திங்கள், 6 மே, 2013

Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்

Windows -க்கு Microsoft தவறாமல் அவ்வப்போது முக்கியமான புதுப்பித்தல்களை(windows updats) வழங்குகிறது. இவை உங்கள் கணினியைப் புதிய வைரஸ்கள் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். இந்தப் புதுப்பித்தல்கள் உங்களுக்கு மிக விரைவாகக் கிடைக்க, தானியங்கு புதுப்பித்தலை இயக்கவும். பிறகு நீங்கள் உங்கள் கணினியில் முக்கியமான Windows பிழைநீக்கு நிரல்கள் இல்லையோ என்று கவலைப்படத் தேவையில்லை.
புதுப்பித்தல்கள் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்போது பின்னணியில் பதிவிறக்கப்படும். புதுப்பித்தல்கள் காலை 3.00 மணிக்கு நிறுவப்படுகின்றன. நீங்கள் விரும்பினால் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு முன் உங்கள் கணினியை அணைப்பதாக இருந்தால் நீங்கள் அணைப்பதற்கு முன் புதுப்பித்தல்களை நிறுவலாம். இல்லையெனில், Windows நீங்கள் அடுத்த முறை உங்கள் கணினியைத் தொடங்கும்போது அவற்றை நிறுவும்.

தானியங்கு புதுப்பித்தலை இயக்க:
1.     Windows புதுப்பித்தலை கிளிக் செய்து திறக்கவும்.
2.    அமைப்புகளை மாற்று என்பதை கிளிக் செய்யவும்.
3.    புதுப்பித்தல்களைத் தானாக நிறுவு (பரிந்துரைக்கப்பட்டது) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
4.    பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்கள்(recamendad updates) என்பதற்குக் கீழ், புதுப்பித்தல்களைப் பதிவிறக்கும்போது, நிறுவும்போது, அல்லது அவை பற்றி எனக்குத் தெரிவிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்களையும் சேர் என்ற தேர்வுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், பிறகு சரி(ok) என்பதை கிளிக் செய்யவும்.   If you are prompted for an administrator password or confirmation, type the password or provide confirmation.
Windows தானியங்கு புதுப்பித்தலைப் புரிந்துகொள்ள என்பதையும் பார்க்கவும்.

நிலையான பயனர் கணக்கு ஒன்றைப் பயன்படுத்தவும்.
நீங்கள் உங்கள் கணினியில் உள்நுழையும்போது, Windows உங்கள் பயனர் கணக்கு என்ன வகையானது என்பதைப் பொருத்து உங்களுக்குக் குறிப்பிட்ட அளவு உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழங்குகிறது. பயனர் கணக்குகள் (user account)மூன்று வகையானவை: நிலையானவை(standard), நிர்வாகிக் கணக்குகள்(administrator), விருந்தினர்(guest) கணக்குகள்.

நிர்வாகிக் கணக்கில்(administrator account) கணினி முழுவதையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், நிலையான கணக்கு ஒன்றைப் பயன்படுத்தினால் உங்கள் கணினி மேலும் பாதுகாப்பாக இருக்கும். நிலையான கணக்கைப் பயன்படுத்தினால், நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது மற்றவர்கள் (அல்லது ஹாக்கர்கள்) உங்கள் கணினியை அணுகினால் கூட அவர்களால் கணினியின் பாதுகாப்பு அமைப்புகளைக் குலைக்கவோ மற்ற பயனர் கணக்குகளை மாற்றவோ முடியாது.
உங்கள் கணக்கு எந்த வகை என்று கண்டுபிடிக்க
•     பயனர் கணக்குகள் என்பதை கிளிக் செய்து திறக்கவும்.
கணக்கு வகை உங்கள் பெயருக்குக் கீழ் தெரியும்.

படம் பயனர் கணக்கு விவரம் பற்றி கூறுகிறது.

நீங்கள் தற்போது ஒரு நிர்வாகிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நிலையான கணக்காக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஒரு பயனரின் கணக்கு வகையை மாற்ற என்பதை கிளிக் செய்யவும்.
பயனர் கணக்குகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக