திங்கள், 6 மே, 2013

கணினியை பாதுகாக்க பாதுகாப்புச் சுவரைப் பயன்படுத்தவும்.

பாதுகாப்புச் சுவர் என்பது இணையத்திலிருந்து அல்லது ஒரு பிணையத்திலிருந்து வரும் தகவலைச் சோதித்து நிராகரிக்கும் அல்லது உங்கள்  கணினிக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள். இதன் செயல்பாடு உங்கள் பாதுகாப்புச் சுவர் அமைப்புகளைப் பொருத்து அமையும். இந்த முறையில் பாதுகாப்புச் சுவர் உங்கள் கணினியை ஹாக்கர்களும் தீங்குதரும் மென்பொருட்களும் அணுகாமல் தடுக்கிறது.
Windows பாதுகாப்புச் சுவர் Windows -க்குள் அமைக்கப்பட்டிருக்கிறது; இது தானாகவே இயக்கப்படுகிறது.

படத்தில் பாதுகாப்புச் சுவர் இயங்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.

இணையத்திலிருந்து அல்லது பிணையத்திலிருந்து தகவல் பெற வேண்டிய ஒரு நிரலை - உதாரணமாக, ஒரு துரிதச் செய்தி நிரல் அல்லது பல ஆட்டக்காரர்கள் ஆடும் பிணைய விளையாட்டு - திறக்கிறீர்கள் என்றால், அந்த இணைப்பைத் தடுக்க விரும்புகிறீர்களா அனுமதிக்க விரும்புகிறீர்களா என்று பாதுகாப்புச் சுவர் கேட்கும். நீங்கள் இணைப்பை அனுமதித்தால், Windows பாதுகாப்புச் சுவர் அதற்கு ஒரு விதிவிலக்கை உருவாக்கும். இதனால் அந்த நிரல் மீண்டும் தகவல் பெற வேண்டியிருக்கும்போது பாதுகாப்புச் சுவர் உங்களைத் தொந்தரவு செய்யாது.
பாதுகாப்புச் சுவர்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வைரஸ் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வைரஸ்கள் (viruses), நச்சுப்பெருக்கிகள்(worms), டிரோஜன்(trojan) ஹார்ஸ்கள்(horses) ஆகியவை, பாதுகாப்பற்ற கணினிகளை இணையத்தைப் பயன்படுத்தித் தாக்குவதற்கு ஹாக்கர்கள் உருவாக்கும் நிரல்கள். வைரஸ்களும் நச்சுப்பெருக்கிகளும் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு கணினியிலிரு்து கணினிக்குப் பரவக்கூடியவை; டிரோஜன் ஹார்ஸ்கள், ஸ்கிரீன் சேவர் போல் ஒழுங்கானதாகத் தெரியும் ஒரு நிரலுக்குள் மறைந்துகொண்டு கணினிக்குள் நுழைகின்றன. சேதம் ஏற்படுத்தும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் ஆகியவை உங்கள் நிலை வட்டில்(hard disk) உள்ள தகவலை அழிக்கக்கூடும் அல்லது உங்கள் கணினியை முழுவதுமாகச் செயலிழக்க வைத்துவிடக்கூடும். இன்னும் சில தீம்பொருட்கள் நேரடியாகச் சேதம் விளைவிக்காது, ஆனால் உங்கள் கணினியின் செயல்திறனையும் ஸ்திரத்தன்மையையும் கணிசமாகக் குறைத்துவிடும்.
வைரஸ் தடுப்பு நிரல்கள்(antivirus programs) உங்கள் கணினியில் இருக்கும் மின்னஞ்சலிலும் பிற கோப்புகளிலும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் உள்ளனவா என்று ஸ்கேன் செய்கின்றன. வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வைரஸ் தடுப்பு நிரல் அது உங்கள் கணினியையும் கோப்புகளையும் சேதப்படுத்துவதற்கு முன் அதை விலக்கி வைக்கிறது (தனிமைப்படுத்தி வைக்கிறது) அல்லது முற்றிலுமாக நீக்குகிறது.
Windows -இல் வைரஸ் தடுப்பு நிரல் இல்லை(windows os will not come with antivirus software package), ஆனால் உங்கள் கணினி உற்பத்தியாளர் அதை நிறுவியிருக்கக்கூடும். உங்கள் கணினியில் வைரஸ் தடுப்பு நிரல் பாதுகாப்பு இருக்கிறதா என்று கண்டறிய பாதுகாப்பு மையத்தைப் பார்க்கவும். அது இல்லை என்றால், Microsoft வைரஸ் தடுப்புக் கூட்டாளர்கள் (www.microsoft.com)  என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று ஒரு வைரஸ் தடுப்பு நிரலைக் கண்டுபிடிக்கவும்.
ஒவ்வொரு நாளும் புதிய வைரஸ்கள் அடையாளம் காணப்படுவதால், தானாகப் புதுப்பித்துக்கொள்ளும் திறனுள்ள வைரஸ் தடுப்பு நிரல்(antivirus software) ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வைரஸ் தடுப்பு மென்பொருள் புதுப்பிக்கப்படும்போது அது தான் சோதிக்க வேண்டிய வைரஸ்களின் பட்டியலில் புதிய வைரஸ்களைச் சேர்க்கிறது. இது உங்கள் கணினி மீது புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படாமல் தடுக்கிறது. வைரஸ் பட்டியல் பழையதாகிவிட்டால் உங்கள் கணினி புதிய அபாயங்களுக்கு இலக்காகக்கூடும். வழக்கமாகப் புதுப்பித்தல்களுக்கு வருடாந்தர சந்தா கட்டணம் ஒன்று செலுத்த வேண்டியிருக்கும். தவறாமல் புதுப்பித்தல்களைப் பெற சந்தாவைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

எச்சரிக்கை:   நீங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் கணினியைத் தீங்குதரும் மென்பொருட்கள் சேதப்படுத்தலாம். உங்கள் கணினி மூலம் மற்ற கணினிகளுக்கு வைரஸ்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது.
வைரஸ்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வேவுபொருள் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வேவுபொருள்(spyware) என்பது ஒரு வகைத் தீம்பொருள். இது பொதுவாக உங்களிடம் முறையாக அனுமதி பெறாமலே விளம்பரங்களைக் காண்பிக்கக்கூடும், உங்களைப் பற்றித் தகவல் சேகரிக்கக்கூடும், அல்லது உங்கள் கணினியில் அமைப்புகளை மாற்றக்கூடும். உதாரணமாக, வேவுபொருட்கள்(spyware) உங்கள் வலை உலாவியில் தேவையற்ற கருவிப்பட்டிகள், இணைப்புகள், அல்லது பிடித்தவையை நிறுவலாம், உங்கள் இயல்புநிலை முகப்புப் பக்கத்தை மாற்றலாம், அல்லது அடிக்கடி விழிதிரை விளம்பரங்களைக் காண்பிக்கலாம். சில வேவுபொருட்கள் நீங்கள் கண்டுபிடிக்கும் வகையில் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது; ஆனால் நீங்கள் பார்க்கும் வலைத்தளங்கள் அல்லது நீங்கள் தட்டச்சு செய்யும் உரை போன்ற முக்கியமான தகவல்களை அவை ரகசியமாகச் சேகரிக்கும். பெரும்பாலான வேவுபொருட்கள் நீங்கள் பதிவிறக்கும் இலவச (free downladed software) மூலம் நிறுவப்படுகின்றன, ஆனால் சில சமயங்களில் ஒரு வலைத்தளத்திற்குச் சென்றாலே வேவுபொருட்கள் நிறுவப்பட்டுவிடுகின்றன.

உங்கள் கணினியை வேவுபொருட்கள் தாக்காமல் இருக்க, வேவுபொருள் தடுப்பு நிரல் (anti spyware) ஒன்றைப் பயன்படுத்தவும். Windows -இன் vista பதிப்பில்  Windows Defender என்ற வேவுபொருள் தடுப்பு நிரல் ஒன்று உள்ளது. இது இயல்புநிலையாக  இயக்கப்படுகிறது. உங்கள் கணினியில் வேவுபொருட்கள் நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்போது Windows Defender உங்களை எச்சரிக்கிறது. அது உங்கள் கணினியில் வேவுபொருட்கள் உள்ளனவா என்று பார்த்து அகற்றவும் செய்யும்.
ஒவ்வொரு நாளும் புதிய வேவுபொருட்கள் தோன்றுவதால், மிகச் சமீபத்திய வேவுபொருள் அபாயங்களைக் கண்டுபிடிக்கவும் பாதுகாத்துக்கொள்ளவும் Windows Defender தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் Windows -ஐப் புதுப்பிக்கும்போதெல்லாம் தேவையெனில் Windows Defender -உம் புதுப்பிக்கப்படும். மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைப் பெற, Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்களை நிறுவும்படி அமைக்கவும் (கீழே பார்க்கவும்).
வேவுபொருள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், Windows Defender -ஐப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் பார்க்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக