புறச்சாதனங்களின் மென்பொருள் கணினி்யில் நிருவப்பட்டப்பிறகு இயக்கமுறைமையானது அதனைத் தொடர்புக்குக்கொண்டு ஓரு குறி்ப்பிட்ட சாதனத்திர்கான கட்டளைகள் பறிமாறும் விதத்தை பகிர்ந்துக்கொள்ளும் எனவே செயலாக்கம்(task execution) எளிமையாக முடிகின்றது.
இயக்கமுறைமையின் உதவியுடன் நீங்கள் உங்கள் கணினியில் இணைய இணைப்பை ஏர்படுத்தி இணையத்தில் உள்ள அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம். தொலைக்காட்சி நிகழ்வுகளை நேரடியாக உங்கள் கணினியில் பார்க வேண்டுமெனில்
கணினிக்கென்று உள்ள external TV tuner card அல்லது INTERNAL TV tuner card என்ற சாதனத்தை(device) உங்கள் கணினியில் பொருத்திக் கொண்டால் இயக்கமுறைமையின் உதவியில்லாமலும் மற்றும் இயக்கமுறைமையின் உதவியுடனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு தொலைக்காட்சியில் பார்ப்பது போன்று உங்கள் கணினியில் நீங்கள் கண்டுகளிக்களாம்.
External Tv tuner card அல்லது external tv combo box என்ற சாதனத்தை நீங்கள் வைத்திருந்தால் இவற்றில் ஒரு சில TV tuner combo box ஐ அமைப்பு தொகுதியுடன் இனைக்காமலே நேரடியாக திரைபலகத்துடன் (display unit or monitor) இனைத்து நிகழ்சிகளை tune செய்து பார்களாம். இவ்வகையான TV combo box கள் திரைபலக கணினிகளுக்கு ஏற்றது மடிகணினிகளுக்கு உகந்தது அல்ல. TV combo box ன் ஒளி மற்றும் ஒலி output முனைகளை முறையே monitor மற்றும் speaker ல் இனைப்பது அவசியம். இந்த வகை TV tuner card க்கு இயக்க முறைமையின் உதவி தேவையில்லை ஏனெனில் நாம் இதனை கணினியுடன் இனைக்கவில்லை. ஆகையால் நாம் நிகழ்சிகளை பார்கவும் மற்றும் கேட்கவும் முடியும் அதனை பதிவு செய்ய முடியாது.
நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டுமெனில் external TV tuner card அல்லது internal tv tuner card இவற்றில் ஏதாவது ஒன்றை அமைப்பு தொகுதியுடன் இனைத்து அவற்றுக்கான மென்பொருளை கணினியில் நிருவ வேண்டும். அவ்வாறு செய்யதால் இயக்க முறைமையானது TV tuner card ஐ அதன் மென்பொருள் மூலம் தொடர்புக் கொண்டு அதனை கட்டுத்துகின்றது மற்றும் அந்த tv tuner க்கான மென்பொருளை கணினியில் தடையில்லாமல் இயக்க உதவிச் செய்கின்றது. எனவே அந்த நன்மையை பயன்படுத்தி கணினியின் வாயிலாக திரையில் தெரியும் நிகழ்ச்சிகளை பதிவுச் செய்யலாம் பிறகு அதனை video editor மூலம் திருத்தலாம் அதன்பிறகு மாற்றியதை மறுபதிவும் செய்யலாம். இவை அனைத்தும் செய்ய இயக்க முறைமையே கணினிக்கு உதவுகின்றது.
உங்கள் கணினியில் இயக்கமுறைமையில் உள்ள device manager என்ற பகுதிக்கு சென்று என்னென்ன சாதனங்கள் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றிக்கான மென்பொருள்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதையும் சோதித்துப்பார்களாம். சில சாதனங்கள் மென்பொருள்கள் இல்லாத காரணத்தால் செயலற்று கிடக்கும் அவற்றிர்கான மென்பொருளை device manager உதவியுடன் இணையத்தில் உலாவி சரியான மென்பொருளை கண்டுபிடித்து கணினியில் நிருவலாம். இவ்வாறு செய்வதனால் வன்பொருள் சாதனங்கள் எளிதில் சேதமடைவது தவிர்க்கப்படுகின்றது.
ஒரு தனிப்பட்ட கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை நிருவி கணினியை பயன்படுத்தலாம். windows operating system, UNIX operating system, Linux redhat operating system, Google chrome operating system, Mac OS என்ற பல இயக்கமுறைமைகளின்(operating system) பயனை ஒரு கணினியின் வாயிலாக நாம் பெறலாம். ஒவ்வொரு தனிப்பட்ட இயக்கமுறைமைக்கும் தனித்தனியாக கணினியை வாக்க வேண்டும் என்ற அவசியம் தேவையில்லை. ஆனால் முக்கியமான விசயம் என்ன வென்றால் ஒரு கணினியில் ஒன்றுக்கு மேறப்பட்ட இயக்கமுறைமைகளை நிருவும்போது அதனை நன்கு பயன்படுத்த தெரிந்தவராகவும், சரியான முறையில் நிருவத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்படியில்லையெனில் கணினி் பழுதடையாது ஆனால் அதில் சேமித்து வைத்த தகவல்கள் பழுதடைந்துவிடும் அல்லது நீங்கள் சேமித்துவைத்த தகவல்களே இல்லமால் போய்விடும்.
பொதுவாக windows operating system மானது fat32 அல்லது NTFS , file system ல் இயங்கக்கூடியதாக இருக்கும். எனவே windows operating system பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அதர்கான தரவுகளை fat32 மற்றும் ntfs அமைப்பு உள்ள நிலைவட்டு(hard disk partition) பிரிவுகளில் இயக்கமுறைமையானது பதிவுச்செய்யும். மறுபடியும் வேரொரு இயக்கமுறைமையை பயன்படுத்து கணினியை இயக்கும் போது அந்த இயக்க முறைமையானது fat32 file system அல்லது ntfs file system மை ஆதரித்தால் windows operating system பதிவுச்செய்த அந்த தகவலை இந்த இயக்கமுறைமையில் பார்கலாம். அப்படியில்லையெனில் அந்தந்த இயக்கமுறைமையின் கேப்புகளை அதன் சம்பந்தப்பட்ட இயக்கமுறைமையை பயன்படுத்திதான் பார்கமுடியும் மற்றும் திருத்தமுடியும்.
windows operating system ல் கட்டுப்பாட்டு பலகம் என்ற பகுதிக்கு சென்று disk management என்ற பகுதியில் நிலைவட்டை நிர்வகிக்கும் அமைப்பு ஒன்று இருக்கும் அதன் மூலம் உங்கள் கணினியில் என்னென்ன இயக்கமுறைமைகள் உள்ளன மற்றம் அவற்றின் FILE SYSTEM வகை என்ன என்பதனை விளக்கமாக கன்டறி்யலாம்.
பயனுள்ள தகவல்கள்....
பதிலளிநீக்கு