ஞாயிறு, 10 மார்ச், 2013

ஒரு கணினியின் பாகங்கள்.

நீங்கள் திரைப்பலகக் கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், "கணினி" என்று எந்த ஒரு தனி பாகமும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு கணினி என்பது பல பாகங்கள் இணைந்து பணிபுரியும் ஓர் அமைப்பு. நீங்கள் பார்க்கவும் தொடவும் கூடிய பாகங்கள் வன்பொருள் என்று அழைக்கப்படுகின்றன. (மென்பொருள் - software என்பது, வன்பொருள் - hardware என்ன செய்ய வேண்டும் என்று அதனிடம் சொல்லும் கட்டளைகள் (instructions) அல்லது நிரல்களைக் (programs) குறிக்கிறது.)

இந்த கட்டுரையில் கீழ்கன்ட கணினியின் முக்கிய வன்பொருள்  பாகங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

•    அமைப்புத் தொகுதி ( system unit)
•    சேமிப்பகம் ( storage unit)
•    சுட்டி (mouse)
•    விசைப்பலகை (keyboard)
•    திரையகம் (monitor)
•    அச்சுப்பொறி (printer)
•    ஒலிபெருக்கிகள் (speakers)
•    மோடம் (modem)


திரைப்பலகக் கணினி அமைப்பு

கீழ்க்கண்ட படத்தில் ஒரு திரைப்பலகக் கணினியில் பொதுவாகக் காணப்படும் வன்பொருட்களைப் பார்க்கலாம். உங்கள் கணினி வேறு மாதிரி இருக்கலாம், ஆனால் இவற்றில் பெரும்பாலான பாகங்கள் அதில் இருக்கும். ஒரு மடிக் கணினியிலும் இதே போன்ற பாகங்கள் இருக்கும், ஆனால் அவை எல்லாம் ஒரு நோட்டுப் புத்தக அளவிற்கு இணைக்கப்பட்டிருக்கும்.


desktop computer system -ன் ஒவ்வொரு பாகத்தை பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

1. அமைப்புத் தொகுதி - System Unit
அமைப்புத் தொகுதிதான் ஒரு கணினியின் அடிப்படை. இந்தச் செவ்வகப் பெட்டி பொதுவாக உங்கள் மேஜை மேல் அல்லது மேஜைக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கும். தகவலைச் செயலாக்கும் பல மின்னணு உறுப்புகள் இந்தப் பெட்டிக்குள் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது மையச் செயலகம் (CPU - central processing unit ), அல்லது நுண்செயலி (microprocessor); இது உங்கள் கணினியின் மூளை போல் செயல்படுகிறது. இன்னொரு உறுப்பு குறிப்பிலா அணுகல் பதிவு (RAM - random access memory); இது கணினி இயக்கத்தில் இருக்கும்போது CPU பயன்படுத்தும் தகவலைத் தற்காலிகமாக வைத்திருக்கும். RAM -இல் உள்ள தகவல் (information), கணினி அணைக்கப்படும்போது (turned off) அழிக்கப்படுகிறது (erased).
உங்கள் கணினியில் கிட்டத்தட்ட எல்லா பாகங்களும் அமைப்புத் தொகுதியுடன் கேபிள்களால் இணைக்கப்பட்டுள்ளன. கேபிள்கள் குறிப்பிட்ட முனையங்களுக்குள் (specific ports)  செருகப்பட்டிருக்கும்; இந்தத் திறப்புகள் (specific ports male and female connectors) பொதுவாக அமைப்புத் தொகுதியின் பின்னால் இருக்கும். அமைப்புத் தொகுதியின் அங்கமாக இல்லாத வன்பொருட்கள் புறச்சாதனங்கள் (peripheral device) அல்லது சாதனங்கள் (external devices) என்று அழைக்கப்படுகின்றன.


2. சேமிப்பகம் (storage unit)

i)நிலை வட்டு இயக்ககம் - (hard disk drive
உங்கள் கணினியில் ஒரு வட்டு அல்லது பல வட்டு இயக்ககங்கள் இருக்கின்றன — இவை தகவலை ஒரு உலோகத் தகட்டில் அல்லது பிளாஸ்டிக் வட்டில் சேமிக்கும் சாதனங்கள். உங்கள் கணினி அணைக்கப்பட்ட பிறகும் இந்த வட்டு, தகவலை வைத்திருக்கும்.


உங்கள் கணினியின் நிலை வட்டு இயக்ககம் (hard disk drive) தகவலை ஒரு நிலை வட்டில் (hard disk) சேமித்துவைக்கிறது; இது காந்தப் பரப்பைக் (magnetic surface) கொண்ட ஓர் உறுதியான தட்டு (rigid platter) அல்லது பல தட்டுகளைக் கொண்ட அடுக்கு (stack of platters). நிலை வட்டில் மிகப் பெரிய அளவிலான தகவலை வைத்திருக்க (store massive amounts of information) முடியும் என்பதால், அது பொதுவாக உங்கள் கணினியின் முதன்மை சேமிப்பகமாக (primary storage device) விளங்குகிறது; உங்கள் நிரல்கள் (programs) மற்றும் கோப்புகளில் (files) கிட்டத்தட்ட எல்லாவற்றையும் வைத்திருக்கும். நிலை வட்டு இயக்ககம் (hard disk drive) சாதாரணமாக அமைப்புத் தொகுதிக்கு (system unit) உள்ளே இருக்கும்.


 ii) CD மற்றும் DVD இயக்ககங்கள் - CD and DVD Drives                 

இன்று கிட்டத்தட்ட எல்லாக் கணினிகளிலும் CD அல்லது DVD இயக்ககம் (CD or DVD drives) உள்ளது. இது வழக்கமாக அமைப்புத் தொகுதியின் முன்பக்கம் இருக்கும். CD இயக்ககங்கள் (CD drives) லேசர் கதிர்களைப் பயன்படுத்தி CD -இலிருந்து தரவைப் படிக்கின்றன (reading data) or எடுக்கின்றன (scanning the data); பல CD இயக்ககங்களால் (CD Drives) CDகளில் தரவை எழுதவும் (write data)  அல்லது பதிவு செய்யவும் முடியும். பதிவு செய்யத்தக்க வட்டு இயக்ககம் (writable CD disk) ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்கள் வெற்று CDகளில் உங்கள் கோப்புகளை (files)  வைத்துக்கொள்ளலாம். நீங்கள் CD இயக்ககத்தை உங்கள் கணினியில் இசை CDகளை இயக்கவும் (to play music CDs) பயன்படுத்தலாம்.

DVD  இயக்ககங்களால் (DVD PLAYERS) CD இயக்ககங்கள் ( CD PLAYERS) செய்யும் எல்லாவற்றையும் செய்ய முடியும், அதோடு DVDகளையும் படிக்க முடியும். உங்களிடம் DVD இயக்ககம் இரு்தால் உங்கள் கணினியில் திரைப்படங்கள் பார்க்கலாம். பல DVD இயக்ககங்களால் வெற்று (EMPTY)  DVDகளில் தரவைப் பதிவு செய்ய முடியும்( record data onto blank DVDs).

     உதவிக்குறிப்பு  (TIP)

          - பதிவு செய்யத்தக்க (recordable CD)  ஒரு CD அல்லது DVD இயக்ககம் (DVD drive) உங்களிடம் இருந்தால், உங்கள் முக்கியமான கோப்புகளை (important files) அவ்வப்போது CDகளிலோ DVDகளிலோ மறுபிரதி (நகல்) எடுத்துவைத்துக்கொள்ளவும். இதனால் உங்கள் நிலை வட்டு (HARD DISK) செயலிழந்தால் கூட உங்கள் தரவு தொலைந்துபோகாது (won't lose your data).

 ii) நெகிழ் வட்டு இயக்ககம் - Floppy Disk Drive
நெகிழ் வட்டு இயக்ககம் (Floppy disk drives ), ஃப்ளாப்பிகள் அல்லது டிஸ்கெட்கள் என்று அழைக்கப்படும் நெகிழ் வட்டுகளில் தகவலைச் சேமித்துவைக்கிறது.. CDகள், DVDகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நெகிழ் வட்டுகளில் சிறிதளவு தரவைத்தான் (small amount of data) வைத்துக்கொள்ள முடியும். அவை மிக மெதுவாகவே தரவை எடுக்கின்றன (retrieve information more slowly), சுலபமாகச் சேதமடைந்துவிடுகின்றன (damage). எனவே, நெகிழ் வட்டுகள (floppy disks) இப்போதும் சில கணினிகளில் இருந்தாலும் அவை முன்பு போல் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

நெகிழ் வட்டுகள் ஏன் "நெகிழ்வாக" இருக்கின்றன? அவற்றின் வெளிப்புறம் உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனது என்றாலும் அது வெறும் உறைதான் (sleeve). உள்ளே இருக்கும் வட்டு ஒரு மெல்லிய, வளைந்துகொடுக்கக்கூடிய வினைல் பொருளால் ஆனது (thin, flexible vinyl material). 


3. சுட்டி (mouse)

சுட்டி (mouse) என்பது உங்கள் கணினித் திரையில் (desktop) இருப்பவற்றைச் சுட்டித் தேர்ந்தெடுக்கப் (to select) பயன்படும் ஒரு சிறிய சாதனம். சுட்டிகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன; இருந்தாலும் பொதுவாக ஒரு சுட்டி சுண்டெலி போலத்தான் இருக்கும். அது ஒரு சிறிதாக, நீள்வட்ட வடிவமாக இருக்கும். வால் போல நீண்ட ஒரு கம்பியால் அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். புதிதாக வந்திருக்கும் சில சுட்டிகள் கம்பியில்லாதவை (wireless mouse).

சுட்டியில் வழக்கமாக இரண்டு பொத்தான்கள் இருக்கும்: ஒரு முதன்மைப் பொத்தான் (இது சாதாரணமாக இடது பொத்தான்), ஒரு கூடுதல் பொத்தான். பல சுட்டிகளில் அந்த இரு பொத்தான்களுக்கு இடையில் ஒரு சக்கரமும் (wheel)  இருக்கலாம். இந்தச் சக்கரம் திரைகளில் இருக்கும் தகவலை சீராக உருட்டிப் (scroll smoothly) பார்க்க உதவுகிறது.

சுட்டிக் குறிப்பான்கள்  - mouse pointers.
சுட்டியை உங்கள் கையால் நகர்த்தும்போது, உங்கள் கணினித்திரையில் இருக்கும் குறிப்பானும் (pointer on the screen) அதே திசையில் நகரும். (குறிப்பானின் தோற்றம் அது திரையில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து மாறலாம்.) ஒரு உருப்படியைத் (item) தேர்ந்தெடுக்க விரும்பினால், அந்த உருப்படியைச் சுட்டவும் (point to the item), பிறகு முதன்மைப் பொத்தானை (primary button) கிளிக் (click) செய்யவும் (அழுத்திவிட்டு விடுவிக்கவும்). உங்கள் சுட்டியால் சுட்டி கிளிக் செய்வதுதான் (using the mouse to pointing and clicking) உங்கள் கணினியைப் பயன்படுத்தும் பிரதான முறை. கூடுதல் தகவலுக்கு, சுட்டியைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.


4. விசைப்பலகை (keyboard)



விசைப்பலகை, முக்கியமாக உங்கள் கணினியில் உரையைத் (text) தட்டச்சு  (type) செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது. தட்டச்சுப் பொறியில் (typewriter) இருக்கும் விசைப்பலகை (keyboard) போல இதிலும் எழுத்துகளுக்கும் (letters) எண்களுக்கும் (numbers) விசைகள் (keys) இருக்கின்றன, ஆனால் விசைப்பலகையில் சிறப்பு விசைகளும் உள்ளன.
•    மேல் வரிசையில் இருக்கும் செயல்பாட்டு விசைகள் (function keys) அவை எதில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்து வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யும்.
•    பெரும்பாலான விசைப்பலகைகளில் வலப்பக்கம் இருக்கும் எண் விசைத்தளம் (right side numeric keypad) நீங்கள் எண்களை விரைவாக உள்ளிட உதவுகிறது (enter numbers quickly).
•    வழிசெலுத்தல் விசைகள் (navigation keys) - உதாரணமாக அம்பு விசைகள் (arrow keys) - ஒரு ஆவணத்தில் (document) அல்லது வலைப்பக்கத்தில் (webpage) தகவலை நகர்த்திப் பார்க்க உதவுகின்றன.

சுட்டியால் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை, விசைப்பலகையைப் பயன்படுத்தியும் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, விசைப்பலகையைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

5. திரையகம் (monitor)



திரையகம் - உரையையும் (text) படங்களையும் (graphics) பயன்படுத்தித் தகவலைக் காட்சி வடிவத்தில் (visual form) காண்பிக்கிறது. திரையகத்தில் (monitor) தகவலைக் காண்பிக்கும  பகுதிக்குத் திரை  (display screen) என்று பெயர். தொலைக்காட்சித் திரை (television screen) போல் கணினித் திரையிலும் (computer screen) அசையாத (still) அல்லது அசையும் (moving) படங்களைப் பார்க்கலாம்.
திரையகங்களில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன: CRT திரையகங்கள்  (கத்தோட் ரே டியூப் - cathode ray tube display) , LCD திரையகங்கள்  (நீர்மப் படிகக் காட்சி - liquid crystal display) . இரண்டு வகைகளுமே படங்களைத் துல்லியமாகக் காட்டுகின்றன, ஆனால் LCD திரையகங்கள்  மெலிதாகவும் லேசாகவும் இருக்கும். இருந்தாலும் பொதுவாக CRT திரையகங்களின் விலை குறைவு.



6. அச்சுப்பொறி (printer)

அச்சுப்பொறி (printer), கணினியில் உள்ள தரவைத் (digital data) தாளுக்கு மாற்றுகிறது ( physically writes onto the paper). கணினியைப் பயன்படுத்த (operate செய்ய) அச்சுப்பொறி  தேவையில்லை, ஆனால் அது இருந்தால் மின்னஞ்சல் (e-mail), அட்டைகள் (cards) , அழைப்பிதழ்கள்  (invitations) , அறிவிப்புகள் (announcements) போன்றவற்றை அச்சிடலாம் (print செய்யலாம்). பலர் தங்கள் புகைப்படங்களை வீட்டிலேயே அச்சிட்டுக்கொள்ள விரும்புகிறார்கள்.

அச்சுப்பொறிகளில் இங்க்ஜெட் அச்சுப்பொறிகள் (inkjet printers), லேசர் அச்சுப்பொறிகள் (laser printer) ஆகியவையே பிரதான வகைகள். வீட்டிற்கு இங்க்ஜெட் அச்சுப்பொறிகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை கருப்பு-வெள்ளையிலோ (black and white) அல்லது முழு வண்ணத்திலுமோ (original full color format) அச்சிடும்; சிறப்புத் தாள் (special paper) ஒன்றைப் பயன்படுத்தினால் புகைப்படங்களை உயர்ந்த தரத்தில் அச்சிடும் (high-quality). இங்க்ஜெட் அச்சுப்பொறிகள்  சிறிது மெதுவாக செயல்படும் தன்மை கொண்டது லேசர் அச்சுப்பொறிகள்  இன்னும் வேகமாகச் செயல்படுகின்றன . இவை கடும் வேலைப் பளுவைத் தாங்கக்கூடியவை.


7. ஒலிபெருக்கிகள் (speakers)

ஒலிபெருக்கிகள் (Speakers) ஒலியை இயக்கப் (play sounds) பயன்படுகின்றன. அவை அமைப்புக்குள் பொருத்தப்பட்டிருக்கலாம் (built into the system unit) அல்லது கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கலாம் (connected with cables). உங்கள் கணினியில் இசை கேட்கவும் பிற ஒலிகளைக் (இசை இல்லாத ஒலிகலை - voice sounds) கேட்கவும் ஒலிபெருக்கிகள் உதவுகின்றன.

8. மோடம் (modem)

உங்கள் கணினியை இணையத்துடன் இணைக்க உங்களுக்கு மோடம் தேவை. மோடம் என்பது கணினித் தகவலை தொலைபேசி இணைப்பு வழியாக அல்லது அதிவேக கேபிள் வழியாக அனுப்பும், மற்றும் பெறும் ஒரு சாதனம். இது சில சமயங்களில் அமைப்புத் தொகுதிக்குள் (within the system unit) வைக்கப்படுகிறது, ஆனால் அதிவேக மோடங்கள் பொதுவாக தனி உபகரணங்களாகத்தான் (external device) இருக்கும்.

4 கருத்துகள்: