திங்கள், 6 மே, 2013

படங்களை அச்சிடுதல் - Printing picture.

இந்தப் பகுதி, முக்கியமான மூன்று அச்சிடும் முறைகளை விளக்குகிறது. அச்சிடுதல் குறித்துப் பொதுவான தகவல்களை அறிய, அச்சிடுதலுக்கு அறிமுகம் என்பதைப் பார்க்கவும்.

  • வீட்டிலுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்துதல் - using a home printer

உங்கள் வீட்டில் அச்சுப்பொறி இருந்தால், உங்கள் புகைப்படங்களை நீங்களே அச்சிடலாம். இங்க்ஜெட் அச்சுப்பொறிகள், மை வெப்பமாற்ற அச்சுப்பொறிகள் ஆகிய இரண்டுமே உயர்தர வண்ணப் புகைப்படங்களை அச்சிடக்கூடியவை. இதற்குச் சிறப்புத் தாள் வகை ஒன்று தேவை. பல அச்சுப்பொறிகளில் நினைவக அட்டை படிப்பிகளும் சிறிய LCD திரைகளும் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தாமலே படங்களை அச்சிடலாம்.

உங்கள் கணினியிலிருந்து படங்களைப் பல விதங்களில் அச்சிடலாம். நீங்கள் ஒரு படத்தை அச்சிடலாம், ஒரே பக்கத்தில் பல படங்களை அச்சிடலாம், அல்லது தொடர்புத் தாள் (எளிதாகப் பார்த்து அறிய உதவும் சிறுஉருவப் பட அடுக்கு) ஒன்றை அச்சிடலாம்.
Windows நிழற்படத் தொகுப்பைப் பயன்படுத்திப் படங்களை அச்சிட, நீங்கள் அச்சிட விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும். கருவிப்பட்டியில் அச்சிடு என்பதை கிளிக் செய்யவும், பிறகு அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியில், அச்சிடும் விருப்பங்களைத் தேர்வு செய்து, அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் தகவலுக்கு, படங்களை அச்சிடுதல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.

படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியின் சாளரம்

  • அச்சுகளை ஆன்லைனில் வாங்குதல் - ordering print online

வீட்டிலுள்ள அச்சுப்பொறிகள் பயன்படுத்த வசதியானவை, துரிதமாக அச்சிட உதவுபவை. ஆனால் மையும் தாளும் வாங்குவதற்குச் செலவாகும் பணத்தையும் வேலையையும் மிச்சப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், ஒரு ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவையைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்கவும். இந்தச் சேவைகள் நீங்கள் உங்கள் படங்களை ஒரு வலைத்தளத்திற்குப் பதிவேற்றும் (நகலெடுக்கும்) சேவையை வழங்குகின்றன. அங்கிருந்து நீங்கள் பல்வேறு அளவுகளில் அச்சுகளுக்கு ஆர்டர் செய்து அவற்றுக்குக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தலாம். பிறகு அச்சுகள் உங்கள் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ அஞ்சல் செய்யப்படும்.

ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரு நன்மை என்னவென்றால், அவை பல வகையான தயாரிப்புகளை வழங்குகின்றன. வழக்கமான அச்சுகள் தவிர, உங்கள் விருப்பப்படி வடிவமைக்கப்பட்ட டி-ஷர்ட்கள், வாழ்த்து அட்டைகள், நாள்காட்டிகள், கோப்பைகள், சுவரொட்டிகள், சுட்டி அட்டைகள், மற்றும் பல தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம். இவை எல்லாவற்றிலும் நீங்கள் தேர்வு செய்த படங்கள் இருக்கும். அதோடு, வழக்கமாக இந்தத் தளங்கள் படப் பகிர்வுச் சேவைகளையும் வழங்குகின்றன (மேலே "படங்களைப் பகிர்தல்" என்பதைப் பார்க்கவும்).
Windows நிழற்படத் தொகுப்பு அல்லது படங்கள் கோப்புறையிலிருந்தும் நேரடியாக அச்சுகளை ஆர்டர் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, உங்கள் படங்களின் அச்சுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய என்பதைப் பார்க்கவும்.

  • ஒரு சிறு விற்பனையாளரிடமிருந்து அச்சுகளை வாங்குதல்-getting prints form a retailer

உங்களுக்கு விரைவாக அச்சுகள் வேண்டும், ஆனால் உங்களிடம் அச்சுப்பொறி இல்லை என்றால் டிஜிட்டல் புகைப்பட அச்சிடல் சேவைகளை வழங்கும் ஒரு கடைக்கு உங்கள் கேமராவின் நினைவக அட்டையை எடுத்துச் செல்லவும். கேமரா கடைகள், பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மட்டுமின்றி சில மளிகைக் கடைகளும் மருந்தகங்களும் கூட இந்தச் சேவைகளை அளிக்கின்றன. சில கடைகளில் உள்ள சுயசேவை புகைப்பட நிலையங்கள், நீங்கள் உங்கள் படங்களைச் சில நிமிடங்களில் திருத்தவும், நுனிவெட்டவும், அச்சிடவும் உதவுகின்றன.

உங்கள் படங்களை மறுபிரதி எடுத்தல் - backing up your pictures.

நீங்கள் டிஜிட்டல் கேமரா பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் மிகச் சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் படங்கள் சேர்ந்துவிடலாம். இந்தப் படங்களில் விலைமதிப்பற்ற நினைவுகள் இருக்கின்றன; உங்கள் கணினியின் நிலை வட்டு செயலிழந்துபோனால் அவை திரும்பக் கீடைக்காது. ஆகவே, உங்கள் படங்களின் நகல்களை வேறு எங்காவது சேமித்துவைப்பது முக்கியம். நீங்கள் அவற்றைப் பதிவுசெய்யத்தக்க DVDகளில் அல்லது CDகளில், அல்லது ஒரு வெளிப்புற நிலை வட்டில் நகலெடுத்து வைக்கலாம், அல்லது இணையத்தில் உள்ள கோப்பு சேமிப்பக சேவை ஒன்றைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக