திங்கள், 6 மே, 2013

மின்னஞ்சல் மற்றும் வலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில உதவிக்குறிப்புகள்.

•    மின்னஞ்சல் இணைப்புகளைத் திறக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மின்னஞ்சல் இணைப்புகள் (மின்னஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்படும் கோப்புகள்) வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம். உங்களுக்குத் தெரியாத ஒரு நபரிடமிருந்து வந்த இணைப்பை ஒருபோதும் திறக்க வேண்டாம். அனுப்புநரை உங்களுக்குத் தெரியும், ஆனால் அவரிடமிருந்து இணைப்பை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், அதைத் திறப்பதற்கு முன் அதை அவர்தான் அனுப்பினாரா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஒரு மின்னஞ்சல் செய்தியை எப்போது நம்பலாம்?, மின்னஞ்சல் வைரஸ்களைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.
•    உங்கள் தனிநபர் தகவலை கவனமாகப் பாதுகாக்கவும். ஒரு வலைத்தளம் உங்கள் கடன் அட்டை எண், வங்கி விவரங்கள், அல்லது பிற தனிநபர் தகவல்களைக் கேட்டால், உங்களுக்கு அந்த வலைத்தளத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதன் பரிமாற்ற அமைப்பு பாதுகாப்பானதுதானா என்று சரிபார்க்கவும். ஒரு வலைத்தளத்தை எப்போது நம்பலாம்? என்பதைப் பார்க்கவும்.
•    Internet Explorer -இல் உள்ள ஃபிஷிங் வடிகட்டியைப் பயன்படுத்தவும். ஃபிஷிங் என்பது மோசடி மின்னஞ்சல் செய்திகளை அல்லது வலைத்தளங்களை உருவாக்கி கணினிப் பயனர்களிடமிருந்து தனிநபர் தகவலை அல்லது நிதித் தகவலை தந்திரமாகப் பெறுதல். மோசடி மின்னஞ்சல் செய்தி அல்லது வலைத்தளம் ஒரு வங்கி, கடன் அட்டை நிறுவனம், அல்லது ஒரு பிரபல இணைய விற்பனையகம் என்பது போல நம்பகமான ஒரு மூலத்திலிருந்து வருவது போல் தெரியும். ஃபிஷிங் வடிகட்டி, ஃபிஷிங் வலைத்தளங்களைக் கண்டுபிடித்து உங்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கிறது. ஃபிஷிங் வடிகட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.
•    மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் மிகைஇணைப்புகளை கிளிக்செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மிகைஇணைப்புகள் (நீங்கள் கிளிக் செய்யும்போது வலைத்தளங்களைத் திறக்கும் இணைப்புகள்) பெருமளவில் ஃபிஷிங் மற்றும் வேவுபொருள் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை வைரஸ்களையும் பரப்பக்கூடும். நீங்கள் நம்பும் மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் இணைப்புகளை மட்டுமே கிளிக் செய்யவும்.
•    நீங்கள் நம்பும் வலைத்தளங்களிலிருந்து மட்டுமே துணைநிரல்களைநிறுவவும். ActiveX கட்டுப்பாடுகள் உள்பட வலை உலாவித் துணைநிரல்கள் கருவிப் பட்டிகள், பங்கு நிலவரம் காட்டும் நிரல்கள், வீடியோ, அசைவூட்டம் போன்றவற்றை வலைப்பக்கங்கள் காண்பிக்க வழிசெய்கின்றன. இருந்தாலும், துணைநிரல்கள் வேவுபொருட்களையும் பிற தீங்குதரும் மென்பொருட்களையும் கூட நிறுவக்கூடும். ஒரு வலைத்தளம் ஒரு துணைநிரலை நிறுவும்படி கேட்டால், நீங்கள் அதை நிறுவுவதற்கு முன் அதன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். நீங்கள் ActiveX கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டுமா?, Internet Explorer துணைநிரல்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக