திங்கள், 6 மே, 2013

கணினியில் உள்ள நிழற்படங்களை கையாலுதல்


கணினியில் நிழற்படங்களை கையாளுதல் மிகஎளிது. நாம் நம் கணினியில் உள்ள நிழற்பட தொகுப்புகளை கண்கானிக்கும் நிரலை தெளிவாக சிக்கள்கல் இல்லாமல் பயன்படுத்தும்போது நமது தரவுகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நாம் நினைக்கும் வண்னம் கணினியில் செயல்படும்.
  • ஒரு படத்தைச் சுழற்ற -  rotate a picture

நிழற்படத் தொகுப்பில் செங்குத்தான படங்கள் பக்கவாட்டாகத் திரும்பியது போல் தெரியலாம். இந்தப் படங்களை சரியான திசையில் வைக்க இடஞ்சுழியாகச் சுற்று (rotate left) என்ற பொத்தானை  அல்லது வலஞ்சுழியாகச் சுற்று (rotate right) பொத்தானை  கிளிக் செய்யவும்.
மேல் உள்ள படத்தில் நிழற்படம் சுழற்றப்பட்டுள்ளது,சிறுஉருவம் சுழற்றுவதற்கு முன்பும் (இடது) சுழற்றியதற்குப் பின்பும் (வலது)

  • ஒரு படத்தை முழு அளவில் பார்க்க - view a picture at a full size

நிழற்படத் தொகுப்பு சாளரத்தைப் (picture gallery window) நிரப்பும் அளவிற்கு (full size) ஒரு படத்தைப் பார்க்க, படத்தை இரு-கிளிக் செய்யவும். சாளரத்தின் வலப்பக்கத்தில் உள்ள தகவல் பலகம், படத்தைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும். இது படத்திற்குக் குறிக்குழுக்களைச் சேர்க்கவும் உதவும் (கீழே "படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்க" என்பதைப் பார்க்கவும்).

படத்தை முடிந்த அளவு பெரிதாகப் பார்க்க, நிழற்படத் தொகுப்பின் சாளரத்தைப் பெரிதாக்கவும். தகவல் பலகத்தை மூடுவதற்கு அதன் மேற்பக்க மூலையில் உள்ள மூடு பொத்தானை கிளிக் செய்யவும்.

படத்தில் ஒரு பகுதியை மட்டும் பெரிதாக்கிப் பார்க்க, பெரிதாக்கு பொத்தானை கிளிக் செய்து நகர்வுகோலை மேலே நகர்த்தவும். பெரிதாக்கியதும், கைவடிவக் குறிப்பானை  படத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இழுத்து படத்தை நகர்த்திப் பார்க்கலாம். சாதாரணக் காட்சிக்குத் திரும்ப, சாளரத்திற்குப் பொருத்து (fit to window) என்ற பொத்தானை  கிளிக் செய்யவும்.
முழு அளவுப் படம் (இடது); பெரிதாக்கப்பட்ட படம் (வலது)

சிறுஉருவங்கள் காட்சிக்குத் திரும்ப, படத்தொகுப்புக்குத் திரும்பு (back to gallery) என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்கள் படங்களின் ஸ்லைடு காட்சியைப் பார்க்க -  see a slide show of your picture

உங்கள் டிஜிட்டல் படங்களை, தானாக இயங்கும் ஒரு முழுத் திரை ஸ்லைடு காட்சியாகப் பார்க்கலாம். அசைவூட்டமும் பிற காட்சி விளைவுகளும் (animation and other visual effects) அடங்கிய பல விதமான ஸ்லைடு காட்சி கருப்பொருள்களிலிருந்தும் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் சில கருப்பொருள்கள் (themes) ஒரே சமயத்தில் பல படங்களைத் திரையில் காண்பிக்கும்; உதாரணம் கீழே.
ஒரு ஸ்லைடு காட்சியைத் தொடங்க, நீங்கள் விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு நிழற்படத் தொகுப்பின் அடிப்பக்கம் உள்ள ஸ்லைடு காட்சி பொத்தானை (slide show button) கிளிக் செய்யவும். நீங்கள் எந்தப் படத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், தற்போது தெரியும் எல்லாக் காட்சிகளையும் ஸ்லைடு காட்சி எடுத்துக்கொள்ளும்.
ஒரு ஸ்லைடு காட்சி நடந்துகொண்டிருக்கும்போது நீங்கள் அதை இடைநிறுத்தலாம், அதன் வேகத்தை மாற்றலாம், முன்னே அல்லது பின்னே செல்லலாம், படங்கள் தற்போக்கில் (random rang) காண்பிக்கப்பட வேண்டுமா தொடர்வரிசையில் (sequence range) காண்பிக்கப்பட வேண்டுமா என்றும் தேர்வு செய்யலாம். ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளைப் பார்க்க, சுட்டியைத் திரையின் அடிப்பகுதிக்குக் கொண்டுசெல்லவும். கட்டுப்பாடுகள் தெரியவில்லை என்றால், ஸ்லைடு காட்சி மீது வலது கிளிக் செய்யவும். இது ஒரு மெனுவைக் காட்டும்

ஒரு ஸ்லைடு காட்சியை முடிக்க, ESC விசையை அழுத்தவும் அல்லது ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளில் வெளியேறு என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்புகள்
•    ஸ்லைடு காட்சிக்கான கருப்பொருள்களைப் (themes) பார்க்க, Windows அனுபவ அடைவின் (windows experience index) வரைவியல் வகையில் (graphics category) குறைந்தது 3.0 வகை (version) ஆவது உங்கள் கணினியில் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, Windows அனுபவ அடைவு என்பது என்ன? என்பதைப் பார்க்கவும்
•    குறிப்பிட்ட சில கருப்பொருள்கள் Windows Vista Home Premium, Windows Vista Ultimate ஆகிய பதிப்புகளில் மட்டுமே உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக