கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் இருக்கின்றன. ஒரு பக்கம் இருப்பவை
மீக்கணினிகள் (supercomputers); இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான நுண்செயலிகளைக் (microprocessors) கொண்ட, மிகமிகச் சிக்கலான
கணக்குகளைச் செய்யும் மிகப் பெரிய கணினிகள். இன்னொரு பக்கம் இருப்பவை
கார்கள் (cars), தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), ஸ்டீரியோ அமைப்புகள்
(stereo systems), கால்குலேட்டர்கள் (calculators), உபகரணங்கள்
(appliances) போன்றவற்றில் பொதிக்கப்பட்ட மிகச் சிறிய கணினிகள் (tiny
computers ). இந்தக் கணினிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளை (limited
number of tasks) மட்டும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவை.
தனிநபர் கணினி (personal computer) அல்லது PC என்பது ஒரே சமயத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்தப் பகுதி, பல்வேறு வகையான தனிநபர் கணினிகளை (personal computer) பற்றி விளக்குகிறது:
தனிநபர் கணினி வகைகள் :
1. திரைப்பலகக் கணினி (desktops computers),
2. மடிக்கணினி (laptops),
3. கையடக்கக் கணினி (handheld computers), மற்றும்
4. டாப்ளெட்(Tablet ) PCகள்.
1. திரைப்பலகக் கணினிகள் - desktop computers
திரைப்பலகக் கணினிகள் மேஜை மேல் வைத்துப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை. இவை பொதுவாகப் பிற வகை தனிநபர் கணினிகளை(other types of personal computers) விடப் பெரிதாகவும் சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும். திரைப்பலகக் கணினிகள் தனித்தனி உபகரணங்களால் ஆனவை. பிரதான உபகரணமான அமைப்புத் தொகுதி (system unit), வழக்கமாக ஒரு மேஜை மேலே அல்லது கீழே வைக்கப்படும் செவ்வகப் பெட்டியாக இருக்கும். திரையகம் (monitor), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard) போன்ற பிற உபகரணங்கள் அமைப்புத் தொகுதியுடன் (system unit) இணைக்கப்பட்டிருக்கும்.
மடிக்கணினி, மெல்லிய திரையைக் (thin screen) கொண்ட, குறைந்த எடையுள்ள
(lightweight) செல்லிட PC (mobile PCs ). அது சிறிய அளவில் இருப்பதால்
பெரும்பாலும் நோட்புக் கம்ப்யூட்டர் (notebook computers) என்று
அழைக்கப்படுகிறது. மடிக்கணினியை மின்கலத்தில் (batteries) இயங்க முடியும்;
எனவே நீங்கள் அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். திரைப்பலகக்
கணினிகள் போலில்லாமல் மடிக்கணினியில் CPU, திரை (screen), விசைப்பலகை
(keyboard) ஆகியவை ஒரே பெட்டியில் அமைந்திருக்கும். பயன்படுத்தப்படாதபோது
அதன் திரை, விசைப்பலகை மேல் மடிக்கப்படும்.
3. கையடக்கக் கணினி - handheld computers
கையடக்கக் கணினி (Handheld computers) என்பது மின்கலத்தில் இயங்கும் கணினி (battery-powered computers) - இது சொந்த டிஜிட்டல் உதவிச் சாதனம் (personal digital assistants- PDAs ) என்றும் அழைக்கப்படுவதுண்டு; இது சிறிதாக இருப்பதால் இதை எங்கும் கொண்டுசெல்லலாம். கையடக்கக் கணினிகள் (Handheld computers) திரைப்பலகக் கணினி அல்லது மடிக்கணினி போல சக்திவாய்ந்தவை அல்ல என்றாலும், அவை சந்திப்புகளுக்குத் திட்டமிடுதல் (scheduling appointments), முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் (addresses and phone numbers) சேமித்துவைத்தல், விளையாட்டுகளை ஆடுதல் (playing games) போன்றவற்றுக்குப் பயனுள்ளவை. சிலவற்றில், தொலைபேசி அழைப்புகள் (telephone calls)செய்தல், இணையத்தைப் பயன்படுத்துதல் (accessing the Internet) போன்ற மேம்பட்ட திறன்கள் இருக்கின்றன. கையடக்கக் கணினிகளில் விசைப்பலகைக்கு பதிலாகத் தொடுதிரைகள் (touch screens) இருக்கும்; இவற்றை விரலால் அல்லது தொடுகோலால் (stylus - பேனா வடிவ சுட்டுக் கருவி) தொட்டுப் பயன்படுத்த வேண்டும்.
4. டாப்ளெட் PC - tablet PC
டாப்ளெட் PC (Tablet PCs) என்பது மடிக்கணினி (laptops), கையடக்கக் கணினி (handhelds) ஆகிய இரண்டின் அம்சங்களும் இணைந்த செல்லிட PC (mobile PC). மடிக்கணினி போல டாப்ளெட் PC சக்திவாய்ந்தது; திரை யை உள்ளடக்கிய( built-in screen) வடிவமைப்பு கொண்டது. கையடக்கக் கணினியில் உல்லது போல் டாப்ளெட் PCயிலும் திரையில் குறிப்புகள் எழுதலாம் (write notes on the screen) , படம் வரையலாம் (draw pictures on the screen ); இதற்குத் தொடுகோலுக்கு (stylus) பதிலாகப் பெரும்பாலும் டாப்ளெட் பேனா (tablet pen) பயன்படுத்தப்படுகிறது. டாப்ளெட் PCயால் - உங்கள் கையெழுத்தைத் தட்டச்சு செய்த உரையாகவும் மாற்ற முடியும் (converts your handwriting into typed text). சில டாப்ளெட் PCகளில் திரையைச் சுழற்றி அதற்கு அடியில் உள்ள விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.
தனிநபர் கணினி (personal computer) அல்லது PC என்பது ஒரே சமயத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்தப் பகுதி, பல்வேறு வகையான தனிநபர் கணினிகளை (personal computer) பற்றி விளக்குகிறது:
தனிநபர் கணினி வகைகள் :
1. திரைப்பலகக் கணினி (desktops computers),
2. மடிக்கணினி (laptops),
3. கையடக்கக் கணினி (handheld computers), மற்றும்
4. டாப்ளெட்(Tablet ) PCகள்.
1. திரைப்பலகக் கணினிகள் - desktop computers
திரைப்பலகக் கணினிகள் மேஜை மேல் வைத்துப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை. இவை பொதுவாகப் பிற வகை தனிநபர் கணினிகளை(other types of personal computers) விடப் பெரிதாகவும் சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும். திரைப்பலகக் கணினிகள் தனித்தனி உபகரணங்களால் ஆனவை. பிரதான உபகரணமான அமைப்புத் தொகுதி (system unit), வழக்கமாக ஒரு மேஜை மேலே அல்லது கீழே வைக்கப்படும் செவ்வகப் பெட்டியாக இருக்கும். திரையகம் (monitor), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard) போன்ற பிற உபகரணங்கள் அமைப்புத் தொகுதியுடன் (system unit) இணைக்கப்பட்டிருக்கும்.
2. மடிக்கணினி - laptop computers
3. கையடக்கக் கணினி - handheld computers
கையடக்கக் கணினி (Handheld computers) என்பது மின்கலத்தில் இயங்கும் கணினி (battery-powered computers) - இது சொந்த டிஜிட்டல் உதவிச் சாதனம் (personal digital assistants- PDAs ) என்றும் அழைக்கப்படுவதுண்டு; இது சிறிதாக இருப்பதால் இதை எங்கும் கொண்டுசெல்லலாம். கையடக்கக் கணினிகள் (Handheld computers) திரைப்பலகக் கணினி அல்லது மடிக்கணினி போல சக்திவாய்ந்தவை அல்ல என்றாலும், அவை சந்திப்புகளுக்குத் திட்டமிடுதல் (scheduling appointments), முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் (addresses and phone numbers) சேமித்துவைத்தல், விளையாட்டுகளை ஆடுதல் (playing games) போன்றவற்றுக்குப் பயனுள்ளவை. சிலவற்றில், தொலைபேசி அழைப்புகள் (telephone calls)செய்தல், இணையத்தைப் பயன்படுத்துதல் (accessing the Internet) போன்ற மேம்பட்ட திறன்கள் இருக்கின்றன. கையடக்கக் கணினிகளில் விசைப்பலகைக்கு பதிலாகத் தொடுதிரைகள் (touch screens) இருக்கும்; இவற்றை விரலால் அல்லது தொடுகோலால் (stylus - பேனா வடிவ சுட்டுக் கருவி) தொட்டுப் பயன்படுத்த வேண்டும்.
4. டாப்ளெட் PC - tablet PC
டாப்ளெட் PC (Tablet PCs) என்பது மடிக்கணினி (laptops), கையடக்கக் கணினி (handhelds) ஆகிய இரண்டின் அம்சங்களும் இணைந்த செல்லிட PC (mobile PC). மடிக்கணினி போல டாப்ளெட் PC சக்திவாய்ந்தது; திரை யை உள்ளடக்கிய( built-in screen) வடிவமைப்பு கொண்டது. கையடக்கக் கணினியில் உல்லது போல் டாப்ளெட் PCயிலும் திரையில் குறிப்புகள் எழுதலாம் (write notes on the screen) , படம் வரையலாம் (draw pictures on the screen ); இதற்குத் தொடுகோலுக்கு (stylus) பதிலாகப் பெரும்பாலும் டாப்ளெட் பேனா (tablet pen) பயன்படுத்தப்படுகிறது. டாப்ளெட் PCயால் - உங்கள் கையெழுத்தைத் தட்டச்சு செய்த உரையாகவும் மாற்ற முடியும் (converts your handwriting into typed text). சில டாப்ளெட் PCகளில் திரையைச் சுழற்றி அதற்கு அடியில் உள்ள விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.
nice
பதிலளிநீக்குநன்று. அனைத்தும் பயன்மிக்க கட்டுரைகள். தொடர்ந்து எழுதுக. வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குநான் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்ததும், பத்தாம் வகுப்பு கட்டுரைகள் எழுதி அனுப்பி வைக்க வேண்டும் . நன்றி!!!!!!!!!!
நீக்குகணினி பற்றிய மேலதிக தகவல்களை அனுப்பி வையுங்கள் ஐயா.
பதிலளிநீக்குகணினியின் 3 வகைகள்
நீக்கு