கணினி முதலில் ஒரு பெரிய அரையில் வைக்கும் அலவுக்கு உருவாக்கப்பட்டு பிறகு காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நமது கைக்குள் அடங்கும் அலவுக்கு தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. பழைய காலத்து கணினிகள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும் அதன் செயல் திறன் மற்றும் நினைவாற்றலில் மிக மோசமாகவே இருந்தது. எனவே சாதறன மனிதனால் அதனை இயக்கமுடியாது. அதற்கு வள்ளுனர்கள் தேவைப்பட்டார்கள் ஏன்என்றால் அந்த பழைய கணினிகளிள் மென்பொருளின் ஆதிக்கம் பிரித்தியோகமாக இல்லை. மென்பொருள் வசதி குறைவாகவும் மென்பொருளை ஏற்றுக்கொள்ளாத எந்த கணினியும் சிறந்த கணினியாக இருக்கமுடியாது.
தற்காலத்து கணினிகள் சிரியதாகவும், அதிக நினைவாற்றல் கொண்டதாகவும் உள்ளதால், ஏறாளமான மென்பொருள்களை கையாலும் தன்மையுடைதாக உள்ளன. எனவே பயனர்களுக்காக உருவாகப்பட்ட மென்பொருள் கட்டமைப்புகளை கணினியில் நிருவி, பலத்துறைகளிள் அதன் பயன்களை அனுபவித்து வருகின்றனர். கணினி மென்பொருள்கள் சிரிய தானியங்கி கார்களில் இருந்து, வாகனங்களை கட்டுபடுத்தும் Traffic light controller, மின்சாரத்தை சேமிக்கும் inverters units, தொலைக்காட்சியின் setup box, மற்றும் தகவல் பறிமாற்றத்தை எளிது படுத்தும் கைபேசி என... எல்லா வற்றிலும் மென்பொருளின் ஆதிக்கம் உள்ளதால் மனிதனின் செயலிலும் மாற்றங்கள் பல கண்டுவிட்டான். மென்பொருளின் உதவியால் வங்கிகணக்குகளையும் மற்றும் பண பறிவர்தனைகளையும் ஒரே ஒரு கணினியின் உதவியால் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஒரே ஒரு மனிதரால் கையாலும் நிலைக்கு கணினி மற்றும் அது சார்ந்த தகவல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்ப்பட்ட அபரிவிதமான அறிவியல் வளர்ச்சி... பல பிரிவுகலாக உள்ள இந்த உலகத்தை மற்றும் அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் எல்லோரும் அறிந்துக்கொள்ளும் வகையிலும், எல்லோரும் அதனை மாற்றி அமைக்கும் வகையிலும் இணையத்தின் வாயிலாக எளிதாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஒரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறியமுடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறையகளிலும் பயன்படுகிறது.
கணினி என்பதன் பொருள்
பொதுவாக கணினி இயந்திரம் - வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). இதுதான் உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான். மேலும் விவரங்களுக்கு கணினி செயல்படும் தத்துவம், கணினி இயக்கமுறைமை என்ற பக்கங்களை பார்க்கவும்.
கணினியின் வரலாறு
1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்
கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார்.
மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.
இணையம்: இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.
கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்திப பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
