையும் ஒரு பார்வை பார்க்க ஒரு "sneak peek" டோக்கனைப் பயன்படுத்தவும்.
• ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை: 1
• கடின நிலைகள்: தொடக்க நிலை, நடு அளவு, உயர்நிலை
• ஆட்ட நேரம்: ஒன்று முதல் பத்து நிமிடங்கள்
ஆவணத்தை வடிவமைத்தல் .
வடிவமைத்தல் என்பது உங்கள் ஆவணத்தில் உள்ள உரையின் தோற்றத்தையும் அது
எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கிறது. WordPad உங்கள் ஆவணத்தில்
உள்ள வடிவமைப்பை நீங்கள் எளிதாக மாற்ற உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் வெவ்வேறு
எழுத்துருக்களையும் (different fonts) எழுத்துரு அளவுகளையும் (different font
sizes) தேர்ந்தெடுக்கலாம், உரையை நீங்கள் விரும்பும் எந்த வண்ணத்திற்கு (color you
want) வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் ஆவணத்தின் சீரமைப்பையும் (align) எளிதாக
மாற்ற முடியும்.
எழுத்துரு, எழுத்துரு நடை, எழுத்துரு அளவு ஆகியவற்றை மாற்ற -To change the font, font style, or font size
1. நீங்கள் வடிவமைப்பை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2. வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3. எழுத்துரு பெட்டியில் (Font box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துருவைத் (font variety) தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font you want to use).
4. எழுத்துரு நடை பெட்டியில் (Font Style box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துரு நடையைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font style you want to use).
5. அளவு பெட்டியில் (Size box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் அளவைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு -Tip
2. வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3. வண்ணம் என்பதற்குக் கீழ் (Under Color,), நீங்கள் விரும்பும் வண்ணத்தை கிளிக் செய்யவும் (click the color that you want).
வெவ்வேறு எழுத்துருக்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆவணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்:
உங்கள் ஆவணத்தில்
உள்ள உரையை (text) (அல்லது ஆவணத்தில் உள்ள ஒரு பத்தியை (paragraph) ) இடது
ஓரத்திற்கு (left margin), மையத்திற்கு (center), அல்லது வலது ஓரத்திற்குச் (right
margin) சீரமைக்கலாம்.
1. நீங்கள் சீரமைப்பை மாற்ற விரும்பும் பத்தியைத் தேர்ந்தெடுக்கவும் (select paragraph).
2. வடிவமை மெனுவில் (format menu), பத்தி (Paragraph) என்பதை கிளிக் செய்யவும்.
3. சீரமைப்பு பெட்டியில் (Alignment box), நீங்கள் விரும்பும் சீரமைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (click the alignment you want).
பத்திகள் வெவ்வேறு சீரமைப்புகளில் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தில் பார்க்கலாம்:
நீங்கள் உங்கள் ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது (when editing the documents) அவ்வப்போது (periodically) அதைச் சேமிப்பது (to save) நல்லது. அப்போதுதான் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் கணினி இயங்குவது நின்றுவிட்டால் கூட நீங்கள் செய்த பணி எதுவும் தொலைந்துபோகாது. ஆவணத்தைச் சேமித்தால்தான் நீங்கள் விரும்பும்போது அதில் மீண்டும் பணிபுரியவும் முடியும்.
• கோப்பு மெனுவில் (file menu), சேமி (save) என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஆவணத்தை இதற்கு முன் சேமிக்கவில்லை எனில், ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (document name or file name, eg: schoolwork.doc ) தந்து சேமிக்க உங்கள் கணினியில் உள்ள ஓர் இருப்பிடத்தைக் (file or folder directory location) குறிப்பிடும்படி உங்களிடம் கேட்கப்படும்:
1. இதில் சேமி பெட்டியில் (Save in box), நீங்கள் ஆவணத்தைச் சேமிக்க விரும்பும் இருப்பிடத்தை கிளிக் செய்யவும் (click the location where you want to save the document).
2. கோப்பின் பெயர் பெட்டியில் (File name box), உங்கள் ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (type a name ) தட்டச்சு செய்யவும்.
3. சேமி (Save) என்பதை கிளிக் செய்யவும்.
கோப்பு மெனுவில் (File menu), அச்சிடு (Print) என்பதை கிளிக் செய்யவும். அச்சிடு உரையாடல் பெட்டியில் (Print dialog box), நீங்கள் எந்தப் பக்கங்களை அச்சிட விரும்புகிறீர்கள் (Page Range ) என்பதையும் எத்தனை நகல்கள் (Number of copies ) என்பதையும் பக்க வரம்பு பெட்டியிலும்(Page Range box) நகல்களின் எண்ணிக்கை பெட்டியிலும் (Number of copies box) குறிப்பிடவும். முடிந்ததும், அச்சிடு (Print ) என்பதை கிளிக் செய்யவும்.
எழுத்துரு, எழுத்துரு நடை, எழுத்துரு அளவு ஆகியவற்றை மாற்ற -To change the font, font style, or font size
1. நீங்கள் வடிவமைப்பை மாற்ற விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (select text).
2. வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3. எழுத்துரு பெட்டியில் (Font box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துருவைத் (font variety) தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font you want to use).
4. எழுத்துரு நடை பெட்டியில் (Font Style box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் எழுத்துரு நடையைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் (select the font style you want to use).
5. அளவு பெட்டியில் (Size box), நீங்கள் பயன்படுத்த விரும்பும் அளவைத் தட்டச்சு செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு -Tip
- எழுத்துரு, எழுத்துரு அளவு, எழுத்துரு நடை ஆகியவற்றை மாற்ற நீங்கள் வடிவமைப்புப் பட்டியில் (format bar) உள்ள கட்டளைகளையும் (command keys) பயன்படுத்தலாம்.
வண்ணத்தை மாற்ற - To change the color
1. நீங்கள் வண்ணத்தை மாற்ற
விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும் (Select the text).2. வடிவமை மெனுவில் (Format menu), எழுத்துரு (Font) என்பதை கிளிக் செய்யவும்.
3. வண்ணம் என்பதற்குக் கீழ் (Under Color,), நீங்கள் விரும்பும் வண்ணத்தை கிளிக் செய்யவும் (click the color that you want).
வெவ்வேறு எழுத்துருக்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆவணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்:
சீரமைப்பை மாற்ற - To change the alignment
1. நீங்கள் சீரமைப்பை மாற்ற விரும்பும் பத்தியைத் தேர்ந்தெடுக்கவும் (select paragraph).
2. வடிவமை மெனுவில் (format menu), பத்தி (Paragraph) என்பதை கிளிக் செய்யவும்.
3. சீரமைப்பு பெட்டியில் (Alignment box), நீங்கள் விரும்பும் சீரமைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (click the alignment you want).
பத்திகள் வெவ்வேறு சீரமைப்புகளில் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தில் பார்க்கலாம்:
ஆவணத்தைச் சேமித்தல் - Saving your
document
நீங்கள் உங்கள் ஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது (when editing the documents) அவ்வப்போது (periodically) அதைச் சேமிப்பது (to save) நல்லது. அப்போதுதான் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் கணினி இயங்குவது நின்றுவிட்டால் கூட நீங்கள் செய்த பணி எதுவும் தொலைந்துபோகாது. ஆவணத்தைச் சேமித்தால்தான் நீங்கள் விரும்பும்போது அதில் மீண்டும் பணிபுரியவும் முடியும்.
ஆவணத்தைச் சேமிக்க
- To save the document
• கோப்பு மெனுவில் (file menu), சேமி (save) என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஆவணத்தை இதற்கு முன் சேமிக்கவில்லை எனில், ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (document name or file name, eg: schoolwork.doc ) தந்து சேமிக்க உங்கள் கணினியில் உள்ள ஓர் இருப்பிடத்தைக் (file or folder directory location) குறிப்பிடும்படி உங்களிடம் கேட்கப்படும்:
1. இதில் சேமி பெட்டியில் (Save in box), நீங்கள் ஆவணத்தைச் சேமிக்க விரும்பும் இருப்பிடத்தை கிளிக் செய்யவும் (click the location where you want to save the document).
2. கோப்பின் பெயர் பெட்டியில் (File name box), உங்கள் ஆவணத்திற்கு ஒரு பெயரைத் (type a name ) தட்டச்சு செய்யவும்.
3. சேமி (Save) என்பதை கிளிக் செய்யவும்.
ஆவணத்தை அச்சிடுதல் Printing your
document
கோப்பு மெனுவில் (File menu), அச்சிடு (Print) என்பதை கிளிக் செய்யவும். அச்சிடு உரையாடல் பெட்டியில் (Print dialog box), நீங்கள் எந்தப் பக்கங்களை அச்சிட விரும்புகிறீர்கள் (Page Range ) என்பதையும் எத்தனை நகல்கள் (Number of copies ) என்பதையும் பக்க வரம்பு பெட்டியிலும்(Page Range box) நகல்களின் எண்ணிக்கை பெட்டியிலும் (Number of copies box) குறிப்பிடவும். முடிந்ததும், அச்சிடு (Print ) என்பதை கிளிக் செய்யவும்.
WordPad -ஐப் பயன்படுத்துதல்.
வலையில் தேடுதல்.
இணையத்தில்
கோடிக்கணக்கான வலைப்பக்கங்கள் இருப்பதால், ஒவ்வொரு வலைப்பக்கமாகச் சென்று உங்களுக்குத் தேவையான ஒரு
தகவலைக் கண்டுபிடிப்பது அசாத்தியம். நல்ல வேளையாக, அதற்கு இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள்
தரும் சொற்களுக்கு அல்லது சொற்றொடர்களுக்கு மிகவும்
பொருத்தமாந பக்கங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு தேடு பொறியைப்(search engine) பயன்படுத்தலாம்.
Google, Yahoo! Search, MSN Search, AOL Search, Ask.com போன்ற சில முக்கியமான தேடு பொறிகள்(search
engine) இருக்கின்றன. நீங்கள் நேரடியாக எந்தத் தேடு
பொறியின் வலைத்தளத்திலிருந்தும்(directly from any search
engine's site) வலையில் தேடலாம்(can
search web). அல்லது, முதலில் ஒரு
தேடல் தளத்திற்குச் செல்லும் வேலையை மிச்சப்படுத்த, Internet
Explorer -இல் உள்ள தேடு
பெட்டியைப்(Search box) பயன்படுத்தலாம்:
தேடு பெட்டியைப்
பயன்படுத்தி வலையில் தேட - To search the web using the search
box
1. உங்களுக்கு ஆர்வம் உள்ள ஒரு தலைப்பு பற்றிச் சில
சொற்களை(word) அல்லது ஒரு சொற்றொடரை(phrase) — உதாரணமாக, "அசைவ சமையல் குறிப்புகள்" என — தேடு பெட்டியில் தட்டச்சு
செய்யவும். உங்கள் தேடல் தொடர்
நீங்கள் தேட விரும்பும் விஷயத்தைத் துல்லியமாக விவரிக்க வேண்டும்.
2. ENTER விசையை அழுத்தவும் அல்லது
தேடு பொத்தானை(search
button) கிளிக் செய்யவும்.
3. பத்துக்கு மேற்பட்ட தேடல் முடிவுகள் (search
results)
கொண்ட ஒரு பக்கம் தோன்றும்.
அவற்றில் ஒரு வலைத்தளத்திற்குச் செல்ல ஒரு முடிவை கிளிக் செய்யவும்.
நீங்கள் தேடுவது, முடிவுகள் (search results) பக்கத்தில் இல்லை என்றால், அந்தப் பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள அடுத்து என்பதை கிளிக் செய்து மேலும் பல முடிவுகளைப்
பார்க்கவும், அல்லது மீண்டும்
புதிதாகத் தேடவும்.
குறிப்பு:
o சில தேடல் முடிவுகள் விளம்பரங்களாக இருக்கும். இவை
பொதுவாக "Sponsored Sites" அல்லது
"Sponsored Links" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
பிடித்த வலைப்பக்கங்களைச்
சேமித்தல் - Saving favorite webpages.
நீங்கள் அடிக்கடி பார்க்கத்தக்க
வலைத்தளம் ஒன்றைக் கண்டுபிடித்தால் அதை Internet Explorer -இல் ஒரு பிடித்தவை இணைப்பாகச்(Favorites link) சேமிக்கவும். இதன் மூலம் நீங்கள் அந்த
வலைத்தளத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்ரால் பிடித்தவை
பட்டியலில்(Favorites list) அதை
கிளிக் செய்தாலே போதும்; அதன்
வலை முகவரியை நினைவில் கொள்ளத் தேவையில்லை.
ஒரு வலைப்பக்கத்தைப் பிடித்தவை இணைப்பாகச் சேமிக்க (to save
webpage as favorite)
1.
Internet Explorer -இல், நீங்கள் பிடித்தவை இணைப்பாகச் சேமிக்க விரும்பும்
வலைப்பக்கத்திற்குச்(go to your website) செல்லவும்.
2. பிடித்தவையில் சேர் பொத்தானை (Add to
Favorites என்ற
button)கிளிக் செய்துவிட்டு, பிறகு பிடித்தவையில்
சேர்(Add to Favorites link) என்பதை கிளிக்
செய்யவும்.
3. பெயர்
பெட்டியில்
(Name box) அந்த
வலைப்பக்கத்திற்கு ஒரு பெயரைத் தட்டச்சு(type a name for the
webpage,) செய்து
சேர்(Add) என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு பிடித்தவை இணைப்பைத் திறக்க (to open a
favorite)
2. பிடித்தவை பொத்தான்(Favorites button) முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை(not selected already) என்றால் favorite buttonஐ கிளிக் செய்யவும்.
3. பிடித்தவை பட்டியலில் (in the Favorites list), நீங்கள் திறக்க விரும்பும் வலைப்பக்கத்தை(webpageஐ) கிளிக் செய்யவும்.
பிடித்தவை
இணைப்புகள்(favorite-links) ஏராளமாக இருந்தால், அவற்றைக் கோப்புறைகளாக(file)வும்
ஒழுங்குபடுத்தலாம்.
வரலாறு பட்டியலைப் பயன்படுத்துதல் - using the
history list.
1. Internet Explorer
-இல்
பிடித்தவை
மையம்(Favorites Center) பொத்தானை(button) கிளிக்
செய்யவும்.
2. வரலாறு
பொத்தான்(History button) முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை(not
already selected) என்றால் அதை கிளிக்
செய்யவும்.
3. வரலாறு
பட்டியலில்(History list) ஒரு நாளை(day) அல்லது வாரத்தை(week) கிளிக் செய்யவும், பிறகு ஒரு வலைத்தளத்தின் பெயரை(website name) கிளிக் செய்யவும். பிறகு
அந்தப் பட்டியல் விரிந்து, நீங்கள் அந்த வலைத்தளத்தில் பார்த்த
வலைப்பக்கங்களைக் காண்பிக்கும்.
4. நீங்கள் திறக்க விரும்பும்
வலைப்பக்கத்தை(webpage) கிளிக்
செய்யவும்.
ஒரே சமயத்தில் பல
வலைப்பக்கங்களைத் திறத்தல் - opening multiple webpages
ஏதேனும் ஒரு காரணமாக,
ஒரு வலைப்பக்கத்தை மூடாமலே ஒன்றுக்கு
மேற்பட்ட வலைப்பக்கத்தைத் திறக்க வேண்டும்மெனில். இந்தத் தேவையைப் பூர்த்தி
செய்ய, Internet Explorer, நீங்கள் புதிதாகத் திறக்க விரும்பும் ஒவ்வொரு பக்கத்திற்கும்
ஒரு தாவலை(tab) உருவாக்கி தறுகிறது. தாவல்களைப்(tabs) பயன்படுத்தி
ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் துரிதமாக
மாறலாம்; எல்லா
பக்கங்களையும் ஒரே சமயத்தில் கூடப் பார்க்கலாம்.
ஒரு வலைப்பக்கத்தைப் புதிய தாவலில்
திறக்க, புதிய தாவல் பொத்தானை(New Tab button) கிளிக்
செய்யவும்:திறந்திருக்கும் எல்லா வலைப்பக்கங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க, விரைவுத் தாவல்கள்(Quick Tabs) பொத்தானை கிளிக் செய்யவும். ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் ஒரு சிறு வடிவம் தோன்றும்(miniature version). ஒரு பக்கத்திற்கு மாற அந்தப் பக்கத்தின் சிறு வடிவத்தை கிளிக் செய்யவும்.
திறந்திருக்கும் அனைத்து வலைப்பக்கங்களையும் பார்க்க விரைவுத் தாவல்கள்(quick tabs) பொத்தானைப் பயன்படுத்தவும்
ஒரு தாவலை மூடுவதற்கு(to close tabs), அந்தத் தாவலின் வலப்பக்கத்தில்(tabs right side) உள்ள மூடு(close) பொத்தானை கிளிக் செய்யவும்.
வலைக்குச் செல்ல.
ஒரு இணைய இணைப்பை(internet
connection) உருவாக்கியப்பின் Internet Explorer மூலம் வலையை நீங்கள் அணுகலாம். Internet Explorer -என்பது
Windows
Operating system -இல்
இருக்கும் ஒரு வலை உலாவி (Microsoft corporation web browser). நீங்கள் உங்கள் கணினியில்
நிறுவப்பட்டுள்ள வேறு ஒரு வலை உலாவிகளையும்(other web browsers
–Firefox)
பயன்படுத்தலாம்.
தொடக்கம் பொத்தானை(start button) கிளிக் செய்து,
நிரல்கள்(programs)
என்பதன் வழியாக சென்று,
பிறகு Internet
Explorer என்பதை
கிளிக் செய்யவும்.
நீங்கள் Internet Explorer
-ஐத் தொடங்கும்போது, அது முகப்புப் பக்கமாக
(homepageஆக) அமைக்கப்பட்டுள்ள
வலைப்பக்கத்திற்குச்(webpageஐ open செய்யும்) செல்லும். இயல்புநிலையாக(by
default), MSN.com என்ற வலைதளத்தை முகப்புப் பக்கமாக(homepage)
அமைக்கப்பட்டுள்ளது. இது பல வகையான தகவல்களையும் சேவைகளையும் கொண்ட ஒரு
Microsoft வலைத்தளம். (உங்கள்
கணினியின் உற்பத்தியாளர் வேறொரு வலைப்பக்கத்தை முகப்புப் பக்கமாக
அமைத்திருக்கக்கூடும்.) இருந்தாலும், நீங்கள் எந்தப் பக்கத்தையும் (அல்லது ஒரு வெற்றுப்
பக்கத்தை) உங்கள் முகப்புப் பக்கமாக அமைத்துக்கொள்ளலாம். உதவிக்குறிப்பு
· நீங்கள் வேறு வலைத்தளங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்கள் முகப்புப் பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல
Internet Explorer -இல்
உள்ள முகப்பு பொத்தானை(home page button)கிளிக் செய்யவும்.
ஒரு வலை முகவரியை உள்ளிடுதல் - entering a
web address
ஒவ்வொரு வீட்டிற்கும் அதற்குரிய முகவரி எப்படி
இருக்கிறதோ, அது போல
ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் அதற்கென்று தனியாக வலை முகவரி
உள்ளது. இந்த முகவரிக்கு யூனிஃபார்ம் ரிசோர்ஸ் லொகேட்டர் (URL – uniform resource locator) என்று பெயர். உதாரணமாக, Microsoft -இன் பிரதான வலைத்தளத்தின் URL(முகவரி), http://www.microsoft.com.
ஒரு வலைப்பக்கத்தின் URL உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் அதை நேரடியாக Internet Explorer -இல் தட்டச்சு செய்யலாம்:
1. முகவரி
பெட்டியில்(Address box) URL -ஐத் தட்டச்சு செய்யவும்.
2. அந்த வலைத்தளத்திற்குச் செல்ல, செல் பொத்தானை(Go button) கிளிக் செய்யவும் அல்லது ENTER விசையை(key) அழுத்தவும்.
URLகளைத் தட்டச்சு செய்ய முகவரி
பெட்டியைப் (address box) பயன்படுத்தவும்.
· நீங்கள்
http:// என்பதைத்
தட்டச்சு செய்யத் தேவையில்லை. உதாரணமாக, நீங்கள்
www.microsoft.com என்று தட்டச்சு செய்தால் Internet Explorer
மிச்சத்தை நிரப்பிவிடும்.
· ".com" என்று முடியும் ஒரு URL -ஐத் துரிதமாகத் தட்டச்சு (to enter quickly) செய்ய, "www." என்பதற்கும் ".com" என்பதற்கும் இடையிலுள்ள பகுதியைத்(Microsoft என்பதை
மட்டும்) தட்டச்சு செய்துவிட்டு CTRL+ENTER அழுத்தவும். பிறகு நேரடியாக மைக்ரோசாப்ட் வலைதளத்திற்கு
அழைத்து செல்லப்படுவீர்.
அடிப்படை வழிசெலுத்தல் - Basic
navigation
- இணைப்புகளைப் பயன்படுத்துதல் - Using links. பெரும்பாலான வலைப்பக்கங்களில் ஏராளமான இணைப்புகள் (dozens of links) இருக்கும். சிலவற்றில்நூற்றுக்கணக்கில் கூட இருக்கும்(hundreds of links). ஒரு வலைப்பக்கத்திலிருந்து இன்னொருவலைப்பக்கத்திற்குச் செல்ல ஏதேனும் ஒரு இணைப்பை(link) கிளிக் செய்யவும். இருந்தாலும், ஒருவலைப்பக்கத்தில் எவை இணைப்புகள் என்று கண்டறிவது எப்போதும் எளிதல்ல(is not always easy). இணைப்புகள்உரையாகவோ படங்களாகவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கலாம். உரை இணைப்புகள்பெரும்பாலும் வண்ணத்திலும் அடிக்கோடிடப்பட்டும் இருக்கும்(Text links often appear as colored and underlined); ஆனால் இணைப்பு நடைகள்(link styles) ஒவ்வொரு வலைத்தளத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
· சுட்டிக் குறிப்பான் (mouse pointer), சுட்டிக்காட்டும் விரலுடன் கூடிய ஒரு கையாக மாறும் (hand
with a pointing finger).
· உங்கள் வலை உலாவியின் நிலைப் பட்டியில்(status
bar of your web browser) ஒரு URL
தெரியும். நீங்கள்
கிளிக் செய்தால்எந்த வலைத்தளம்
திறக்கும் என்று இது காண்பிக்கும்.
- பின் மற்றும் முன் பொத்தான்களைப் பயன்படுத்துதல்(Using the Back and Forward buttons): நீங்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் என்றுஉலாவிக்கொண்டிருக்கும்போது Internet Explorer நீங்கள் எந்த தளதத்திற்கு போகிறீர்கள் என்றதகவலைப் பதிவு செய்துகொள்கிறது. முந்தைய பக்கத்திற்குத்(previous page) திரும்பிச் செல்ல, பின்பொத்தானை(back button) கிளிக் செய்யவும். இன்னும் சில பக்கங்களுக்குத்திரும்பிச் செல்ல, பின்பொத்தானைப் பல முறை கிளிக்செய்யவும் (Click the Back button several times).பின்பொத்தானை கிளிக் செய்த பிறகு, பாதையில்முன்னே செல்லமுன்பொத்தானை கிளிக் செய்யலாம்.
- சமீபத்திய பக்கங்கள் மெனுவைப் பயன்படுத்துதல் Using the Recent Pages menu: சமீபத்தில் பார்த்த(visited in your current session) ஒரு பக்கத்திற்குத்(webpage) திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் பின் அல்லது முன் பொத்தான்களைத் திரும்பத் திரும்ப கிளிக் செய்ய விரும்பவில்லை என்றால் சமீபத்திய பக்கங்கள் மெனுவைப்(Recent Pages menu) பயன்படுத்தவும். முன் பொத்தானுக்கு அருகில் உள்ள அம்பை(arrow next to the Forward) கிளிக் செய்து, பட்டியலிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)